For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Father's Day 2022: தந்தை-மகள் உறவு ஏன் சிறப்பான ஒன்று? இதோ சில காரணங்கள்!

ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் உள்ள உறவு ஏன் சிறப்பு வாய்ந்தது என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

|

உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் பெரும்பான்மையான பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் உள்ள உறவு ஏன் சிறப்பு வாய்ந்தது என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

Fathers Day: Reasons To Prove Why A Father-Daughter Relationship Is The Most Special

ஒரு பெண்ணின் பிற்கால வாழ்க்கை தரத்தை அவளது தந்தை அவளை, குழந்தை பருவத்தில் இருந்து இளமை பருவம் எய்தும் வரை மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ நிறைய விஷயங்களை கற்று தருவதன் மூலம் மேம்படுத்துகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகள்களின் கல்வி மற்றும் முன்னேற்றம்

மகள்களின் கல்வி மற்றும் முன்னேற்றம்

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் நடந்த ஆய்வு ஒன்றின் முடிவில், சிறந்த தந்தை மற்றும் மகளின் உறவு, பெண் குழந்தைகளின் கல்வி திறனை பெருமளவில் ஊக்குவிப்பதாக கூறுகிறது. இதை நிரூபிக்க நாம் வெளி நாடுகளுக்கு கூட செல்ல தேவையில்லை, நமது ஊரையே எடுத்து கொள்ளுங்கள். என் மகள் ஒரு மருத்துவர், பொறியாளர், நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லவே பெரும்பான்மையான தந்தைகள் தற்பொழுது விரும்புகிறார்கள். இதனை பார்க்கும், கேட்கும் பெண் குழந்தைகள் மேலும் உற்சாகம் அடைந்து தங்களது முழு திறனை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களின் கல்வி திறன் வெகுவாக அதிகரிக்கிறது. சென்ற ஆண்டுகளில் நடந்த தேர்வு முடிவுகளின், தேர்ச்சி சதவிகிதத்தில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட அதிக தேர்ச்சி பெற்று இருப்பதை நாம் எல்லாரும் கவனித்து இருக்கலாம். தந்தை மகள்களின் உறவின் தாக்கம் கல்வியில் இருப்பதற்கு இது மிக சிறந்த உதாரணம்.

மகளின் சுயமரியாதை

மகளின் சுயமரியாதை

தன்னுடைய மகளையும், மகளின் தாயையும் ஒரு ஆண், எவ்வாறு நடத்துகிறானோ, அதன்படியே அவர்களின் அந்த குழந்தையும் வளர்கிறது. ஒரு சிறந்த தந்தை தன்னுடைய மகளை என்றும் எந்த ஒரு இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை. உலகத்தின் பெரும்பாலான தந்தைகள் தங்களின் மகன்களை விட மகள்களை அதிகம் நேசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்றும் கூட நம்முடைய பெரும்பான்மையான வீடுகளில் தந்தை தன் மகளை சமையல் செய்ய கூட அனுமதிப்பதில்லை. இது சில பழமைவாதிகளுக்கு தவறாக தெரியலாம், அனால் இன்று தந்தை மகள் உறவு ஒரு ஆரோக்கியமான வடிவில் நல்ல முறையில் முன்னேறி இருக்கிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். ஒரு பெண் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை இந்த சமூகத்திற்கு காட்டுவது ஒரு சிறந்த தந்தை மட்டுமே.

போராட்ட குணம்

போராட்ட குணம்

ஆண்கள் இயற்கையிலே சற்று கடினமானவர்கள் மற்றும் சாகச விரும்பிகள். இவ்வாறான தந்தைகளை பார்க்கும் அவர்களது மகள்களும் அந்த பண்பு நலன்களை அவர்களிடம் இருந்து பெற்று கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு தந்தை தன் வாழ்க்கையை எவ்வாறு அணுகுகிறார் என்பதில் இருந்தும் ஒரு பெண் நிறைய பாடங்களை கற்றுக்கொள்கிறார். இதனால் ஒரு பெண் தைரியமாக எந்த ஒரு சூழ்நிலையிலும் போராடி வெற்றி பெறுகிறார். நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் "தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலை" என்று. என்ன தான் பிள்ளை தாயை போல் இருந்தாலும் அதன் பண்பு நலன்கள், பழக்க வழக்கங்களில் தந்தை ஏற்படுத்தும் தாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது. பொதுவாக பெண் குழந்தைகளிடம் தந்தையின் பிரதிபலிப்பு வெகுவாக காணப்படும். உதாரணமாக தந்தையை போலவே இராணுவத்தில் சேர்ந்த நிறைய பெண்களை பார்க்கலாம், அதே போல் தந்தையை போலவே சிக்கனமாக செலவழித்து குடும்பத்தை நடத்தும் பல பெண்களை பார்கலாம். எனவே தந்தை மகள் உறவானது இந்த சமுதாயத்தை சிறப்பான முறையில் கட்டமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் தாக்கம்

வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் தாக்கம்

தந்தையின் தாக்கமானது, பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தன் மகளை மரியாதையுடன் நடத்தும் ஒரு தந்தை அவளுக்கு அவளை அறியாமலே ஒரு செய்தியை கொண்டு சேர்கிறார். அதாவது, அவள் எவ்வாறு போற்றப்பட கூடியவள் மற்றும் ஒரு ஆண் அவளை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற செய்தியை தெள்ள தெளிவாக அவளிடம் சேர்த்து விடுகிறார். இவ்வாறான சூழ்நிலையில் வளரும் ஒரு பெண், தன் வாழ்க்கை துணையை வெற்றிகரமாக எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, அந்த வாழ்க்கையையும் திறம்பட நடத்துகிறார்.

சிறந்த குடும்பம்

சிறந்த குடும்பம்

ஒரு சிறந்த தந்தை மகள் உறவு, மகளை மட்டுமில்லை, தந்தையையும் சீர்படுத்தி நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த உலகில் நிறைய ஆண்களை நல்வழிப்படுத்தியதில் அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளின் பங்கு அளப்பரியது. தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை ஒருவர் தினமும் மது அருந்தி கொண்டிருப்பார், ஆனால் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் அந்த பழக்கத்தை தூக்கி எறிந்து விடுவார். காரணம், பயம் இல்லை, அது அந்த புனிதமான உறவின் நிலைத்தன்மையை பேணிக்காக்க. எந்த ஒரு தந்தையும் தன் மக்களின் முன்னிலையில் தவறாக சித்தரிக்கப்படுவதை விரும்ப மாட்டார். அதுமட்டுமில்லை, நீங்கள் கூட நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கலாம், பெண் குழந்தை பிறந்ததும் அல்லது வேண்டாம் என்று சொன்னதும் புகை பிடிப்பதை விட்டு விட்டேன், என்று. ஒரு சிறந்த தந்தை மகள் உறவு ஒரு குடும்பத்தை, இந்த நாட்டை மற்றும் இந்த உலகத்தை நல்வழிப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தந்தையர் தினத்தில் தன் மகள்களை தன் அம்மாவாக பார்க்கும், அப்பாக்களுக்கும், தன் அப்பாக்களை, தன் மகனாக பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்களை சொல்லி தங்களது இந்த சிறந்த உறவு தான் இந்த சமூகத்தை இன்னும் நல்வழிப் பாதையில் வழி நடத்தி செல்கிறது என்பதை தமிழ் போல்ட்ஸ்கை வாயிலாக உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father's Day 2022: Reasons To Prove Why A Father-Daughter Relationship Is The Most Special

Father's Day 2022: Here are some reasons to prove why a father-daughter relationship is the most special. Read on...
Desktop Bottom Promotion