For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர் அனுமதியுடன் என் வாழ்க்கையை சீரழித்த ஆசிரியர்... - My Story #297

பெற்றோர் அனுமதியுடன் என் வாழ்க்கையை சீரழித்த ஆசிரியர்... - My Story #297

By Staff
|

இன்னும் அந்த தருணத்தை பற்றி நினைத்தால், என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். என் வாழ்வில் மிகவும் வலி மிகுந்த நாட்களாக அதை நான் கருதுகிறேன். ஏறத்தாழ ஒரு பத்து வயது பெண் குழந்தை வாழ்வில், அதுவும், அவள் கூறுவதை அவள் பெற்றோரே நம்ப மறுத்த நாட்கள் மிகவும் கொடுமையானவை.

அந்த வலியை, வேதனையை, அடைந்த பாதிப்பை வேறு யாரிடமும் கூட இயலாது நிலை. என் மீது அன்பு செலுத்தும் நபர்களிடத்திலும் கூட அதை கூற முடியவில்லை.

Real Life Story: I was Sexually Abused my Tutor with the Permission of my Parents!

அப்போது எனக்கு பத்து வயது. சரியாக 2010ம் ஆண்டு. நான் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு செல்லும் போது என்னை புதிய பள்ளியில் சேர்த்தனர். அந்த புதிய பள்ளி எனக்கு சௌகரியமாக இல்லை. என் பழைய பள்ளி மற்றும் அங்கிருந்த என் நட்புகளை நான் மிகவும் மிஸ் செய்தேன். இதனால், எனக்குள் பதட்டம் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதட்டம்!

பதட்டம்!

இந்த பதட்டத்தின் காரணத்தால், பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்தன. வெகுவாக அனைத்து பாடங்களிலும் மதிப்பெண் குறைய துவங்கியதால். என் பெற்றோர் வீட்டுக்கே வந்து ஒரு ஆசிரியர் கற்பித்து செல்ல ஏற்பாடு செய்தனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஆகவே, ஆசிரியரிடம் நான் நன்கு படிக்க வேண்டும், மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பர்மிஷன் கொடுத்தனர்.

மிரட்டல்!

மிரட்டல்!

ஆரம்பத்தில் அடி, மிரட்டல், திட்டு என துவங்கி, பின்னாளில் அது வேறு வகையான துன்புறுத்தலாக மாறியது. அது எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான வன்கொடுமை என்பதைய நான் வயது வந்த பிறகே அறிந்தேன். அது நரகத்தை காட்டிலும் கொடுமை. முதலில் என்னை தவறான ரீதியாக தீண்ட ஆர்மபித்தார். பின்னர் கற்பழிப்பை என்பதை தாண்டி, அவை என்னை அந்தரங்க பாகங்களில் கொடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

மறுப்பு!

மறுப்பு!

இதுக்குறித்து நான் பெற்றோரிடம் எப்படி கூறுவது என்று விளக்க முடியாத வயது. எனவே, அவர் என்னை அடிக்கிறார், வலிக்கிறது என்று மட்டுமே கூற தெரிந்தது. நான் படிக்க சோம்பேறித்தனப்பட்டு வீட்டு ஆசிரியர் மீது புகார் அளிக்கிறேன் என்று கருதிய பெற்றோர், என்னை நம்புவதற்கு தயாராக இல்லை.

அவமானம்!

அவமானம்!

என்னை நானே ஒரு அவமான பொருளாக கருதும் வகையில் (இன்றளவும்) என்னை கொடுமைப்படுத்தினார். அவர் சில காலங்களில் என் வாழ்வில் இருந்து நீங்கிவிட்டாலுமே கூட, அவர் எனக்கு செய்த கொடுமைகள் வாழ்நாளில் மறக்க முடியாத காயங்களாய் உள்ளன. இந்த கொடுமைகளுக்கு மத்தியிலும் என்னை காத்த மூவர், என் தோழமைகள்.

தோழி!

தோழி!

ஒருசில மாதங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு என் குழந்தை பருவத்தில் நடந்த கொடுமைகள் குறித்து தெரியும். பத்து வயதில் இருந்தே அவர்கள் எனக்கு தோழர்/ழிகள். ஒருத்தி எனக்காக பிறந்த தேவதை என்றே கூறலாம். அவள் என் காயங்களுக்கு மருந்தளித்தவள். என்னை அந்த வயதில் அதிகம் சிரிக்க செய்தவள்.

சகோதரன்!

சகோதரன்!

மற்றொருவன் என் தம்பியை போல. எனக்கும் அவனுக்கும் சில மாதங்கள் தான் வயது வித்தியாசம். ஆனாலும், சகோதரத்துவம் அதிகமாக கொண்டவன். என் மீது அவனுக்கான உரிமை அதிகம். அவனுக்கு என் குழந்தை பருவத்தில் நடந்த கொடுமைகள் குறித்து தெரியாது. ஏன் என்றால் அவன் மிகவும் கோபக்காரன். தேடிப்பிடித்து சென்று நிச்சயம் ஏதாவது செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். ஆகையால், அவனிடம் மட்டும் அந்த நிகழ்வுகள் குறித்து நான் இன்றளவும் கூறவில்லை.

நேசத்திற்குரியவன்!

நேசத்திற்குரியவன்!

மூன்றாவது நபர் என் மீது அதிக அன்பு கொண்டவன். இது காதல் தான்... ஆனால், தூய்மையான நட்பில் இருக்கும் காதல். ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான் என் வாழ்வில் நடந்த அந்த அபாயமான பாகத்தை பற்றி கூறினேன். ஒரு ஆணுக்கு இவ்வளவு அழுகை வரும் என்பதை அன்றைய தினம் தான் நான் கண்டேன்.

அதிலும், ஒரு தோழிக்கு நடந்த கொடுமையை எண்ணி, தேம்பி, தேம்பி அழுதான். எனக்கு நிறைய ஆறுதல் கூறினான். நீ மிகவும் வலிமையான பெண், வேறு ஒரு பெண்ணாக இருந்தால், இன்று இப்படி இருந்திருப்பாளா என்று என்னால் யோசிக்க கூட முடியவில்லை என்று கூறினான்.

வலிமாயனவள்!

வலிமாயனவள்!

நான் இன்று வலிமையான பெண்ணாக இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் இந்த மூவரும் தான். அவர்கள் தான் அந்த காயத்தில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் என்னை வெளியே அழைத்து வந்தனர். இன்றும் என்னுடன் தினமும் இரண்டு மணி நேரமாவது செலவழிக்கும் அன்பானவர்கள் இவர்கள் தான்.

நான் இவர்கள் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்திருப்பதை என் பெற்றோர் விரும்பவில்லை. ஈது தவறாக முடியுமோ என கருதுகிறார்கள். ஆனால், நான் அவர்கள் மூவரையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும்.

என் பெற்றோரை விடவும், என் வாழ்வில் அதிக உரிமையும், நல் அக்கறையும் கொண்டவர்கள் அந்த மூவர் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I was Sexually Abused my Tutor with the Permission of my Parents!

Real Life Story: I was Sexually Abused my Tutor with the Permission of my Parents!
Desktop Bottom Promotion