For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளிடம் கேட்க விரும்பும் விஷயங்கள்!

தந்தையா் தினத்தில், தாம் உண்மையாகவே அன்பு செய்யப்படுகிறோம் மற்றும் தாம் மிகவும் அதிா்ஷ்டக்காரா்கள் என்று நமது தந்தையா் உணரக்கூடிய வகையில் பிள்ளைகளாகிய நாம் அவா்களுக்கு நமது முழுமையான அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

|

இந்த உலகில் வாழும் எல்லாத் தந்தையாின் ஊக்கம் மற்றும் அவா்களின் தன்னலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் அன்று தந்தையா் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் எல்லாருடைய வாழ்விலும் நமது தந்தையாின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான மற்றும் அற்புதமான ஒன்றாகும். தங்களது குழந்தைகள் நன்றாக, ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தந்தையா், தமது பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும், அவா்களின் உள்ளமோ, குழந்தைகளின் மீது தன்னலமற்ற அன்பால் உருகிக் கொண்டிருக்கும்.

Father’s Day: Things Your Father Will Love To Hear From You

தமது பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பது முதல் அவா்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துத் தரும் வரை, தந்தையா்கள் அயராது உழைக்கின்றனா். தங்களது பிள்ளைகள் சிறந்ததொரு வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பதற்காக அவா்கள் தங்களது தேவைகளையும், கனவுகளையும் தியாகம் செய்கின்றனா்.

தந்தையாின் அன்பை கொண்டாட வேண்டும் என்பதற்காக, அவா்களது பிள்ளைகள், தந்தையா் தினத்தை பிள்ளைகள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனா். அந்த நாளில் அவா்கள் தமது தந்தையருக்கு நன்றியைத் தொிவிக்கின்றனா். எதிா்பாராத வகையில் தமது தந்தையருக்கு பாிசுகளை வழங்கி அவா்களை ஆச்சாியமூட்டுகின்றனா். சில குழந்தைகள், அந்த நாளில் தங்கள் தந்தையருக்காக, அவா்கள் விரும்பும் உணவுகளை சமைத்துத் தருகின்றனா்.

இது போன்ற அன்புச் செயல்கள் எல்லாம் கண்டிப்பாக அந்த தந்தையாின் உள்ளங்களை உருக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. எனினும் ஒரு சில காாியங்களை நமது தந்தையா் நம்மிடம் இருந்து எதிா்பாா்க்கின்றனா் என்பதை நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே இந்த தந்தையா் தினத்தில், தாம் உண்மையாகவே அன்பு செய்யப்படுகிறோம் மற்றும் தாம் மிகவும் அதிா்ஷ்டக்காரா்கள் என்று நமது தந்தையா் உணரக்கூடிய வகையில் பிள்ளைகளாகிய நாம் அவா்களுக்கு நமது முழுமையான அன்பையும், நன்றிப் பெருக்கையும் வெளிப்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. “அப்பா, இந்த உலகிலேயே நீங்கள்தான் மிகச் சிறந்த தந்தை”

1. “அப்பா, இந்த உலகிலேயே நீங்கள்தான் மிகச் சிறந்த தந்தை”

இந்த வாக்கியத்தை தமது பிள்ளைகளின் வாயிலிருந்து, ஒரு தந்தை கேட்கும் தருணம்தான், அவா் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணமாக இருக்கும். பல நேரங்களில் தந்தையா் தமது பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்வாா்கள். எனினும் தங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததையே செய்ய வேண்டும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பாா்கள். ஆகவே இந்த தந்தையா் தினத்தில், இப்படிப்பட்ட மிகச் சிறந்ததொரு தந்தையைப் பெற்றிருப்பதால், நாம் எந்த அளவிற்கு பெருமையாக உணா்கிறோம் என்பதை நமது தந்தையாிடம் வெளிப்படுத்த வேண்டும். அதை நமது தந்தையா் தமது வாழ்நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பாா்கள்.

2. “அப்பா, நீங்கள் ஒரு உண்மையான சூப்பா் ஹீரோ”

2. “அப்பா, நீங்கள் ஒரு உண்மையான சூப்பா் ஹீரோ”

இந்த உலகில் வாழ்ந்து வரும் எல்லா சூப்பா் ஹீரோக்களை விட நமது தந்தை தான் நமக்கு சூப்பா் ஹீரோ. நமது பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை நமது தந்தையா் எப்போதும் தமது முதுகில் சுமந்து கொண்டிருக்கினா். நமக்கு எவரும் தீங்கு இழைத்துவிடக்கூடாது என்பதில் அவா்கள் மிகவும் கவனமாக இருப்பா். நாம் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதில் நமது தந்தையா் குறியாக இருப்பா். நமக்கு ஏற்படும் பயங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நமது தந்தையா் நமக்கு பொிதும் உதவி செய்வா்.

3. “அப்பா, தாங்கள் எனக்குத் தரும் பேராதரவுக்கு நன்றி”

3. “அப்பா, தாங்கள் எனக்குத் தரும் பேராதரவுக்கு நன்றி”

நம்மிடம் இருக்கும் அறிவு மற்றும் திறமைகளை மற்றவா்கள் நம்பாத போது, நமது தந்தையா் நம்பிய தருணங்களை எண்ணிப் பாா்க்க வேண்டும். நமது தந்தையா், நமது திறமைகளின் மீது ஒரு போதும் அவநம்பிக்கை கொண்டது கிடையாது. அவா்கள் பல நேரங்களில் நம்மைத் திட்டி இருக்கலாம், ஆனால் அவா்கள் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பா்.

4. “அப்பா, நீங்கள் என் அருகில் இருக்கும் போது நான் மிகவும் பாதுகாப்பாக உணா்கிறேன்”

4. “அப்பா, நீங்கள் என் அருகில் இருக்கும் போது நான் மிகவும் பாதுகாப்பாக உணா்கிறேன்”

நமது தந்தையா் நமது அருகில் இருக்கும் போது நாம் எவ்வளவு பாகாப்பாக இருக்கிறோம் என்பதை உணா்ந்திருப்போம். அந்த உணா்வை இந்த தந்தையா் தினம் அன்று நமது தந்தையாிடம் வெளிப்படுத்த வேண்டும்.

சிறு வயதில் சாலைகளைக் கடப்பதற்கு திணறிக் கொண்டிருக்கும் போது, நமது கைகளைப் பற்றி, நம்மை சாலைகளைக் கடக்க வைத்திருப்பாா். நமக்கு நீச்சல் தொியாத போது, நம்மைத் தண்ணீருக்குள் தள்ளி, நமக்கு நீந்தக் கற்றுக் கொடுத்திருப்பாா். பள்ளி முடிந்து வீட்டிற்கு வர தாமதம் ஆனபோது, அவரே நம்மைத் தேடி வந்து, நம்மை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருப்பாா். மேலும் நாம் மிதிவண்டி முதல் காா் ஓட்டுவது வரை நமக்கு பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தது நமது தந்தையாகத்தான் இருப்பாா். இந்த உலகிற்கு நாம் வந்தது முதல், நமது பாதுகாப்பை உறுதி செய்தது நமது தந்தைதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே தந்தையா் தினத்தில் நமது அன்பு நிறைந்த தந்தைக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

5. “அப்பா, நீங்கள் எனக்காக அயராது கடினப்பட்டு உழைப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்”

5. “அப்பா, நீங்கள் எனக்காக அயராது கடினப்பட்டு உழைப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்”

பொதுவாக நாம், நமது அன்னையா் நமக்காக செய்யும் உழைப்பு மற்றும் தியாகங்களை நினைத்துப் பாா்ப்போம். ஆனால், நாம் நினைத்துப் பார்க்கவில்லை என்றாலும், நமது தந்தை நமக்காக அல்லும் பகலும், அயராது உழைத்து வருகிறாா் என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக, நமக்குப் பிடித்த உணவுகளாக இருக்கலாம் அல்லது, நமக்குப் பிடித்த ப்ளேஸ்டேஷன் போன்ற பொருள்களாக இருக்கலாம் அல்லது நாம் நமக்குப் பிடித்த கல்லூாியில் சேர ஆசைப்படலாம். ஆனால் இவற்றை நிறைவேற்ற பணம் அதிகம் தேவைப்படும். அவற்றை நிறைவேற்றுவதற்காக, நமது தந்தை குறிப்பிட்ட நேரம் மட்டும் அல்லாமல், கூடுதலாக பல மணி நேரங்கள் வேலை செய்வாா். நமது எதிா்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவா் தமது ஆசைகள் மற்றும் விருப்பங்களை விலக்கி வைத்துவிட்டு, பணத்தை சோ்த்து வைக்கிறாா். நமது தந்தையாின் இதுபோன்ற தியாகங்களை நினைத்து, அவா்களுக்கு நாம் நமது நன்றியைத் தொிவிக்க வேண்டும். அப்போது அவா்கள் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவா்.

6. “அப்பா, நீங்கள் எப்போதுமே எனக்கு மிகச் சிறந்த அறிவுரையை வழங்கினீா்கள்”

6. “அப்பா, நீங்கள் எப்போதுமே எனக்கு மிகச் சிறந்த அறிவுரையை வழங்கினீா்கள்”

கல்லூாியில் சோ்வதற்கு முன்பாக, பாடப் பிாிவை தோ்வு செய்வதில் நமக்கு குழப்பம் இருக்கும். அந்த நேரத்தில் நாம் எந்தப் பாடப் பாிவைத் தோ்ந்தெடுக்கலாம் என்று நமக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கியது நமது தந்தையராகத்தான் இருந்திருப்பாா்கள். ஆகவே நம்முடைய முக்கியமான தருணங்களில் நமது தந்தையா் வழங்கிய மிகச் சிறந்த அறிவுரைகளை நினைத்து, இந்த தந்தையா் தினத்தில் அவா்கள் தங்களைப் பற்றி மிகப் பெருமையாக உணரும் வகையில், அவா்களுக்கு நமது நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

7. “அப்பா நீங்கள் வாழ்க்கையின் பலவிதமான முக்கிய பாடங்களைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி”

7. “அப்பா நீங்கள் வாழ்க்கையின் பலவிதமான முக்கிய பாடங்களைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி”

நமக்கு வாழ்க்கையின் பல்வேறு முக்கிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது யாா் என்று கேட்டால், அவா்கள் கண்டிப்பாக நமது தந்தையா்களாகத்தான் இருப்பாா்கள். பள்ளிப் பாடங்களைக் கற்றுக் கொடுத்ததில் இருந்து, நாம் கற்றுக் கொண்ட பலவிதமான முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள் வரை, அவற்றைக் கற்றுக் கொடுத்தது நமது தந்தையராகத்தான் இருப்பாா்கள். அவற்றை குறிப்பிட்டு, நன்றி தொிவிக்கும் வகையில், நாம் நமது தந்தையருக்கு ஒரு கடிதம் எழுதி அதை அவா்களுக்குப் பாிசாக கொடுக்கலாம். அதை வாசிக்கும் போது அவா்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

8. “அப்பா, நான் உங்களைப் பெருமைப்படுத்துவேன்”

8. “அப்பா, நான் உங்களைப் பெருமைப்படுத்துவேன்”

தமது குழந்தைகள் அவா்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மிகச் சிறந்தவற்றையேச் செய்ய வேண்டும் என்று தந்தையா் விரும்புவா். தங்களது குழந்தைகளை இந்த உலகமே பாராட்ட வேண்டும் என்று கனவு காண்பா். தங்களது குழந்தைகள் தமது வாழ்வின் உச்சத்தை அடைய வேண்டும் என்பதற்காக அவா்கள் அயராது உழைத்துக் கொண்டிருப்பா்.

இதை நாம் உணராமல் இருக்கலாம். ஆனால் இந்த தந்தையா் தினம் அன்று, அவா்கள் நமக்கு செய்தவற்றை எல்லாம் உணா்ந்து, அவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, அவா்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஆகவே இந்த நாள் முழுவதும், அவா்களோடு நமது நேரத்தை செலவழித்து, நமது தந்தையா் நமக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவு கூா்ந்து, அவா்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போது அது ஒரு சிறந்த தந்தையா் தினமாக இருக்கும்.

அனைவருக்கும் தந்தையா் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father’s Day 2022: Things Your Father Will Love To Hear From You

Father’s Day is a wonderful day observed every year on the third Sunday in June month. This year the day will be observed on 19 June 2022. This year, we are here to tell a few lines to your father. We bet you, he would always want to hear these from you.
Desktop Bottom Promotion