Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பெண்கள் ஆண்களைப் பற்றிய இந்த மோசமான ரகசியங்களை எப்பவும் தெரிஞ்சிக்க முடியாதாம்... இப்பயாவது தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக ஆண்கள் உறவுகளில் வெளிபடித்தன்மையுடன் இருந்தாலும், தங்களின் சில அந்தரங்க தனிப்பட்ட ரகசியங்களை எப்போதும் தங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
பெண்கள் எந்த அளவிற்கு தங்களின் ரகசியங்களை பாதுகாக்கிறார்களோ ஆண்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல. பொதுவாக ஆண்கள் உறவுகளில் வெளிபடித்தன்மையுடன் இருந்தாலும், தங்களின் சில அந்தரங்க தனிப்பட்ட ரகசியங்களை எப்போதும் தங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். சில விஷயங்களில் மர்மமாக இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.

தங்களின் துணை தங்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளை ஆண்கள் மனதிற்குள் ரசிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த ரகசியங்களை பெண்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. இந்த பதிவில் ஆண்கள் வேண்டுமென்றே மறைக்கும் அந்த ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பாலியல் ஆர்வம்
ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் எப்போதும் குறையாது. பல புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். தொடர்ந்து ஒரே முறையில் உறவு கொள்வது அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.ஆனாலும் தங்களின் சலிப்பையும், ஆர்வத்தையும் தங்கள் துணையிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்.

ரொமான்ஸ் குறைவு
ஒரு பெண்ணின் மீது ஆர்வம் குறையும் போது ஆண்கள் ரொமான்டிக்காக இருப்பதை நிறுத்திவிடுவார்கள். சில சிறிய பிரச்சினைகளுக்காக உங்கள் கணவருடன் நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களை விட்டு அவர்கள் பிரிந்து செல்லும் நாள் நெருங்கி கொண்ட இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் கணவர் ஏன் உங்கள் மீது முன்பு போல காதலுடன் இல்லை என்றால் அதற்கு இதுதான் பதில்.

ஹீட்டர்களாக உபயோகிப்பது
உங்கள் குளிர்ந்த கைகளையும் கால்களையும் அவர்கள் மீது வைத்து உங்களை சூடேற்றுவது ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். நீங்கள் அவர்களை உங்கள் தனிப்பட்ட ஹீட்டர்களாக பயன்படுத்தும் போது அவர்கள் அதனை வெறுக்கிறார்கள்.

பொய் சொல்வது
ஆண்களுக்கு உண்மையில் எதையாவது பெற விரும்பும் போது பொய் சொல்வதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அவர்கள் ஒருவரைப் பிரியப்படுத்த ஆர்வமாக இருந்தால், அவர்கள் உங்களைப் பற்றி எல்லா வகையான நல்ல விஷயங்களையும் சொல்லத் தொடங்குவார்கள். ஆனால் அவர்கள் சொல்வது பொய் என்று உங்களால் கண்டறிய முடியாது.

எதிர்பார்ப்புகளால் திணறடிப்பது
உங்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் அவர்கள் மீது திணிக்கும்போது ஆண்கள் அதை வெறுக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் சமாளிக்க ஏற்கனவே நிறைய பிரச்சினை இருக்கிறது. இந்த சூழலில் எப்போதும் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்துவது, அவர்களை மெதுவாக உங்களிடமிருந்து விலகிச் செல்ல வைக்கும்.

மற்றவர்கள் மீதான ஈர்ப்பு
ஆண்கள் சில சமயங்களில் தங்கள் துணையின் சகோதரி அல்லது நெருங்கிய தோழியின் மீது ஈர்ப்புக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் அதை தங்கள் மனைவியிடம் நேரடியாக சொல்லத் துணிய மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதனால் அவமானத்தையும், கோபத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.



Click it and Unblock the Notifications