Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
என் லவ்வர் ஒரு பார்ட் டைம் கால் கேர்ள்...? - My Story #311
என் லவ்வர் ஒரு பார்ட் டைம் கால் கேர்ள்...? - My Story #311
நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். என் சொந்த கார ஒரு டாக்ஸி நிறுவனத்துல இணைச்சு, அதுலயே டிரைவரா வேலை பார்த்துட்டு வரேன். கொஞ்சம் கஷ்டமான வேலை தான். சில சமயம் நைட் ஃபுல்லா ட்ரிப் எடுத்துட்டு, பின்ன அதுக்கடுத்த நாளே தொடர்ந்து கார ஓட்ட வேண்டிய சூழலும் இருக்கும்.

எனக்கு ஒரு காலத்துல கார் ஓட்ட ரொம்ப பிடிக்கும். ஆனா, படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம.. கார் ஓட்டுறதே வேலையா மாறுன பின்ன எப்படா கார்ல இருந்து கீழ இறங்குவோம்னு ஆயிடுச்சு. டிரைவர் வேலை ஒன்னும் அசிங்கம்னு நான் சொல்ல வரல, நாள் முழுக்க வண்டி ஓட்டுற கஷ்டத்த மட்டும் தான் சொல்ல வரேன்.
இப்படி கார்மேல இருந்த காதல் போய், வெறுப்பு அதிகமான சமயத்துல தான்... திரும்பவும் கார் மேல எனக்கு காதல் வந்துச்சு. அதுக்கு காரணம் அவ தான்...

மாமூல் கஸ்டமர்!
அவள முதல் முறையா பார்த்தது என் கார்ல ஏறும் போது தான். அதுக்கு முன்ன அந்த ஏரியாவுல அந்த பொண்ண நான் பார்த்தது இல்ல. பார்த்ததும் வர ஃபர்ஸ்ட் சைட் லவ் எல்லாம் இல்ல. அந்த ஒரே வாரத்துல என் கார்ல அந்த பொண்ணு மூணு தடவ ட்ராவல் பண்ணுச்சு. ஒருவேளை புதுசா அந்த ஏரியாவுல வேலைக்கு சேர்ந்திருக்கும் போலன்னு நெனச்சேன். ஏன்னா, நான் மூணு முறை பிக்கப் பண்ணதும் ஒரே இடத்துல சாயங்காலம் ஆறு, ஏழு மணி போல தான்.

வரல...
அந்த ஒரே வாரத்துல மூணு தடவ வந்ததால.. அந்த பொண்ண மறுபடியும், மறுபடியும் பார்க்க முடியும். அந்த பொண்ணாவே என் கார்ல வந்து ஏறும்னு நெனச்சு காத்து கிடந்தேன். ஆனா, அதுக்கப்பறம் ஒரு மாசமா அந்த பொண்ணு என் கார்ல வரவே இல்ல. என்னமோ, ரொம்ப சாந்தமான பொண்ணு, சிலர பார்க்கும் போது தான் ஒரு விதமான எனர்ஜி நம்மக்குள்ள பாஸ் ஆகும். அப்படி தான் அவள பார்த்தப்ப அந்த எனர்ஜி எனக்குள்ள வந்துச்சு.

நேர்ல போனேன்...
அந்த பொண்ணு கார்ல வராட்டி என்ன, நமக்கு தான் அந்த பொண்ண டிராப் பண்ண இடம் தெரியுமேன்னு, அந்த மூணு நாள் டிராப் பண்ண இடத்துல போய் நிண்ணு தேடி பார்த்தேன். ஆனா, அந்த வீட்டுல அப்படி ஒரு பொண்ணே இல்ல. என்னடா இது... கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கும்னு நெனச்சு வந்தா, இப்படி ஆயிடுச்சே... இனி எங்கன்னு போய் தேட முடியும்னு கவலை.

நாலாவது தடவ...
அது எங்களுக்குள்ள இருந்த கெமிஸ்ட்ரியா இல்ல, போன ஜென்மத்துல நான் பண்ண புண்ணியமான்னு தெரியல.. அந்த பொண்ணு அடுத்த ஒரு வாரத்துல திரும்ப என் கார்ல ஏறுனா. அப்ப தான் அந்த பொண்ணுக்கிட்ட மனசு திறந்து பேச ஆசைப்பட்டேன். பாதி தூரம் ட்ராவல் பண்ணப்பவே அந்த பொண்ணுக்கிட்ட பேச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். ரொம்ப சகஜமா அந்த பொண்ணும் பேசுச்சு.

நம்பர் தான் இருக்கே...
ரொம்ப சுத்தி வளைக்காம.. எனக்கு உங்கள பிடிச்சிருந்தது. போன வாரம் கூட உங்கள பார்க்க அந்த வீட்டுக்கிட்ட வந்திருந்தேன். ஆனா, அப்படி ஒரு பொண்ணே இல்லன்னு சொல்லிட்டாங்க. உங்க பேரும் தெரியாதனால... என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். நல்ல வேலையா நீங்களே திரும்ப வந்துட்டீங்கன்னு சொன்னேன்.
நீங்க லூசா, இல்ல வெள்ளந்தியா... இதுக்கு முன்ன வந்தப்ப நீங்க தான போன் பண்ணி பிக்கப் ஏரியா கேட்டீங்க... ஏன் போன் பண்ணி இருக்கலாமேனு கேட்டா.

சினிமா மாதிரி..
அந்த பொண்ணு சொன்ன பிறகு தான், அட ஆமா.. போன் நம்பர் தேடி எடுத்திருக்கலாம்னு தோணுச்சு. ஒருவேளை எனக்குள்ள பாஸ் ஆன, அதே எனர்ஜி அந்த பொண்ணுக்குள்ளயும் பாஸ் ஆகி இருக்குமோனு ஒரு நெனப்பு.
ஆனா, வெளிப்படையா காதல சொல்ல வரல. அந்த பொண்ணும் அந்த மாதிரி எதுவும் பேசல. ஏதோ ஒரு ஃபிரெண்ட்ஷிப் மாதிரி தான் எங்க உறவு ட்ராவல் ஆச்சு.
அதுக்கப்பறம்.. கம்பெனி மூலமா பிக்கப் புக் பண்ணாம... டைரக்ட் கால்ல அட்டன்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

விசாரணை!
என்னப்பத்தி யாரு என்னனு நிறையா விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டா. பரவாயில்ல படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காட்டியும், சொந்த கால்ல வேலை பண்றீங்க... நிறையா பேர் கௌரவம், மரியாதைன்னு சொல்லிக்கிட்டு எந்த வேலைக்கும் போகாம தண்டமா உட்கார்ந்துட்டு இருப்பாங்கன்னு சொன்னா.
அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்குள்ள ஒரு பூஸ்ட் மாதிரி இருந்துச்சு. பரவாயில்ல எங்க டிரைவரா வேலை பண்றதனால என்ன பிடிக்காம போயிடுமோந்னு எனக்குள்ள இருந்த தயக்கம் அப்ப தான் உடைஞ்சது.

பிரபோஸ்!
ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் பிரபோஸ் பண்ணேன். அவளுக்கும் என்ன பிடிச்சிருந்தது. லீவ் நாள்ல எல்லாம் நிறையா சும்மாவே ட்ராவல் பண்ணோம். அவ போகாத இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போனேன். உரசல், கொஞ்சல் எல்லாம் தாண்டி.. அது ஒரு வித்தியாசமான காதலா இருந்துச்சு.
அப்ப தான் எங்க உறவுல ஒரு இடி விழுந்துச்சு.

ஒரு பிக்கப்...
அன்னிக்கி காலையில பத்து மணி இருக்கும், அவ ஒரு இடத்துல சேல்ஸ் விஷயமா பேச போறேன்னு டிராப் பண்ண சொன்னா. நானும் அந்த இடத்துல டிராப் பண்ணிட்டு வந்தேன். அதுக்கு அடுத்த ஒரு மணி நேரம் கழுச்சு எனக்கு ஒரு பிக்கப் ரெக்வஸ்ட் வந்துச்சு. அதுல ஒரு ஆள் ஏறினார், அவரும் அதே இடத்துல தான் டிராப் பண்ண சொன்னாரு.
மொபைல் பேட்டரி லோவா இருக்கு... சார்ஜ் போட்டுக்கலாமான்னு கேட்டாரு. நானும் போட்டு விட்டேன்.

கால்..
அப்ப அவருக்கு ஒரு நம்பர்ல இருந்து கால் வந்துச்சு. பேட்டரி ரொம்ப லோவா இருந்ததால, சார்ஜ் டிஸ்-கனெக்ட் பண்ணாம லவுட் ஸ்பீக்கர்ல போட்டு பேசினாரு. எதிர் முனையில இருந்து பேசினது என் லவ்வர்.
அவங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டத சொல்ல வாய் கூசுது. ஒரு மணி நேரம் தான் அதுக்கு மேல வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு தான வந்தேன். இப்ப ஆல்ரெடி ரெண்டு மணி நேரம் ஆக போகுது, நீ எப்ப வந்து நான் எப்ப கிளம்புறதுன்னு... அந்த உரையாடல் தொடர்ந்துச்சு.

உடைஞ்சு போனேன்...
யாரால இத ஏத்துக்க முடியும்? அப்போ வந்த கோபத்துல அவள அங்கயே கையும் களவுமா பிடிச்சு ஒரு வாங்கு, வாங்கிட்டு தான் போகணும்னு முடிவு பண்ணேன். டிராப் பண்ணிட்டு அதே இடத்துல வெயிட் பண்ணேன்.
அவளே கால் பண்ணா... எங்க இருக்கன்னு கேட்டா... உண்ண இறக்கிவிட்ட இடத்துல தான் இருக்கேன்னு சொன்னேன். சரி! அஞ்சு நிமிஷத்துல வரேன்னு கூலா சொல்லிட்டு கால் கட் பண்ணிட்டா..

உக்கிரம்!
அவ கார்குள்ள ஏறுனதும் நாங்க எப்பவும் போற ஹோட்டலுக்கு போலாம்னு சொன்னா. என்ன பண்ணிட்டு இருந்தனு கேட்டேன்... எப்பவும் போல சேல்ஸ் விஷயமா ஒருத்தர பார்க்க வந்தேன்னு சொன்னா. எத சேல் பண்ண வந்தன்னு கேட்டேன்... 'என்ன குரல் ஒரு மாதிரி இருக்குன்னு?' கேட்டா...
திரும்ப கோவமா எத சேல் பண்ணிட்டு வரன்னு குரல உசத்தி கேட்டேன்...
என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி இருக்கன்னு கேட்டா...
என்னால ஒப்பனா அவ்ங்கக்குள்ள நடந்த விஷயத்த பத்தி கேட்க முடியல... ஆனா, கோபமும் எனக்குள்ள இருந்து குறையல...

பீச்!
கார்ல நடந்த எல்லா விஷயத்தையும், நான் லவுட் ஸ்பீக்கர்ல கேட்ட விஷயத்தையும் முழுசா சொன்னேன். பீச்க்கு போலாமான்னு கேட்டா....
அவ ஃபேமிலி பேக்ரவுன்ட், அவ படிப்பு, அவளோட தகுதி எத வெச்சு பார்த்தாலும், அவ இந்த தொழில் பண்ண அவசியமே இல்ல. எதனால இத பண்றான்னு எனக்கு தெரியல... அதுக்கான பதிலும் அவ சொல்லல.
நிச்சயமா அதுக்கு பின்னாடி ஏதோ பிரச்சனை இருக்குன்னு மட்டும் தெரியுது. ஆனா, அது என்னனு என்கிட்டே சொல்ல அவ தயங்குனா

சராசரி மனுஷன்!
நான் ஒன்னும் தனித்துவமான மனுஷன் இல்லையே.. நான் ஒரு சினிமா ஹீரோவும் இல்ல. அதெல்லாம் கேட்டுட்டு... மனச மாத்திக்கிட்டு, அவள அதுல இருந்து வெளிய கொண்டு வந்து, வேற ஊருக்கு போயி சந்தோஷமா வாழ்றது எல்லாம் சினிமாவுல மட்டும் தான் நடக்கும். என் வாழ்க்கையில அப்படி எல்லாம் எதுவும் நடக்கல.

கஸ்டமர்!
அன்னிக்கி பீச்ல எங்களுக்குள்ள நடந்த சண்டையில நான் மட்டும் தான் கத்தி, கத்தி பேசினேன். அவ ரொம்ப அமைதியா, பொறுமையா தான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா. அதுக்கு அப்பறம் நான் அவள என் லைப்ல இருந்தும், மொபைல்ல இருந்தும் அழிச்சுட்டேன்.
திரும்ப ரெண்டு தடவ என் கார்ல ஒரு கஸ்டமரா மட்டும் ஏறுனா. டிராப் லொக்கேஷன் மட்டும் கன்ஃபார்ம் பண்ணிட்டு டிராப் பண்ணிட்டு கிளம்பிட்டேன்.

போன வாரம்...
போன வாரம் தான் அவள ரெண்டாவது முறையா பார்த்தேன். ஒருவேளை நான் அவ கூட இருந்து, அது என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுல இருந்து அவள வெளிய கொண்டு வந்திருக்கணுமோன்னு இப்ப தோணுது. அதனால தான் லாஸ்ட் ஒன் வீக்கா வேலைக்கு கூட போகாமா, அவளையே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நிச்சயமா அவள அதுல இருந்து வெளியக் கொண்டு வருவேன். அது என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி!



Click it and Unblock the Notifications











