Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை!
பெண்களை பொறுத்தவரை இந்த 7 தகுதிகள் இருக்கும் ஆண்கள் மட்டும்தான் காதலிக்க ஏற்றவர்களாம்...!
ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
இந்த பூமியில் எப்பொழுதுமே உயிரினங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கின்றனர் அப்படி வாழ்வதுதான் அழகும் கூட. ஆண்கள் இன்றி பெண்களோ, பெண்கள் இன்றி ஆண்களோ வாழும் வாழ்க்கை நிச்சயமாக முழுமையான வாழ்க்கையாக இருக்காது. காதல் மட்டுமே ஒருவரின் அழகான வாழ்க்கையை பேரழகாக மாற்றக்கூடிய சக்திகொண்டது.

காலம் காலமாக கூறப்படும் ஒரு உண்மை என்னவெனில் பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கடவுளால் கூட தெரிந்து கொள்ள முடியாது என்பதாகும். இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் முற்றலும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. ஏனெனில் முன்பின் தெரியாத பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாதே தவிர நாம் பழகிய மற்றும் விரும்பும் பெண்ணின் மனதில் இருப்பதை ஓரளவிற்கு நம்மால் கணிக்கமுடியும் என்பதே உண்மை.

பெண்களின் எதிர்பார்ப்பு
ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதனை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் பெரும்பாலான ஒருதலை காதல்கள் தோல்வியிலேயே முடிகிறது. பொதுவாக பெண்கள் பணக்கார ஆண்களைத்தான் விரும்புவார்கள், அழகான ஆண்களைத்தான் விரும்புவார்கள் என்று கூறுவார்கள். அதனை முழுவதுமாக மறுக்க முடியாது என்றாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் அதற்க்கு விதிவிலக்கான பெண்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். சமீபத்தில் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் எப்படிப்பட்ட பெண்ணை ஆணை விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பணிவானவர்கள் Vs. அழகான நபர்கள்
பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி உண்மையில் அனைத்து பெண்களும் கமல், அஜித், ஷாருக்கான் போன்ற அழகான ஆண்களை விரும்புவதில்லை. கவர்ச்சிகரமான ஆண்கள் பெண்களை கவரலாம் ஆனால் உண்மையில் பெண்கள் காதலிக்க பணிவான, கருணைமிக்க மற்றும் நகைச்சுவை உணர்வுமிக்க சுமாரான ஆண்களையே விரும்புகிறார்கள்.

குறைபாடு இல்லாத ஆண்கள்
பெரும்பாலான ஆண்கள் பெண்கள் எப்பொழுதும் உடல் அளவில் அழகாக இருக்கும் ஆண்களிடம் எளிதில் விழுந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. ஏனெனில் 72 சதவீத பெண்கள் தனக்கு சரியான ஆண்களை உடல் அளவை பார்த்து தேர்வு செய்வதில்லை என்று கூறியுள்ளனர். பெண்களை ஈர்க்கும் ஆண்களின் உடலமைப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உயரம் Vs. குள்ளம்
ஆண்களின் உயரத்தை பொறுத்தவரையில் பெண்களுக்கு பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆண்களின் தன்னம்பிக்கையே பெண்களை அதிகம் ஈர்க்கிறதாம். சொல்லப்போனால் தான் பாதுகாப்பாய் உணரும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். பொதுவாக நீண்டகால உறவுகளுக்கு பெண்கள் தேர்வு செய்வது நடுத்தர உயரம் உள்ள ஆண்களைத்தான். சில பெண்களுக்கு உயரமான ஆண்களை பிடிக்கலாம், ஆனால் பெரும்பாலான ஆண்களின் தேர்வு நடுத்தர உயரமுள்ள ஆண்களைத்தான்.

கட்டுமஸ்தான Vs. வலிமையானவர்கள்
வலிமையான ஆண்கள் அனைவரும் கட்டுமஸ்த்தாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பெண்கள் எப்பொழுதும் கட்டுமஸ்தான ஆண்களை விட வலிமையான ஆண்களையே விரும்புகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் கட்டுமஸ்தான ஆண்களை ஒருசில பெண்களை தவிர யாருமே விரும்புவதில்லை. பெண்களின் பார்வையில் வலிமைக்கும், கட்டுமஸ்தான உடலுக்கும் சம்பந்தமில்லை.

பணக்காரர் Vs. மிடில் கிளாஸ்
ஒவ்வொரு வெற்றிபெற்ற ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவார்கள். இப்பொழுதும் பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். பொதுவாக பணக்கார ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று அவர்கள் மீது பழிசுமத்தினாலும், அது முற்றிலுமான உண்மையாக இருப்பதில்லை. பணக்கார ஆண்கள், மிடில் கிளாஸ் ஆண்கள் மற்றும் ஏழை ஆண்களை பொறுத்தவரையில் பெண்களின் அதிக ஒட்டு விழுவது மிடில் கிளாஸ் ஆண்களுக்குத்தான். தனது துணையின் முன்னேற்றத்தில் துணை நிற்க பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

சிடுமூஞ்சி Vs. நகைச்சுவையாளர்கள்
ஆணின் இதயத்தை தொடுவதற்கான வழி வயிறு என்றால், பெண்ணின் இதயத்தை தொடுவதற்கான வழி நகைச்சுவை ஆகும். இன்றைய காலத்தில் பெண்கள் அலுவலகம் முதல் படுக்கையறை வரை அனைத்திலும் மேலாதிக்கம் செலுத்தினாலும் அவர்களை எளிதில் கரைக்கும் செயல் நகைச்சுவை ஆகும். மோசமான ஒரு நாளிலிருந்து ஒரு பெண்ணை வெளியே கொண்டுவந்து சிரிக்க வைக்கமுடியுமெனில் அந்த ஆண்கள் உறவில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பணத்திற்கு முக்கியத்துவம் Vs. படைப்பாற்றல்
பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் மற்றும் படைப்பாற்றல் இருக்கும் ஆண்கள் என இருவரிடமும் பழகினர். அவர் பழகி பார்த்த பிறகு பெரும்பாலான பெண்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களை விட படைப்பாற்றல் அதிகம் இருக்கும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார்கள். வெகுசில பெண்கள் மட்டுமே பணத்தை சேமிக்கும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களை விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தாடி இல்லாத ஆண்கள் Vs. தாடி இருக்கும் ஆண்கள்
தாடி இல்லாத ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் பெண்களை கவருவதில் தாடி இருக்கும் ஆண்கள் ஒரு படி மேலே இருக்கிறார்கள். இந்த ஆய்வின் போது தெரிந்த தகவல் என்னவெனில் பெண்கள் சாக்லேட் பாய்களை விட தாடி வைத்து கடுமையாக இருக்கும் ஆண்கள் பெண்களை அதிகம் தவறுகிறார்கள். பெண்களை பொறுத்தவரை தாடி என்பது பொறுமை, முதிர்ச்சி, உணர்ச்சி போன்றவற்றின் அடையாளமாகும்.



Click it and Unblock the Notifications