For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்முறையா நீங்க லிவ்விங் டுகெதரில் இருக்கீங்களா? அப்ப' இத' நீங்க எப்படி சமாளிக்கணும் தெரியுமா?

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும் பட்டாம்பூச்சியை பறக்கவிடுங்கள். உங்கள் உறவில் உற்சாகத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். உங்கள் துணையுடன் ஒன்றாக வாழ்வது ஒரு கனவான விவகாரமாக இருக்கலாம்.

|

இன்றைய காலகட்டத்தில் லிவ்விங் டுகெதர் உறவு என்பது இளம் தம்பதிகளுக்கு அன்னிய கருத்தாக இருக்காது. இன்று பல தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள். லிவிங் டூ கெதர் உறவை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதிகமான தம்பதிகள் இந்த உறவுகளில் இருக்கவும் விரும்புகிறார்கள். உங்கள் லவ்வருடன் ஒன்றாக வாழ்வது நீண்ட கால கற்பனையாக இருக்கலாம். இது இறுதியாக நனவாகும். ஆனால், திருமணத்திற்கு முன்பு நீங்கள் லிவ்விங் டுகெதர் உறவில் ஒன்றாக இணைந்து இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒருபோதும் இரவில் ஒருவரையொருவர் பிரிந்திருக்க வேண்டாம்.

How To Deal With First Time Live-In Relationship Anxieties in tamil

உங்களுக்கு பிடித்த உணவுகளை எப்போதும் படுக்கையில் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளலாம், ஒன்றாக இணைந்து திரைப்படம் பார்க்கலாம். இந்த உறவில் உங்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும், முதல் முறையாக லிவ்விங் உறவில் இருப்பது என்பது உங்களுக்கு சில கேள்விகளையும் கவலையையும் ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவருடன் வீட்டு இடத்தைப் பகிர்வது ஒரு புதிய உணர்வாக இருக்கும். எனவே, நீங்கள் முதல்முறையாக உங்கள் கூட்டாளருடன் லிவ்விங் டுகெதரில் இருக்கிறீர்கள் என்றால் கவலைகளைச் சமாளிப்பதற்கான சில வழிகளை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்வுகளை தெரியப்படுத்துங்கள்

உணர்வுகளை தெரியப்படுத்துங்கள்

லிவ்விங் டுகெதர் உறவை சமாளிப்பதற்கான சிறந்த மற்றும் முக்கிய வழி உங்கள் உணர்வுகளை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துவதாகும். இருவரும் ஒன்றாக இணைந்து செல்வதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை உங்கள் துணையிடம் சொல்லாமல் இருக்க வேண்டாம். நீங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை, ஆனால் அந்த உணர்வுகளை உணர்கிறீர்கள் என்பதையும் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

சில அடிப்படை விதிகளை அமைக்கவும்

சில அடிப்படை விதிகளை அமைக்கவும்

நீங்களும் உங்கள் துணையும் இணைந்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றி திட்டமிட வேண்டும். வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை சமமாகப் பிரிப்பது, மளிகைப் பொருட்களைப் வாங்க செல்வது அல்லது சில அடிப்படை வீட்டு வேலைகளை செய்வது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதை உங்கள் கூட்டாளருடன் விவாதிக்க தயங்க வேண்டாம். எந்தவொரு தேவையற்ற தொந்தரவும் இல்லாமல், உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க சில அடிப்படை விதிகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான எல்லைகள்

ஆரோக்கியமான எல்லைகள்

ஒன்றாக வாழும்போது ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்காதது குறித்து தேவையான சில எல்லைகளை அமைக்கவும். நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும், உங்கள் தனித்துவத்தை இழக்காதது முக்கியம். உங்களுடைய தனிப்பட்ட நேரத்தை நீங்கள் தாராளமாக செலவிடலாம். இருவருக்கும் அவர்களுடைய தனிமையின் தேவையை புரிந்துகொண்டு, அவர்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும்.

உற்சாகங்களை இழக்காதீர்கள்

உற்சாகங்களை இழக்காதீர்கள்

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும் பட்டாம்பூச்சியை பறக்கவிடுங்கள். உங்கள் உறவில் உற்சாகத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். உங்கள் துணையுடன் ஒன்றாக வாழ்வது ஒரு கனவான விவகாரமாக இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி செய்து வேலைக்குத் தயாராகி வருவது வழக்கமாக இருப்பதை விட மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் தோன்றும். நீங்கள் இந்த உறவில் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதுகுறித்து உங்கள் துணையுடன் பேசுவது சிறந்த வழியாகும்.

லிவ்விங் டுகெதர் உறவுகள் உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம்

லிவ்விங் டுகெதர் உறவுகள் உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம்

லிவ்விங் டுகெதர் கருத்து இந்தியாவில் இன்னும் பிரபலமாக இல்லை என்றாலும், பெரும்பாலான தம்பதிகள் இந்த உறவில் ஒன்றாக வாழ்வதற்கான யோசனையைத் தழுவி வருகின்றனர். லிவ்விங் டுகெதர் சாத்தியமானால், அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோக்கைக் இந்த உறவு கொடுக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Deal With First Time Live-In Relationship Anxieties in tamil

Here we are talking about the food and lifestyle hacks to manage PCOS.
Story first published: Tuesday, April 27, 2021, 13:01 [IST]
Desktop Bottom Promotion