Just In
- 4 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 13 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
- 15 hrs ago
இந்த சத்து நிறைந்த உணவுகள தினமும் சாப்பிட்டீங்கனா...உங்க நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்!
- 15 hrs ago
கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி
Don't Miss
- News
சீனாவுக்கு எதிராக..அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸி. பிரதமர் அல்பானீசுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
- Sports
ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடும்போது என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் தெரியுமா?
உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறு யாரையாவது பார்க்கிறீர்களா? வேறொருவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறதா? நீங்கள் உங்கள் துணையிடம் இருந்து விலகுவதைக் காண்கிறீர்களா? நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டிருக்கும்போது அல்லது ஒருவருடன் உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஒருவரால் ஈர்க்கப்படலாம். இது உங்களுக்கு தவறானது இல்லை என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இது மிகவும் தவறானது. திருமணத்திற்கு புறம்பான உறவில் நீங்கள் வேறொருவருடன் இருப்பது உங்கள் உறவை சீர்குலைக்கும். கள்ள உறவில் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது ஒரு பயங்கரமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் துணையை ஏமாற்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் செய்யும் தேர்வுகளிலிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகளை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் ரகசிய விவகாரத்தை நீங்கள் தொடர வேண்டுமா அல்லது உங்கள் துணையுடன் உண்மையாக இருக்க வேண்டுமா, அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால், உங்கள் துணையை ஏமாற்றுவது ஏன் மோசமான யோசனையாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை படியுங்கள்.

உங்கள் துணையின் நம்பிக்கையை இழப்பீர்கள்
உங்கள் துணையின் பின்னால் வேறொருவரை நீங்கள் பார்க்கத் தொடங்கும் தருணத்தில், உங்கள் துணையின் நம்பிக்கையை இழக்க நேரிடும். உங்களின் ரகசிய விவகாரம் உங்கள் பங்குதாரருக்குத் தெரிந்த நாள், அவர் அல்லது அவள் உங்களை நம்புவதை நிறுத்திவிடுவார்கள். ஒரு உறவுக்கு மிக முக்கியம் நம்பிக்கை. அவை உறவில் உடையும்போது, அந்த உறவு சிதைய தொடங்கும். உங்கள் துணை உங்களை ஒரு நேர்மையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற நபராக கருதுவார். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் துணையால் முன்பு போல் உங்களை நம்ப முடியாமல் போகலாம்.

உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது
உங்கள் துணையை ஏமாற்றுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உங்கள் திருமணம் அல்லது உறவில் சில சிக்கல்கள் காரணமாக உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்பதை நீங்களே நினைவுபடுத்தலாம். ஆனால் உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றும் தருணத்தில், நீங்கள் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருந்து விலகிவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். அவற்றை எதிர்கொண்டு தீர்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் வேறொருவருடன் இருக்கும் பாதையைத் தேர்வு செய்கிறீர்கள். உதாரணமாக, இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம், ஆனால் இது உங்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கலாம்.

நீங்கள் உங்கள் குழந்தைகளை காயப்படுத்துவீர்கள்
உங்கள் ரகசிய விவகாரத்தை உங்கள் குழந்தைகள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் அதைப் பற்றி அறிந்தால் மிகவும் பாதிக்கப்படலாம். பெற்றோரில் ஒருவர் வேறொருவருடன் காதல் வயப்பட்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அவர்கள் இதை ஒரு துரோகமாக பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளும் உணர்ச்சி மற்றும் சமூக வீழ்ச்சிக்கு ஆளாகலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் துணைக்கு அவமரியாதை காட்டுகிறது
உங்கள் துணையை ஏமாற்றுவது அவர்களை அவமரியாதை செய்வதற்கான மற்றொரு வழியாகும். உங்கள் ஏமாற்று எபிசோட் சீன்கள் உங்கள் பங்குதாரரின் உணர்வுகளை நீங்கள் இனி மதிக்க மாட்டீர்கள் மற்றும் அவர்களின் அன்பை மதிக்க மாட்டீர்கள் என்று உணர வைக்கும். கள்ள உறவு உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை உடைக்கக்கூடும். மேலும் உங்களுடன் எந்த உறவையும் வைத்திருப்பதை உங்கள் பங்குதாரர் கருத்தில் கொள்ளாமல் போகலாம்.

மற்ற உறவுகளையும் பாதிக்கலாம்
உங்கள் துணையின் நம்பிக்கையை இழப்பது மட்டுமல்ல. உங்கள் துணையை ஏமாற்றும்போது நீங்கள் பிடிபட்டால், அது உங்களை சுற்றியிருக்கும் மற்ற உறவுகளையும் இழக்க நேரிடும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களையும் உங்கள் கருத்துக்களையும் மதிப்பதை நிறுத்தலாம். உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க முடியாத ஒரு நபராக அவர்கள் உங்களைக் கருதலாம். உண்மையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நல்ல புரிதலோடு பெயரோடு இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.

நீங்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க மாட்டீர்கள்
உங்கள் துணையை ஏமாற்றுவது உங்களுக்கு மோசமானதாக இருப்பதற்கான மற்ற காரணங்களில் ஒன்று. நீங்கள் இனி ஒன்றாக இருக்க மாட்டீர்கள் என்பதுதான். உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றத் தொடங்கும் நாளில், நீங்கள் அவரிடமிருந்து அல்லது அவளிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் வேறொருவரின் நுழைவு உங்கள் துணையுடனான உங்கள் பிணைப்பை தானாகவே அழித்துவிடும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களால் ஒரு இணைப்பை ஏற்படுத்த முடியாது.

இறுதி குறிப்பு
உங்கள் துணையை ஏமாற்றுவதற்கு உங்களைத் தூண்டுவது எதுவாக இருந்தாலும், ஒரு உறவு முறிந்தால், அதை ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மதிப்புமிக்க சிலரை நீங்கள் இழக்க நேரிடலாம். வேறொருவரில் ஆறுதல் காண்பதற்குப் பதிலாக, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய முயற்சி செய்யலாம். இந்த வழியில் நீங்கள் உங்கள் உறவை/திருமணத்தை காப்பாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழலாம்.