For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்டி மெசேஜ் பண்ணா பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்குமாம்!

காதலர்களுக்கு மத்தியில் உரையாடல்கள் சுவரஸ்யமாக இருக்க வேண்டுமென்றால் இந்த டிப்ஸ் ஃபாலோ செய்து பாருங்கள்.

|

காதலிக்கும் பெண்ணிடம் ப்ரோப்போஸ் செய்வது சிலரது பிரச்சனையாக இருந்தால், தான் விரும்பியவரிடத்தில் எப்படி முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்பதே பலரது கேள்வியாக இருக்கும். அலைந்து திரிந்து எண் வாங்கிவிட்டால் மட்டும் போதுமா? சாட்டிங்கில் ஆரம்பித்து டாப் கியரில் செலுத்தி மேரேஜ் ஃபிக்ஸ் செய்ய வேண்டாமா?

தைரியமாக உங்கள் விருப்பங்களைச் சொல்ல தைரியம் இருக்கும் ஆனால் முதல் அடியை எப்படி எடுத்துவைப்பது, எப்படி துவங்குவது என்பதில் தான் பிரச்சனையே.... லைட்டா ஸ்டார்டிங் ட்ரபிள் என்று சொல்லி சொல்லியே எத்தனை ஆண்டுகள் வீண்டித்திருப்போம் என்று கொஞ்சம் ப்ளாஷ் பேக் சென்று வந்திடுங்கள். இன்றைக்கு யாரைக் கேட்டாலும் ஏதேனும் சமூக ஊடகம் வழியாக அறிமுகம் பேச ஆரம்பித்தோம் இருவரது எண்ணமும் ஒரே மாதிரியாக இருந்தது இருவருக்கும் பிடித்து போனது காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று ஹைஃபை அடித்துக் கொள்வார்கள்.

அங்க தான பிரச்சனையே.... பேசணும் ஆனா போர் அடிக்காம பேசணும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போன் :

போன் :

இன்றைக்கு பெரும்பாலானவர்களிடத்தில் ஸ்மார்ட் போன் இருக்கிறது, பள்ளிக்குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்று வசதியாக பேசினாலும் என்றைக்காவது ஒருவருக்கு முதன் முதலாக மெசேஜ் அனுப்பும் போது பதட்டமில்லாமல், பயமில்லாமல் அனுப்பியிருக்கிறீர்களா?

குட் மார்னிங், ஹாய், என்ன பண்ற, சாப்டாச்சா, வேல முடிஞ்சதா,ஒரு ஹெல்ப்.... இப்படி டெம்ப்ளேட் வார்த்தைகளைத் தாண்டி

எப்படி ஆரம்பிக்கலாம் என்பதற்கு சிறிய டிப்ஸ்...

இமோஜி :

இமோஜி :

வெறும் வார்த்தைகளாக ஹாய் அல்லது ஹலோ அனுப்பாமல் கூடுதலாக ஒரு இமோஜியையும் சேர்த்து அனுப்புங்கள். நாக்கை துருத்திக் கொண்டு சிரிக்கும் இமோஜி அல்லது சோகமாக இருப்பது, லேசாக சிரிப்பது போன்றவையாக அல்லாது. கண்ணம் சிவந்து சிரிக்குமே அந்த இமோஜியுடன் சேர்த்து அனுப்பிப் பாருங்கள்.

சாதரண ஸ்மைலி வழக்கமாக எல்லா இடங்களிலும் பார்த்திருப்பார்கள். உங்களுடமிருந்து வருகிற மெசேஜ் அல்லவா? அதனால் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கட்டும்.

நாஸ்டாலஜி புகைப்படம் :

நாஸ்டாலஜி புகைப்படம் :

உங்களது பழைய சிறு வயதில் எடுத்தப்படங்களை பகிருங்கள். இல்லையென்றால் நீங்கள் பரிசு பெறுவதைப் போன்ற படமோ அனுப்புங்கள். அப்படியில்லை என்றால் உங்களுடைய இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடிய ஆளுமையின் படத்தினை அனுப்பி அவரை எதற்காக இன்ஸ்பிரேஷனாக கொண்டீர்கள், தினமும் அவர் படத்தை பார்க்கும் போது உங்களுக்குள் என்ன சொல்லிக் கொள்வீர்கள் போன்றவற்றை பகிரலாம்.

வீடியோ :

வீடியோ :

வீடியோ அனுப்பலாம் தப்பில்லை அதற்காக ஐந்து நிமிடம், பத்து நிமிட வீடியோவையெல்லாம் அனுப்பிவிடாதீர்கள்.... அதிலும் அவர்களுக்கு விருப்பமில்லாத,கோபமூட்டுகிற விஷயம் கொண்ட வீடியோவாக இருந்தால் அவ்வளவு தான் கதை முடிந்தது. அவர்களின் விருப்பம் என்னவென்று நமக்கு தெரியாத காரணத்தினால் அதில் எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம்....

பாடல்கள்,க்யூட் சீன்ஸ்,பார்த்ததும் சிரிக்க வைக்கிற மாதிரியான விடியோ குறைவான விநாடிகளில் இருந்தால் அனுப்புங்கள்.

Image Courtesy

மொழி :

மொழி :

அவர்கள் எந்த சூழ்நிலையில் எந்த மூடில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. நம் மெசேஜை பார்த்ததும் கோபமோ அல்லது ஆத்திரமோ படக்கூடாது. அதனால் எக்காரணம் கொண்டும் அவர்களை எரிச்சல் படுத்துகிற மாதிரியாக எதுவும் அனுப்பி விடாதீர்கள்.

அதே நேரத்தில் வள வள கொழ கொழ என்றும் வேண்டாம். வழக்கமான ஹாய், ஹலோ என்றே அனுப்பினாலும் வேறு மொழிகளில் அனுப்பிடுங்கள். இது அவர்களின் ஆர்வத்தை தூண்டிடும்.

 இன்றைய நாள் :

இன்றைய நாள் :

வழக்கமாக ஹாய் என்று ஆரம்பிப்பதற்கு பதிலாக இன்றைய நாள் அல்லது நேற்று நீங்கள் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவத்தை சுருக்கமாக அனுப்பிடலாம். அந்த சுவாரஸ்யத்திற்குள் நீங்கள் பேசப்போகிற நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ இருக்கிறார்களென்றால் கூடுதல் ப்ளஸ்.

வார்த்தைகள் :

வார்த்தைகள் :

இந்த முதல் அறிமுகத்தில் வார்த்தைகள் தான் மிகவும் முக்கியம். வழக்கமாக நீங்கள் அனுப்பும் மெசேஜையே சற்றே மாறுதலாக ஹே யூ... என்று ஆரம்பியுங்கள். அவசரமாக டைப் செய்கிறேன், தானாக மாறிவிடுகிறது என்ற சாக்கு போக்குகளை சொல்லி கிராமிடிக்கில் எரரினால் லவ் எரர் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

உன் நாள் :

உன் நாள் :

உன்னுடைய நாள் எப்படியிருந்தது என்ற கேள்வியை கேட்கலாம். சாதரணமாக ஹவ் யுர்ஸ் டே என்று அனுப்பினால் குட், நாட் பேட் என்ற பதிலுடன் முடிந்திடும். சற்றே நீளமான பதில் வர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள் உங்களுடைய கேள்வியை இன்னும் சுவாரஸ்யமாக்குங்கள்.

விருப்பம் :

விருப்பம் :

அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள், பொருட்கள்,ஆகியவற்றை நினைவுகூரலாம். அவர்கள் தேர்ந்த துறையில் உங்களுக்கு ஆர்வமில்லை என்றாலும் கேள்வி கேளுங்கள். அதற்காக பயங்கர டீப்பாக கூகுள் ரெஃபர் செய்து எல்லாம் கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால் அது உங்களுக்கு எதிராகவே முடிந்திடும்.

ரிப்ளை :

ரிப்ளை :

மெசேஜ் வந்த அடுத்த நொடி ஆர்வக்கோளாறில் மெசேஜ் அனுப்பி வைக்காதீர்கள். உங்களது அதீத ஆர்வத்தை சற்றே கட்டுப்படுத்துங்கள். அதே போல அவர்களிடமிருந்து உங்கள் மெசேஜுக்கு ரிப்ளை வரவில்லை என்றாலும் உடனே எரிச்சலடையாதீர்கள்.

அதே போல ரிப்ளை வரவில்லை என்றதும் அடுத்தடுத்து மெசேஜ் அனுப்பி கடுப்பேற்றாதீர்கள். இது அவர்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Start Chat Conversation In Cute Ways

Tips To Start Chat Conversation In Cute Ways
Story first published: Saturday, May 5, 2018, 13:06 [IST]
Desktop Bottom Promotion