For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தகாத முறையில் நடந்துக் கொண்ட உதவி செய்து வந்த மாமா - My Story #298

தகாத முறையில் நடந்துக் கொண்ட உதவி செய்து வந்த மாமா - My Story #298

By Staff
|

எனக்கு என் அப்பா - அம்மா முகம் கூட ஞாபகம் இல்லை. நினைவு தெரிஞ்ச நாளுல இருந்த எல்லாமே அத்தையும் - மாமாவும் தான். என் அம்மா கூட பிறந்த தம்பி தான் இந்த மாமா. உறவு முறையில மாமான்னு கூப்பிட்டாலும் அவரு எனக்கு அப்பா மாதிரி, ஏன் அப்பான்னே சொல்லலாம். என்ன வளர்த்து, படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தது எல்லாமே அவரு தான்.

ஆனால், நான் பத்து வயசுல இருந்தப்ப நடந்த ஒரு சம்பவம்.. ஏறத்தாழ 14 வருஷம் கழிச்சு... மாமா என்கிட்டே தப்பா நடந்திருக்கிட்டாரோன்னு ஒரு சந்தேகத்த உருவாக்கி இருக்கு. அவரு செஞ்சது தப்பு தான். அப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்கு மறந்து போயிருந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார் விபத்து!

கார் விபத்து!

எனக்கு அப்ப மூணு வயசு தான் இருக்கும். ஒரு எதிர்பாராத கார் விபத்துல என் அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அப்ப இருந்தே என்ன தூக்கி வளர்த்துட்டு வரது என் அத்தையும் - மாமாவும் தான். என் பேருல ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருக்கு. ஆனா, அதுல அவரு ஒரு பைசா கூட எதிர்பார்த்தது இல்ல. அவரோட மகன், மகளை எப்படி வளர்த்தாரோ, அதே மாதிரி தான் என்னையும் வளர்த்து வந்தாரு.

ஒரே ஸ்கூல்!

ஒரே ஸ்கூல்!

அவரோட மகன், மகள் எந்த ஸ்கூல்ல படிச்சாங்களோ அதே ஸ்கூல்ல தான் நானும் படிச்சேன். ஒரே டியூஷன், பண்டிகை, பிறந்த நாளுக்கு எல்லாம் ஒரே மாதிரியான துணிமணின்னு எந்தவொரு பாகுபாடும் காமிக்காத மனுஷன் என் மாமா. நான் வருத்தப்பட கூடாதுன்னு எனக்கு கூடுதல் செலவும் செய்வாரு மாமா. சொல்லப் போனா, அவங்க வீட்டு இளவரசி நான் தான். எந்த ஒரு விஷயம் தொடங்குறதுக்கு முன்னாடி, என்ன பார்த்துட்டு தான் போவாரு. நான் அவருக்கு ராசின்னு சொல்லுவாரு.

ஒரு நாள்...

ஒரு நாள்...

அப்ப எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு குடும்ப விசேஷம் அத்தை, அண்ணா, அக்கா முன்னாடி கிளம்பிட்டாங்க. எனக்கு மட்டும் அன்னிக்கி எக்ஸாம் இருந்துச்சு. அதனால, மாமா, என்ன ஸ்கூல் முடிச்சு கூப்பிட்டு வந்து வீட்டுல ட்ரெஸ் மாத்திட்டு போலாம்னு சொன்னாரு. நான் யூனிபார்ம் மாத்திட்டு இருந்தப்ப, மாமா தான் ட்ரெஸ் அயர்ன் பண்ணி கொடுத்தாரு.

பத்து வயசு

பத்து வயசு

நான் அப்ப சின்ன பொண்ணு. வெறும் டவல் மட்டும் கட்டிட்டு மாமா ட்ரெஸ் அயர்ன் பண்ற வரைக்கும் காத்திருந்தேன். அயர்ன் பண்ணி ட்ரெஸ் கொண்டு வந்த மாமா, எப்பவும் போல என்ன தூக்கி கொஞ்சிட்டு இறக்கிவிடுறதுக்கு முன்ன என் மார்புல முத்தமிட்டார்.

எனக்கு அது கண்ணத்துல, நெத்தியில முத்தமிடுற மாதிரியான ஒண்ணா தான் இருந்துச்சு. இதுக்கு அப்பறம் ஒரு சில சமயம் வீட்டுல யாரும் இல்லாத போது, மாமா எனக்கு இப்படி முத்தமிட்டுதுண்டு. அந்த வயசுல அது என்னன்னு எனக்கு தெரியல.

கல்யாணம்!

கல்யாணம்!

அக்காவுக்கு 26 வயசுல தான் கல்யாணம் ஆச்சு. அவங்களுக்கு கல்யாணமான அடுத்த வருஷமே 24 வயசுல எனக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சாரு மாமா. கொஞ்சம் பணம் தேவைப்பட்டதுனால, என் பேருல இருந்த இடத்துல கொஞ்சம் வித்துட்டோம். மத்தப்படி அக்கா கல்யாணம் எப்படி நடந்துச்சோ அதே தடபுடலாக தான் என் கல்யாணமும் நடந்துச்சு.

அத்தை - மாமாவுக்கு கெட்ட பெயர் வரக் கூடாதுன்னு நான் என் வாழ்க்கையில காதலுக்கு இடம் கொடுக்கல. காதலுக்கு மட்டுமில்ல வேற எந்த விஷயத்துக்குமே... நான் இடம் கொடுக்கல. நான் ரொமான்ஸ் சம்மந்தப்பட்ட விஷயத்துல ரொம்பவே வீக்.

தேனிலவு!

தேனிலவு!

கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்துல தேனிலவு போனோம். அப்ப தான் என் கணவர், அதே இடத்துலே மார்புல முத்தமிட்டார். கிட்டத்தட்ட 14 வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த சம்பவம் திரும்ப நினைவுக்கு வந்துச்சு. நான் சுத்தமா மறந்து போன விஷயம். திடீர்னு நினைவுக்கு வந்துச்சு. மனசுக்குள்ள என்னன்னெவோ எண்ணங்கள், கேள்விகள்... அப்ப அந்த சமயத்துல மாமா என்கிட்டே தவறா நடந்துக்கிட்டார? வேற என்ன எல்லாம் நடந்துச்சு... நான் ஏதாவது மறந்துட்டேனான்னு மனசுக்குள்ள குழப்பம்.

கூசுது

கூசுது

அந்த சமயத்துக்கு அப்பறம்.. என்னால சரியா மாமா கிட்ட முகம் கொடுத்து பேச முடியல. ஆனா, அவர் கூடா பேசாம தவிர்க்கவும் முடியல. அந்த சம்பவத்த பத்தி யார் கிட்டயும் வெளிய சொல்லவும் முடியாமல்... மறைக்கவும் முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

மாமா வீட்டுல இருந்தப்ப... பகல் நேரத்துல ஹால்ல படுத்துட்டு டிவி பார்க்குறது, எல்லாரும் சேர்ந்து பேசுறது வழக்கம். அப்ப எல்லாம் மாமா என் பக்கத்துல தான் வந்து படுத்துப்பார். அதெல்லாம் கூட எனக்கு ஏதோ இப்ப நெனச்சா கூசுது.

சமீபத்தில்...

சமீபத்தில்...

சமீபத்துல கூட என் கணவர் வெளியூர் போறதுனால... என்ன மாமா வீட்டுல ரெண்டு வாரம் இருந்துட்டு வான்னு விட்டுட்டு போனாரு. நான், அத்தை, அக்கா.. அக்கா குழந்தைங்க எல்லாரும் ஹால்ல படுத்துட்டு இருந்தோம். அப்பவும் மாமா என் பக்கத்துல தான் வந்து படுத்தாரு. என்னால, அவரு வந்ததும் எழுந்து சடார்னு போகவும் முடியல.. அங்கேயே இருக்கவும் முடியல. நான் அப்பாவா நெனச்ச ஒருத்தர் எப்படி என்கிட்டே தவறா நடந்துகிட்டார், அவருக்கு எப்படி மனசு வந்தது...? அவருக்கும் ஒரு மகள் இருக்காங்க.

அவர் ரொம்ப நல்லவர் தான். நிச்சயமா இத யார் கிட்டயும் நான் சொல்ல போறது இல்ல. ஆனா, இத எப்படி நான் மறக்க போறேன், மறைக்க போறேன்னு தான் தெரியல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My Uncle Misbehaved with Me. I do not want to take any Legal Step

Real Life Story: My Uncle Misbehaved with Me. I do not want to take any Legal Step
Desktop Bottom Promotion