For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவள வேற ஒருத்தன் கூட பார்த்ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321

அவள வேற ஒருத்தன் கூட பார்த்ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321

By Staff
|

எனக்கு அவள சின்ன வயசுல இருந்தே தெரியும். விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே அவன்னா எனக்கு உசுரு. என்ன யாராச்சும் தலையில கொட்டுனாலோ, என் முடிய பிடிச்சு இழுத்தாலோ பிடிக்காது. ஆனா, அவ பண்ணா மட்டும் பொறுத்துப்பேன். அது என்னன்னே தெரியல, அவ மேல எனக்கு கோபம் வந்ததே இல்ல. மனசுக்குள்ள, ஏன் கனவுல கூட நான் அவள திட்டுனதே இல்ல.

Real Life Story: I Can Not Tolerate That She is Living With Someone Else!

இதுக்கு பேரு காதல், நான் அவள காதலிக்கிறேன்னு தெரியாமலே ரொம்ப நாளா அவள காதலிச்சிட்டு வந்தேன். சில சமயம் நடுராத்திரி எழுந்து சும்மா உட்கார்ந்துட்டு அவள பத்தி நெனச்சுட்டு இருந்திருக்கேன். ஏன், வகுப்புல இயற்பியல் வாத்தியார் கிளாஸ் எடுத்துட்டு இருக்கும் போது, போர்டுல அவ முகம் பல தடவ வந்துட்டு போயிருக்கு. அதென்ன குறிப்பா இயற்பியல்னு யாராச்சும் கேட்கலாம். என்னவோ சுட்டுப் போட்டாலும் அது எனக்கு வந்ததே இல்ல.

அதனால, அந்த வகுப்புல தான் அதிகமா கனவு காண்பேன். என் கனவுல அவதான் வருவா. எப்படியும் ஒரு நாள் அவளும், நான் சேர்ந்து வாழ்ற காலம் வரும்னு காத்திருந்தேன். கிட்டத்தட்ட அது நடக்குறதுக்கான வாய்ப்பு 90% கைக்கூடி வந்துச்சு. ஆனா, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலங்கிறது போல. எங்க கல்யாணம் நடக்காம போச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேமிலி!

ஃபேமிலி!

நாங்க ரெண்டு பேரும் நிறையா பழகி இருக்கோம். காரணம், என்னோட சின்ன வயசுல இருந்து, ஸ்கூல், காலேஜ், வேலைக்கு ஜாயின் பண்ண வரைக்கும் இருக்க பொதுவான ஃபிரெண்ட்ஸ்ல அவளும் ஒருத்தி. அவளுக்கும் நான் அப்படி தான். ஒரே தெருவுல பக்கத்து, பக்கத்து வீடு. ரெண்டு ஃபேமிலியும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ். தீபாவளி, பொங்கல்னு இல்ல, ரெண்டு குடும்பத்துல யார் வீட்டுல கல்யாணமா இருந்தாலும் அத ஒரே வீட்டு கல்யாணமா தான் எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் நடந்திருக்கு.

வேலை!

வேலை!

கிட்டத்தட்ட பூவெல்லாம் உன் வாசம் படத்துல வர ஃபேமிலி மாதிரி வெச்சுக்கங்களே. எனக்கு கிரியேடிவ் ஃபீல்டுல இண்டரஸ்ட் அதிகமா இருந்துச்சு. கதை எழுதுறது, கட்டுரை எழுதுறது, ஷார்ட் ஃபிலிம் எடுக்கணும், படம் பண்ணனும், விளம்பரம் எடுக்கணும்னு என்னோட வழி கொஞ்சம் வேற மாதிரியானதா இருந்துச்சு. அதனால, மத்தவங்க மாதிரி நான் காலேஜ் முடிச்ச உடனே பெருசா சம்பாதிக்க ஆரம்பிக்கல.

மத்தவங்க!

மத்தவங்க!

என் குடும்பத்துல எல்லாருமே ஐ.டி. நான் என் குடும்பம்னு சொல்றது அவளோட குடும்பத்தையும் சேர்த்து தான். நான் கிரியேடிவ் ஃபீல்டுகுள்ள போறேன்னு தெரிஞ்சதும் எல்லாருமே பாராட்டுனாங்க. அவ உட்பட. பரவாயில்ல நீயாவது புதுசா யோசிக்கிற, நீ நல்லா வருவன்னு தட்டிக்கொடுத்து பாராட்டுன முதல் ஆளே, அவளும், அத்தையும் (அவளோட அம்மா) தான். என்ன மட்டுமில்லாம, நான் தேர்வு பண்ணியிருக்க பாதையும் அவளுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும், அவமேல இருந்த காதல் இன்னும் சிலபடி ஜாஸ்தி ஆச்சு.

சொல்லாமலே!

சொல்லாமலே!

நாங்க ஒருத்தர ஒருத்தர் உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லிக்கிட்டதே இல்ல. நான் சொல்லாம இருந்தத காதல்னு அவ புரிஞ்சுக்கிட்டா. அவவேலை கிடைச்சு வெளியூர் ட்ரெயினிங் போனப்ப, நானும், என் அக்காவும் தான் கூட போய் ஒரு வாரம் தங்கி இருந்தோம். நான் அவள எவ்வளோ காதலிக்கிறேன், எப்பல இருந்து காதலிக்கிறேன்னு என் அக்காவுக்கு முழுசா தெரியும்.

கிடுகிடு வளர்ச்சி!

கிடுகிடு வளர்ச்சி!

ஐ.டி மட்டும் தான் வேலையா, அதுல மட்டும் தான் சம்பாதிக்க முடியுமா? ஏன் எல்லாரும் ஐ.டி, ஐ.டி.னு ஓடுறாங்கனு முதல்ல எனக்கு தெரியல. படிச்சு முடிச்சு, வேலைன்னு ஒன்னு கிடைச்சு, அதுல நாம சம்பாதிக்கிறோம் பாருங்க. அப்ப தான் எல்லாருக்கும் ஒரு மூலையில பேசாம நாமளும் இதையே படிச்சிருக்கலாம் போல. இவங்களுக்கு மட்டும் எங்கிருந்த இப்படி பணம் வருதுன்னு யோசிக்க வைக்கும். நானும் அப்படி யோசிச்சேன். ஆனால், எனக்குள்ள இருந்த பேஷன், கிரியேட்டிவ் மைண்ட் சொல்லுச்சு.. டேய்! நீ தப்பிச்சுட்டனு நெனச்சுக்கோ... நீ சூஸ் பண்ண பாதை தான் ரைட்டுன்னு. அதனால மனச தேத்திக்கிட்டு நகர்ந்து போயிடுவேன்.

அவள நகர்ந்து எப்படி?

அவள நகர்ந்து எப்படி?

மத்தவங்கன்னா நகர்ந்து போயிடலாம். அது என் அண்ணா, அக்கா, மாமா பசங்க யாரா இருந்தாலும் சரி. ஆனால், சின்ன வயசுல இருந்து நான் காதலிச்ச பொண்ணு கிடுகிடுன்னு வளர்ந்து நிக்கிறா, அவ சம்பளம் நாலு வருசத்துல ஐம்பதாயிரத்த தாண்டி நிக்கிது. நான் இன்னும் ஃப்ரீலான்ஸிங் பண்ணிக்கிட்டு. அப்பப்ப இரண்டாயிரம், மூணாயிரம் வாங்கிட்டு சுத்திட்டு இருக்கேன். அதிகபட்சமா நான் ஒரே மாசத்துல சம்பாதிச்ச தொகை 18 ஆயிரம். நான் எப்படி அவள கடந்து வர முடியும்.

மாப்பிளை

மாப்பிளை

ஒருக்கட்டதுல அவ வீட்டுல மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல லேசா இருந்தாலும். கொஞ்ச நாள்லயே எங்க வீட்டுலையும் அவளுக்கு விழுந்து, விழுந்து மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சாங்க. என் அக்காவே அவளுக்கு தெரிஞ்ச ரெண்டு பேர சட்ஜஸ்ட் பண்ணா. என்னடி கூட இருந்து, எல்லாமே தெரிஞ்சுட்டு நீயே இப்படி பண்றனு கேட்டா. அந்த ரெண்டு பேர அம்மாவுக்கே தெரியும். அவங்க தான் முதல்ல கேட்டாங்கனு சொன்னா.

பொறுமை ஆகாது...

பொறுமை ஆகாது...

இன்னும் எத்தனை நாளுக்கு பொறுமையா இருக்கிறது பேசாம வீட்டுல சொல்லிடலாம்னு தோணுச்சு. ஆனா, முதல்ல அவக்கிட்ட பர்மிஷன் கேட்கணும். ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சொன்னா, நிச்சயமா ரெண்டு பெத்து வீட்டுலையும் ஒத்துப்பாங்கனு நல்லாவே தெரியும்.

ஏன்னா, எங்களுக்குள்ள ஜாதி, மதம் வெங்காயம் ஏதும் பார்க்குற பழக்கம் இல்ல. ஸ்டேடஸ்னு எடுத்துக்கிட்டா ரெண்டு குடும்பமும் ஒரே மாதிரியானது தான். சரி! அவக்கிட்ட பேசிட்டு வீட்டுல சொல்லிடலாம்னு நெனச்சேன்.

செட்டில்!

செட்டில்!

என்ன சொல்றது.. உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு உண்ண பிடிக்கும்.. அது மட்டும் வாழ்க்கைக்கு போதுமா.... நீ என்ன வேலை பார்க்குறங்கிறது என் கேள்வி இல்ல. நீ என்ன சம்பாதிக்கிற? நீ எப்ப வாழ்க்கையில நிலையா செட்டிலாவ? ரெண்டு வருஷம், அஞ்சு வருஷம்... எதாச்சும் கரக்டா ஒரு டைம் சொல்லு?னு சரவெடி மாதிரி வெடிச்சா...

என்னன்னு சொல்ல...

என்னன்னு சொல்ல...

செட்டிலா...? செட்டிலாயிட்டு தான் கல்யாணம் பண்ணனும்னா இங்க முக்கால்வாசி பேரு சாகுற வரைக்கும் பேச்சுலரா தான் இருக்கணும். இன்னொரு விஷயம் என் ஃபீல்டுல வாய்ப்பு கிடைக்கிறதே குதிரை கொம்பு, இதுல கரக்டா எப்ப செட்டிலாவன்னு கேட்டா என்னனு பதில் சொல்றது. இதுக்கும் அவ ஐம்பதாயிரம் பக்கம் சம்பாதிச்சுட்டு இருந்தா அந்த டைம்ல.

அவ்வளோ தான்.. அத்தோட... சுக்குநூற உடைஞ்சு போச்சு என் மனசு.

நாலு வருஷம்!

நாலு வருஷம்!

அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. அவ என்ன எப்ப செட்டிலவனு கேட்டு ரெண்டு வருஷம் கழிச்சு தான் அவளுக்கு கல்யாணமே ஆச்சு. ஆனா, அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் எனக்கு பெரிய சம்பளம்னு எதுவும் இல்ல. இப்ப கிட்டத்தட்ட முப்பது, நாப்பது ஆயிரம் சம்பாதிக்கிறேன். ஆனா, அவ என்கிட்ட இல்ல. அவ கேட்ட அந்த செட்டில்ங்கிற பொசிஷனும் இன்னும் நான் அடையல.

கஷ்டம்!

கஷ்டம்!

சின்ன வயசுல இருந்தே பார்த்து, பார்த்து வளர்ந்தது என் காதல். நல்ல வேளையா அவ கல்யாணம் முடிஞ்ச கையோட ஆறு மாசத்துல மெல்பார்ன் போயிட்டா. கூடவே இதே ஊருல இருந்திருந்தா இன்னுமும் கூட நிறையவே வலிச்சிருக்கும். அப்பப்ப இந்த தீபாவளி, பொங்கல்னு வந்து தொலையும் போது ஃப்ளைட்டு பிடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்திடுறா.

எப்ப விஷேசம்?

எப்ப விஷேசம்?

என்ன பண்றது, வீட்டையும் மாத்த முடியாது, அவளுக்காக அவளோ பெரிய சொந்தத்தயும் விட முடியாது. ஒவ்வொரு தடவையும் அவள வேற ஒருத்தன் கூட பார்க்கும் போது வாழ்வே பிடிக்கல. நெஞ்செல்லாம் எரியுது. ஆனா, ஒன்னும் பண்ண முடியாதே.. போலியா சிரிச்சுட்டு... அப்பறம்.. எப்ப விஷேசம்னு கேட்டுட்டு டாட்டா காட்டிட்டு கிளம்பிடுவேன்.

பணம்... இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லாம இருந்திருந்தா.. இங்க பலரோட அழகான காதலும், கனவுகளும் உடைஞ்சுருக்காதுல...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Can Not Tolerate That She is Living With Someone Else!

No one can understand until or unless their lovable one is moved on with someone else or living with some-other. This is what happened in my love.
Story first published: Wednesday, November 14, 2018, 16:34 [IST]
Desktop Bottom Promotion