Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களுக்கு உடலுறவைப் பற்றி இருக்கும் மோசமான அச்சங்கள் என்னென்ன தெரியுமா? இதுக்கெல்லாம் பயப்படாதீங்க!
உடலுறவைப் பொறுத்தவரை பெண்களுக்குத்தான் சில அச்சங்கள் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமான உடலுறவு அச்சங்கள் உள்ளது.
உடலுறவைப் பொறுத்தவரை பெண்களுக்குத்தான் சில அச்சங்கள் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமான உடலுறவு அச்சங்கள் உள்ளது. ஆண்கள் என்னதான் உடலுறவு பற்றி அனைத்தும் தெரிந்தது போல நடித்தாலும், வெளிப்படையாகப் பேசினாலும் அவர்களுக்கும் படுக்கையறை அச்சங்கள் உள்ளன.

சிலர் தங்கள் ஆண்குறி போதுமானதாக இருக்காது என்று கவலைப்படலாம், மற்றவர்கள் 'செயல்திறன் பதட்டத்தால்' பாதிக்கப்படுவார்கள். படுக்கையறையில் ஆண்களுக்கு இருக்கும் மோசமான அச்சங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சரியான தருணத்தில் எழுச்சி பெறுமா?
தேவைப்படும் தருணத்தில் ஆணுறுப்பு விறைப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது பெரும்பாலான ஆண்கள் கடந்து வரும் ஒரு குழப்பமாகும். இதை ‘செயல்திறன் கவலையின் திகில்' என்று அழைக்கிறார்கள். நீண்ட நேரம் படுக்கையில் செயல்படுபவராக இருந்தாலும் இந்த அச்சம் அனைத்து ஆண்களுக்குள்ளும் கண்டிப்பாக எழும்.

நீண்ட நேரம் விறைப்பு நீடிக்குமா?
இது அனைத்து ஆண்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயமாகும்.ஆண்கள் உடலுறவிற்கு புதியவர்களாக இருக்கும்போது மிகவும் உற்சாகமாக இருப்பார்கள், இதனால் அவர்கள் மிகவும் வேகமாக விந்தணுக்களை வெளியேற்றி விடுவார்கள். உடலுறவுக்குப் பிறகு ஒரு கூட்டாளியின் ஏமாற்றமடைந்த முகத்தைப் பார்ப்பது போன்ற சங்கடமான விஷயம் எதுவுமில்லை.

ஆணுறுப்பின் நீளம் பற்றிய அச்சம்?
பெண்கள் எப்படி தங்களின் மார்பக அளவை நினைத்து கவலைப்படுவார்களோ அதைவிட அதிகமாக ஆண்கள் தங்களின் ஆணுறுப்பின் நீளம் பற்றி கவலைப்படுவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு எவ்வளவு இருந்தாலும் போதுமானதாக இருக்காது. ஆபாசப்படங்கள் அதிகம் பார்ப்பது ஆண்களை அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது.

பார்ட்னருக்கு உச்சக்கட்டம் வராமல் போனால் என்ன செய்வது?
பெண்களின் உச்சக்கட்டம் என்பது மிகவும் மர்மமானதாகும். பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டம் அடையாமல் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் உச்சக்கட்டம் அடையாமல் இருப்பது அவர்களுக்கு ஒருபோதும் பாலியல் திருப்தியை அளிப்பதில்லை. அவர்கள் இறுதியில் அதனை வெளிப்படுத்தும்போது அதிக வலியை ஏற்படுத்தும். அதனால் ஆண்கள் பெண்களின் உச்சக்கட்டம் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர்.

தங்கள் துணை நடிக்கிறீர்களா?
பெரும்பாலும் பெண்கள் உடலுறவின் போது எழுப்பும் கூச்சல்கள் போலியானதோ என்ற அச்சம் அனைத்து ஆண்களுக்குமே இருக்கும். ஏனெனில் ஆண்களை திருப்திப்படுத்த பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்தும் ஆண்கள் கவலையடைகிறார்கள்.

தோழிகளுடன் பகிர்ந்து கொள்வார்களோ?
பெண்களுக்கு ரகசியத்தை காப்பாற்றும் பழக்கம் என்பதே இல்லை. அதனால்தான் அனைத்து விஷயங்களையும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதேபோல தங்களின் கலவி அனுபவத்தையும் தோழிகளுடன் பகிர்ந்து கொள்வார்களோ மேலும் தங்களின் செயல்திறன் குறித்து கிண்டல் செய்வார்களோ என்று அனைத்து ஆண்களும் பதட்டப்படுகிறார்கள்.

ஆசைகளைப் புறக்கணித்து விடுவார்களோ?
ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஆண்களுக்கென சில பைத்தியக்காரத்தனமான பாலியல் ஆசைகள் இருக்கும். ஆனால் தங்களின் ஆசைகளை பெண்கள் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சம் ஆண்களுக்குள் இருக்கும்.



Click it and Unblock the Notifications