For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னைக் காப்பாற்றிக் கொள்வதா? அல்லது மகளை பாதுகாப்பதா? My Story #164

கணவன் இறந்த பிறகு இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்துகிறது என்பதை உணர்த்துகிற கதை

|

திருமணமாகிவிட்டது என்றாலே நம்முடைய ஆசாபாசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என்று யார் எப்போது சொன்னார்களோ தெரியவில்லை . அதுவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டவர்களின் கதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

எங்களுக்கு காதல் திருமணம் எல்லாம் இல்லை, ஆனால் அம்மாவுக்கு அப்பாவுக்கும் மாமாவின் ஒரே மகனை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம். அதனால் அவர்களுக்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எனக்கு கிடைக்கும் நிம்மதியாய் வாழலாம் என்று வர்புறுத்தினார்கள். ஆனால் நான் இறுதி வரை சம்மதிக்கவேயில்லை கடைசியில் வெளியிலிருந்து வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

மாமா வீட்டினர் ஆரம்பத்தில் மனஸ்தாபத்துடன் இருந்தாலும் பின்னர் சகமாகிவிட்டனர். நாங்கள் திருமணம் முடித்து திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகிவிட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனியொருத்தி :

தனியொருத்தி :

திருமணம் முடிந்த மூன்றே ஆண்டுகளில் கணவருக்கு சாலை விபத்து ஏற்பட்டு இறந்து விட இரண்டு வயது மகளுடன் நிற்கதியை நின்றேன். அந்த பையனுக்கு ராசியில்ல என்று என் வீட்டினரும்,பொண்ணு ராசினால தான் என் பையனுக்கு இந்த நிலைமை குழந்தை பிறந்துல இருந்து அவனுக்கு நேரம் நல்லாயில்ல என்று என் பிஞ்சுக் குழந்தையையும் வெறுத்து பேச மகளுடன் சென்னைக்கு கிளம்பினேன்.

மகளை அருகிலிருந்த க்ரீச்சில் விட்டுவிட்டு நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

வர்றீயா :

வர்றீயா :

எங்கிருந்து தான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியவில்லை, என்ன வூட்டுக்காரன் வர்ல.... மண்டைய போட்டானா? விட்டு ஓடிட்டானா... இல்ல நீ வந்திட்டியா என வசனங்கள் நான் கடக்கும் போதெல்லாம் கேட்பேன்.

இவை எல்லாவற்றையும் விட அத புருசன் போய்ட்டான்ல என்கூட வர்றீயா என்றும் உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் உன் லைஃப் இனி நான் பார்த்துக்கறேன் என்று நெருங்குபவர்களும் உண்டு.

மகள் மட்டுமே வாழ்க்கை :

மகள் மட்டுமே வாழ்க்கை :

என்னையும் என் கணவரையும் அவமானப்படுத்தி குழந்தை என்று கூட பார்க்காமல் மகளை பழித்தவர்கள் முன் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது.

இப்போது நான் என்பதைத் தாண்டி நான் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக மகளை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் உலகமே அவள் என்றான பிறகு இனி என் வாழ்க்கை அவளுக்காகத்தான் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தேன்.

நட்பு :

நட்பு :

மகள் பள்ளி செல்ல ஆரம்பித்திருந்தால், அன்றைக்கு டேர்ம் ஃபீஸ் கட்டுவதற்காக நான் வரிசையில் நின்றிருந்தேன். என் முறை வந்ததும் கார்டை நீட்ட.... நோ கார்ட் மேடம் ஒன்லி கேஷ் என்று சொல்லிவிட்டார்கள்.

ஐயையோ கேஷா.... முன்னாடியே சொல்லக்கூடாதா இவ்ளோ நேரம் க்யூல நின்னதுக்கு நான் போய் கேஷ் எடுத்துட்டு வந்திருப்பேனே என்று யோசித்தேன். ஒண்ணும் அவசரமில்ல போய் எடுத்துட்டு வாங்க ஈவ்னிங் வரைக்கும் நீங்க கட்டலாம் என்றார், பாவம் இப்போதே அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டிருப்பது அவருக்கு தெரியாது அல்லவா?

நான் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார்த்து விட்டு அருகிலிருந்த ஒருவர் என்னவென்று கேட்டு உதவி செய்ய முன்வந்தார். அந்த நேரத்தில் அவருடைய உதவி தவிர்க்க முடியாத இக்கட்டான நிலையில் இருந்ததினால் ஏற்றுக் கொண்டேன். ஒரே ஊர்க்காரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பைத் தொடர்ந்தார்.

நீ தானே சமூகம் :

நீ தானே சமூகம் :

அதன் பிறகு அடிக்கடி மகளை கொண்டு விடும்போதும் அழைத்து வரும் போதும் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். பணத்தை திரும்ப கொடுக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்குள்ள என்னயிருக்கு என்றார்.... பணம் விஷயத்தில் இதெல்லாம் பேச வேண்டாம் என்று சொல்லி வர்புறுத்தி அவரிடம் பணம் கொடுத்தேன்.

அடிக்கடி உதவிகள் செய்வதாய் என்னைச் சுற்றியே இருந்தார் இப்போது பள்ளியைத் தாண்டி வெளியிலும் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்திருந்தது. பர்சனல் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தார்.

இவ்ளோ யங் ஏஜ்ல உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க கூடாது.... தனியா ஒரு பொண்ணு அதுவும் ஒரு குழந்தைய வச்சிட்டு இந்த சொசைட்டி உங்கள வாழவிடாது எல்லாம் க்ரூயல்டி மைண்ட்வோடதான் பாப்பங்க என்ன ஜென்மங்களோ என்று சமூகத்தை பழி போட்டு புலம்பினார்.

 என் பின்னாடி ஒழிஞ்சுக்கோ :

என் பின்னாடி ஒழிஞ்சுக்கோ :

நான் பதிலேதும் சொல்லாமல் அதனை கவனிக்காதது போல இருந்தேன். பின் சுயபச்சாதாபம் தேடும் பொருட்டு தன் கதையொன்றை சொல்ல ஆரம்பித்து எமோஷனலாக பேசி என் கவனத்தை திசை திருப்பினார்.

ஒகே.... கவலப்படாதீங்க என்று சொல்ல என் கையை பிடித்துக் கொண்டார். இப்டி சொல்ல எனக்கு யாருமில்ல என்று சொல்லும் போதே பிடிவாதமாக கையை இழுத்துக் கொண்டேன். அதோடு அந்த இடத்தை விட்டு எழுந்து நகர்ந்து விட்டேன். பின்னர் என்னை காதலிப்பதாகவும் என்னையும் மகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி பின்னாலேயே சுற்றினார். நான் வருகிற போகிற இடங்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு பின்னால் ஆரம்பித்தார்.

நான் பயப்படுவது நான்கு வயதான மகளுக்கு தெரியாது.... இதையெல்லாம் கவனிக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் அன்றைக்கு மார்க்கெட்டுக்குச் சென்ற போது

மம்மீ அந்த அங்கிள் வராரு பாரு... என் பின்னாடி ஒழிஞ்சுக்கோ என்கிறாள்.

அவன் தீவிரம் :

அவன் தீவிரம் :

பிரச்சனை பெரிதாகும் முன்னர் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி பள்ளியில் மேம்போக்காக சொல்லி வைத்தேன். அதன் பிறகு ஒரு வாரம் ஆளையே பார்க்க முடியவில்லை, மகளின் ஆசிரியர் மூலமாக உண்மை தெரிந்தது.

அதே பள்ளியில் அவனுடைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் பள்ளியில் நடந்த சம்பவங்களைப் பற்றி வீட்டில் அம்மாவிடம் சொல்லிவிட்டிருக்கிறாள்.

போர்க்கொடி :

போர்க்கொடி :

மனைவிக்கு விஷயம் தெரிந்து சண்டை போட்டு பிறந்தகத்திற்கு சென்று விட்டிருக்கிறாள் அங்கே சமாதானம் பேசப்போன இடத்தில் இந்த ஹீரோவுக்கு அவமானமே கிடைத்திருக்கிறது. அதனால் அடிதடி வரைக்கும் போய்விட்டதாம். இப்போது இருவரும் தனியாக இருக்கிறார்கள் என்றும் சொல்ல எனக்கு கொஞ்சம் சங்கடமாகிவிட்டது.

எங்கள் வீட்டில் :

எங்கள் வீட்டில் :

அவனுக்கு என் மேல் கோபம் அதிகமானது, குழந்தையை கொன்றுவிடுவேன் என்றெல்லாம் மிரட்ட ஆரம்பித்தான். போலீசில் சொல்லலாமா என்று நினைத்தேன், பின் பள்ளியில் சொன்னதற்கே இந்த நிலைமை என்றால் இன்னும் போலீஸ் புகார் எல்லாம் அளித்தால் அவ்வளவு தான் என்று நினைத்து எதுவும் செய்யாமல் இருந்தேன்.

அவன் மனைவியின் சகோதரர்கள் என் அம்மாவீட்டிற்குச் சென்று சண்டை போட்டிருக்கிறார்கள், விஷயம் நாலாபுறம் கசிந்து பூதகரமாக வெடித்தது. எல்லாரும் நானே குற்றவாளி என்று தீர்மானித்து பழித்துப் பேச ஆரம்பித்தார்கள்.

நான்காம் வகுப்பு :

நான்காம் வகுப்பு :

மகளை அந்த பள்ளியிலிருந்து மாற்றினேன். வீட்டை மாற்றினேன் பிரச்சனை ஓய்ந்தது. அதன்பிறகு சில சில சங்கடங்களை சந்தித்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து வந்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு மாலை பள்ளியிலிருந்து வந்த மகள் கேட்ட கேள்வியால் மீண்டும் பிரச்சனை ஆரம்பமானது. அம்மா அப்பா ஏன்ம்மா எனக்கு இல்ல? ஸ்கூல்ல பிரண்ட்ஸ் எல்லாருக்கும் அப்பா இருக்கு எனக்கு மட்டும் ஏன்ம்மா இல்ல நான் பேட் கேர்ளாம்மா ?

புரியவைத்திட வேண்டுமே.... :

புரியவைத்திட வேண்டுமே.... :

இந்த வயதில் திருமண பந்தத்தைப் பற்றியும், இறப்பை பற்றியும் எப்படி அவளுக்கு புரியவைப்பேன் . அப்பா சாமிகிட்ட போய்ட்டாரு அதான் உனக்கு லவ்லியான மம்மிய கொடுத்திருக்காரு என்று சமாதம் செய்து படுக்க வைத்தேன்.

அவள் புரிந்து கொண்டாளா என்றெல்லாம் தெரியாது, ஆனால் அதற்கு பிறகு அவள் அந்த கேள்வியை கேட்கவேயில்லை.

பாப்பா பாவம்மா :

பாப்பா பாவம்மா :

வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்த ஹவுஸ் ஓனர் கீழே அழைத்தார். என்ன இது திடிரென்று இப்படி கூப்பிடுகிறாரே என்று நினைத்துக் கொண்டே சென்றேன்.

உள்ள வாம்மா....

இல்ல பராவாயில்ல இந்தா பொண்ணு கடைக்கு போயிருக்கா..... வேல இருக்கு

சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க நீங்க வீடு காலி பண்ணிடுறீங்களா என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்...

ஏன்? என்னாச்சு நான் கரெக்டா வாடகை கொடுத்துட்டு தான இருக்கேன்.

எப்படி புரியவைக்க.... இல்லம்மா நீ கரெக்ட்டா தான் வாடகை குடுக்குற அதுல எதுவும் நான் குத்தம் சொல்லல.... இன்னக்கி பாப்பா எதாவது சொன்னாலா?

இல்லையே.... என்னாச்சு?

நீ பாட்டுக்கு காலைல போய்ட்டு நைட்டு வர்ற பொம்பளப்பிள்ள வேற வச்சிருக்க... என்று நிறுத்தினார்.

அவமானம் :

அவமானம் :

அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு பயம் அதிகரித்து விட்டது... என்னாச்சு இன்னக்கி என்று கேட்க, விவரித்தார்.

நாலு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வந்துட்டு கீழ இங்க பால் சாப்ட வந்தா அதுக்கப்பறம் மேல போய் நோட்டு எடுத்துட்டு வரேன்னு போனவ ரொம்ப நேரமா வர்ல என்ன ஏதுன்னு பாக்க வந்தப்பா படில உக்காந்து அழுதுட்டு இருந்தா சமாதானப்படுத்தி வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனேன்.

பாத்தா அங்க பக்கத்து ஃப்ளாட்ல இருக்குற ஒரு சாரும் இன்னொருத்தரும் உக்கந்துட்டு இருந்தாங்க . என்ன ஏதுன்னு கேக்க போன என்னையும் அவமானப்படுத்தி அசிங்கமா பேசி அனுப்பிட்டாங்க

குழந்தைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். இப்ப தான நீ வந்திடுவ ஹோம்வொர்க பண்ணலன்னா அம்மா கேப்பாங்கன்னு சொல்லி மேல போனா....

என்ன செய்ய :

என்ன செய்ய :

தூக்கி வாரிப் போட்டது. ஒரு பெண் தனியாக இருக்கிறாளென்றால் இப்படி அத்துமீறி வீட்டிற்குள் கூட நுழையலாமா? என்ன வேண்டுமானாலும் செய்வார்களா....

இப்போ என்னைய எதுக்கு வீடு காலி பண்ண சொல்றீங்க... இல்லம்மா ஒண்ணு கணக்கா ஒண்ணு ஆகிடுச்சுன்னா நமக்கு தான பிரச்சனை...

அப்போ அவங்க தான காலி பண்ணனும்..

இல்லம்மா அவங்க ஃபேமிலி.

ஃபேமிலின்னா? அப்போ நாங்க எல்லாம்

குடும்பம் :

குடும்பம் :

அதற்கு மேல் அவரிடம் எதுவும் பேச விரும்பாமல் மேலே வந்துவிட்டேன். என்னால் பிரச்சனைகள் வருவதை விட சுற்றியிருப்பவர்களால் தான் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டிருந்தது.

அதோடு இப்போது என்னைப் பாதுகாப்பதை விட முக்கியமானது மகளை பாதுகாப்பது. என்ன செய்ய என்ன செய்ய என்று தவித்துக் கொண்டிருந்த போது தான் நண்பர் ஒருவர் மூலமாக ஊட்டியில் இருக்கிற கான்வெண்ட் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அங்கே ஆசிரியராக சேர்ந்து கொண்டேன். அதே பள்ளியில் மகளையும் சேர்த்தேன் ஹாஸ்டலில் எங்களுக்கு தங்க அனுமதி கொடுத்தார்கள்.

வாழ்க்கை சற்று நிம்மதியாக போய்க்கொண்டிருக்கிறது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Life After Her Husband Death

Woman Life After Her Husband Death
Story first published: Saturday, February 3, 2018, 13:31 [IST]
Desktop Bottom Promotion