For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலரிடம் இந்த கேள்விகளை தெரியாமல் கூட கேட்டுடாதீங்க... அப்புறம் உங்க லவ் அவ்வளவுதான்...!

தங்களுக்கு ஒத்துவராத காதலர்களை பிரிவதும் மீண்டும் ஒரு உறவில் இணைவதும் சகஜமானதுதான். நீங்கள் அப்படிப்பட்ட ஒருவரை காதலிக்கும்போது சில விஷயங்கைளை கண்டிப்பாக செய்யக்கூடாது.

|

தங்களுக்கு ஒத்துவராத காதலர்களை பிரிவதும் மீண்டும் ஒரு உறவில் இணைவதும் சகஜமானதுதான். நீங்கள் அப்படிப்பட்ட ஒருவரை காதலிக்கும்போது சில விஷயங்கைளை கண்டிப்பாக செய்யக்கூடாது. நீங்கள் காதலிப்பவர்கள் இதற்கு முன்னாள் காதலித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்குள் இயற்கையாகவே ஆர்வம் இருக்கும்.

Questions Should Never Ask Your Partner About Their Ex

அவர்கள் ஏன் காதலிக்கத் தொடங்கினார்கள், எப்படி பிரிந்தார்கள் என்பதை என்பதையும் அறிய நீங்கள் இயல்பாகவே ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் இது மிகவும் சென்சிட்டிவான விஷயம், எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது உணர்வுகளில் கவனமாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உறவில் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் நீங்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க உங்கள் காதலரிடம் அவர்கள் முன்னாள் காதல் பற்றி கேட்கக்கூடாத கேள்விகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் வாழ்க்கை

பாலியல் வாழ்க்கை

அவர்கள் முன்னாள் காதலருடன் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒருபோதும் கேட்கக்கூடாது, இது உங்கள் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும். இதை கேட்பது மட்டுமல்ல இதற்கு பதில் சொல்வது உங்கள் துணைக்கும் சித்திரவதை அளிக்கும் ஒன்றாகும். அதனை தற்போதைய வாழ்க்கையோடு ஒப்பிடுவது அருவருப்பானது மற்றும் பேரழிவைத் தரும்.

என்னை விட அவன்/அவளை அதிகம் காதலித்தாயா?

என்னை விட அவன்/அவளை அதிகம் காதலித்தாயா?

இது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் நியாயமற்ற கேள்வி. முதலில் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதே தவறு, பிறகு மற்றவரிடம் இதுபோன்ற கேள்வியைக் கேட்பது முற்றிலும் தவறாகும். நீங்கள் உங்களை நம்ப வேண்டும். உங்கள் காதலர் உங்களை மேலும் காதலிக்க என்ன செய்ய வேண்டுமென்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இந்த கேள்வி கேட்பதன் மூலம் நீங்கள் உங்கள் கூட்டாளரை ஒரு மோசமான இடத்தில் வைக்கிறீர்கள். இது பாதுகாப்பின்மை தவிர வேறொன்றுமில்லை மற்றும் விஷயங்களை மோசமாக்கும்.

குடும்பம்

குடும்பம்

அந்த நபர் ஒரு காரணத்திற்காகத்தான் அவரது முன்னாள் காதலராக மாறியுள்ளார். அவருடைய/அவள் குடும்பத்தினருக்கு உங்கள் காதலரை பிடித்திருந்ததா, இல்லையா என்பதை நீங்கள் ஏன் அறிய விரும்புகிறீர்கள். அந்த கடந்த காலத்திற்கும் உங்கள் தற்போதைய உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது உங்களை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளுவதோடு, நீங்கள் அதிக போட்டித்தன்மையுள்ளவர்களாக மாறலாம்.

அவர்களின் பெயர்

அவர்களின் பெயர்

சமூக ஊடக உலகில், நாம் கேட்கும் மற்றும் நமது ஆர்வத்தைத் தூண்டும் எவரையும் நாம் தேட முடியும். அதைவிட்டுவிட்டு உங்கள் காதலரின் எக்ஸ் பெயரை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். அதற்கு பதிலாக உங்கள் காதலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

அவர்களின் சிறந்த குணம்

அவர்களின் சிறந்த குணம்

ஒவ்வொரு நபருக்கும் ஒரு நல்ல குணமும் கெட்ட குணமும் உண்டு. உங்கள் காதலரின் முன்னாள் கூட்டாளியின் சிறந்த அம்சம் அல்லது குணாதிசயத்தை கூறும்படி உங்கள் துணையிடம் கேட்பது, குறிப்பாக நீங்கள் அந்த பிரிவில் எதிர்மறையாக இருந்தால், அது உங்கள் உற்சாகத்தை குறைக்கலாம். உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்றால் மட்டும் கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Questions Should Never Ask Your Partner About Their Ex

Here is the list of questions should never ask your partner about their ex.
Story first published: Saturday, September 18, 2021, 16:43 [IST]
Desktop Bottom Promotion