For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தந்தையர் தினம் 2020: வாசகர்கள் பகிர்ந்து கொண்ட அழகான மற்றும் இதயத்தைத் தொடும் கதைகள்!

அப்பாக்கள் தங்களின் அன்பை வெளிப்படையாகவும் முழுமையாகவும் காட்டாமல் இருந்தாலும், அவர் ஒருபோதும் உங்களை இந்த உலகில் தனியாகவும் உதவியற்றவராகவும் உணர விடமாட்டார்.

|

என்ன தான் தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்தாலும், வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பவர் தான் தந்தை. தந்தை என்பது ஒரு உறவு மட்டுமல்ல, என்ன நடந்தாலும், எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அப்பா இருக்கிறார் என்ற தைரியம் மற்றும் நம்பிக்கையைத் தரும் ஓர் உணர்வு. உங்கள் தந்தை எப்போதும் உங்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர தான் முயற்சிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் உங்களை வயிற்றில் சுமக்காவிட்டாலும், சௌகரியமான மற்றும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தர விரும்புவார். ஏனெனில் எந்த ஒரு தந்தையும் தன் குழந்தை சிரமப்படக்கூடாது என்று நினைப்பார்.

Father’s Day 2020: Real-Life People Share The Importance Of Fathers In Their Lives

அப்பாக்கள் தங்களின் அன்பை வெளிப்படையாகவும் முழுமையாகவும் காட்டாமல் இருந்தாலும், அவர் ஒருபோதும் உங்களை இந்த உலகில் தனியாகவும் உதவியற்றவராகவும் உணர விடமாட்டார். நமது குழந்தைப் பருவத்தில் அப்பாக்கள் அனைவரும் சற்று கண்டிப்புடனே நடந்திருப்பார்கள். அந்த தருணத்தில் பலருக்கும் அப்பாக்களின் நடவடிக்கை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பெரியவர்கள் ஆன பின்பு தான் நமக்கு தெரியும், நம்மை நல்வழிப்படுத்தவே அவ்வாறு நடந்து கொண்டார் என்பது.

எனவே தான் தந்தைகள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இந்த வருடம் தந்தையர் தினம் 21 ஜூன் 2020 அன்று கொண்டாடப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் உங்கள் தந்தை எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை தந்தையர் தினத்தன்று தெரியப்படுத்துங்கள். 2020 தந்தையர் தினம் ஸ்பெஷலாக, தமிழ் போல்ட் ஸ்கையுடன் தொடர்பு கொண்டு சில வாசகர்கள் பகிர்ந்து கொண்ட சில அழகான மற்றும் இதயத்தைத் தொடும் கதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாண்ட்ரா அஜித், கண்ணூர்

சாண்ட்ரா அஜித், கண்ணூர்

கண்ணூர் (கேரளா) தாலிபரம்பாவைச் சேர்ந்த சாண்ட்ரா அஜித் கூறியதாவது: "நான் என் தந்தையை எனது வாழ்வில் பெற்றிருப்பதை மிகவும் பாக்கியமாக நினைக்கிறேன். என் அம்மாவும், அப்பாவும் என் வாழ்க்கையின் சமமானவர்கள் என்றாலும், தந்தையர் தினத்தில் என் தந்தை முக்கியமானவராவார். நான் என் அப்பாவுடன் பகிர்ந்து கொண்ட அற்புதமான நேரத்தின் அழகான தருணங்களை எப்போதும் மதிக்கிறோன். அதில் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான தருணங்களையே நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, கீழே விழுந்து முழங்காலில் அடிப்பட்டுவிட்டது. இதனால் எனக்கு காய்ச்சலும் வந்தது. ஆனால் நான் முழுமையாக குணமடையும் வரை, என் தந்தை, என் ஹீரோ எப்போதும் என் அருகிலேயே இருந்தார். நான் நன்கு தூங்க வேண்டும் என்பதற்காக, அவர் கண் விழித்து என்னை பார்த்துக் கொண்டார்.

இப்பொழுது கூட, எனக்கு எப்போதாவது தூக்கம் வராமல் தவித்தால், அவர் எப்போதும் விழித்திருப்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். அவரின் இந்த அக்கறையான அணுகுமுறை எனக்கு அன்பையும், கவனிப்பையும் கற்றுக் கொடுத்தது. என்னுடைய முன்மாதிரி, என் சூப்பர் ஹீரோவான என் அப்பாவாகத் தான் இருப்பார். நான் அப்பாவின் செல்ல மகள் என்பதை எப்போதும் பெருமையாக சொல்வேன்."

சௌபர்னிகா, தமிழ்நாடு

சௌபர்னிகா, தமிழ்நாடு

தமிழகத்தைச் சேர்ந்த சௌபர்னிகா, தனது தந்தை தனக்கு ஒரு வழிகாட்டியும், ஊக்கமும் அளிப்பவர் என்கிறார். இதுக்குறித்து மேலும் கேட்கும் போது, அன்புள்ள அப்பா, வாழ்க்கை எந்த வழியில் வீழ்த்த முயன்றாலும், மிகுந்த நம்பிக்கையுடன் நடப்பது எப்படி என்பதை நீங்கள் எனக்கு கற்று கொடுத்தீர்கள். என் வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கையை முழு ஆர்வத்துடன் அனுபவிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். கடைசியாக, என்னை நானே எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். தந்தையர் தின வாழ்த்துக்கள், அப்பா!"

சர்கா அஜித், கண்ணூர்

சர்கா அஜித், கண்ணூர்

"என் அப்பா என்னை காலையில் எழுப்பினால், அந்நாள் எனக்கு அழகாக இருக்கும். காலையில் முதல் விஷயமாக அவரது பிரகாசமான புன்னகையை நான் காண்கிறேன். ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் என் தந்தை இன்னும் என்னை அவ்வாறு தான் காலையில் எழுப்புகிறார்" என்று கண்ணூர் (கேரளா) தலிபரம்பாவைச் சேர்ந்த சர்கா அஜித் கூறுகிறார்.

மேலும் அவர் கூறியதாவது, "என் தந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் வேலையில் இருந்து திரும்பி வரும் வேளையில், நானும் என் சகோதரியும் எப்போதும் எதிர்பார்ப்போம். மழை அல்லது புயல் வந்தாலும், அவர் எப்போதும் எங்களுக்கு ஒரு பாக்கெட் ஸ்வீட் தயாராக வைத்திருப்பார். அவர் வீட்டில் இருக்கும் போது வீடே கலகலப்பாகவும், அழகாகவும் இருக்கும். அவர் தான் என் பலத்தின் தூண். இந்த தந்தையர் தினத்தன்று, எனது தந்தையின் காலையில் எழுப்பும் வழக்கம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அன்புடன், என்றென்றும் அப்பாவின் பெண்." என்றார்.

விவேக் வினோத், கோழிக்கோடு

விவேக் வினோத், கோழிக்கோடு

கோழிக்கோட்டில் வசிக்கும் விவேக் வினோத் கூறுகையில், "என் தந்தை எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவார். அவர் எப்போதும் புன்னகையுடன், கையில் ஒரு பாடலுடன் தருணத்தை பிரகாசமாக்குவார். வாழ்க்கை எப்போதும் பணத்திற்கு அப்பாற்பட்டது என்று அவர் வலியுறுத்துவார். 'போதுமானதை வைத்திரு, எதையும் அளவுக்கு அதிகமாக வைத்து வீணடிக்கக்கூடாது' என்று கூறுவார். மேலும் இதுவே அவருக்கு மிகவும் பிடித்த குறிக்கோள்."

நேரம், தேர்வு அல்லது உணவு எதுவாக இருந்தாலும், அளவோடு இருந்தால், நாளின் முடிவில் நாம் ஒரு உள்ளடக்கத்துடனும், மகிழ்ச்சியான இதயத்துடனும் தூங்க முடியும். மக்களிடமிருந்து எப்போதும் மரியாதையை சம்பாதிக்க அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதோடு 'வாழ்க்கைத் துணையை சரியாக நடத்துங்கள், சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்ளுங்கள்'. எல்லாவற்றிற்கும் மேலாக இதுதான் வாழ்க்கையை மகிழ்ச்சியடையச் செய்யும் என்றும் அவர் கூறுவார். நான் நினைவு தெரிந்த நாள் முதல் உங்களைத் தான் பார்க்கிறேன் மற்றும் ஒரு நாள் உங்களை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி அப்பா. ஐ லவ் யூ! என்று அவர் கூறினார்.

ஷில்பா சிவதாஸ்

ஷில்பா சிவதாஸ்

ஷில்பா சிவதாஸ் தனது குழந்தை பருவ நினைவுகளையும், தனது தந்தையுடன் பகிர்ந்து கொண்ட சில அருமையான தருணங்களையும் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், "ஒரு அப்பாவாக இருப்பது கடினம், அது ஒரு முழு நேர பொறுப்பு மற்றும் நிறைய பொறுமை தேவை. ஆனால் நீங்கள் எப்போதுமே உங்களால் முடிந்ததை செய்தீர்கள். ஆகவே, நீங்கள் மிகச்சிறந்தவர்! நான் 3 வயதில் இருந்த போது, முதல் முறையாக என்னை வென்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது நான் அழுது கொண்டே உங்களிடம் தான் ஓடி வந்தேன், ஹா ஹா. என் உணர்வுகளை சிறப்பாக எழுத தெரியாவிட்டாலும், நான் வெளிப்படுத்த விரும்புவது எனது நன்றியைத் தான். நிபந்தனையற்ற அன்பு மற்றும் நீங்கள் எனக்கு கற்பித்த பாடங்களுக்கு நன்றி. நான் உங்களுடைய ஒரு அங்கம் என்பதை அறிந்து கொள்வதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என் வாழ்க்கையில் நான் பல விஷயங்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்!! ஐ லவ் யூ."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father’s Day 2020: Real-Life People Share The Importance Of Fathers In Their Lives

Father’s Day is an annual observance to express our gratitude for our fathers. Every year it is observed on the third Sunday in the month of June. Today we are here with some real-life stories of people and the bond they share with their fathers.
Desktop Bottom Promotion