For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280

எல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280

By Staff
|

கடவுள் ஒரு கதவ சாத்திட்டா.. இன்னொரு கதவ திறப்பான்னு சொல்வாங்க. அப்படி கடவுள் எனக்கு திறந்த கதவு தான் அவன். கதவுன்னு சொல்ல கூடாது, என் உலகம். எதிர்பாராத விதமா அடுத்தடுத்த வருச்தத்துல என் அப்பா, அம்மாவ இழந்தேன். அப்ப நான் வேலைக்கு போயிட்டு இருந்தேன். பொருளாதார ரீதியா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால், உணர்வு ரீதியா, உறவு ரீதியா நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

என்ன ஏன் இவ்வளவு அழகா, பாசமா வளர்த்தீங்கன்னு என் அப்பா அம்மா தினமும் திட்டுவேன். ஒருவேளை அவங்க கொஞ்சம் என் மேல கம்மி பாசம், அக்கறை காமிச்சிருந்தா நான் இவ்வளவு கவலை பட்டிருக்க மாட்டேன். ஏறத்தாழ அவங்க இறந்து ஆறேழு மாசம் ஆகியும் கூட, ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா... மறுநாள் காலையில ஆபீஸ் ரெடி ஆகுற வரைக்கும் அழுகை மட்டும் தான் என் கூட துணையா இருந்துச்சு.

நான் கொஞ்சம் பார்க்க உடல் பருமனா தான் இருப்பேன். எத்தனை டயட், எக்ஸர்சைஸ் பண்ணியும் குறையாத அந்த வெயிட்.. அந்த ஆறேழு மாசத்துல எப்படி குறைஞ்சதுன்னு எனக்கு தெரியல... நிறைய பேர்... எங்க நான் ஏதாவது தப்பான முடிவு எடுத்திருவேனோன்னு நெனச்சாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் பார்க்க..

பெண் பார்க்க..

ஒரு நாள் மாமாவும், அத்தையும் வீட்டுக்கு வந்தாங்க.. எப்பவும் நான் தான் அவங்க வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறை போயிட்டு வருவேன். அதிசயமா அவங்க என்ன தேடி வீட்டுக்கு வந்தாங்க. எப்பவும் போல அழுத முகத்தோட தான் ஹால்ல உட்கார்ந்துட்டு இருந்தேன். அப்பாவோட மரணம் எங்களுக்கு எப்போவோ தெரியும். ஆனால், அம்மாவோட மரணம் யாருமே எதிர்பார்க்காத ஒன்னு. அதனால தான் மனசுல இவ்வளவு பெரிய பாரம், ஏக்கம், கவலை.

அவன்!

அவன்!

அன்னிக்கி வீட்டுக்கு வந்த அத்தை, மாமா.. இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்க போற.. உன் அம்மாவே உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டு போயிடனும்ன்னு தான் அடிக்கடி சொல்வாங்க. அவங்க ஆசை கண்டிப்பா நடக்கணும். அப்ப தான் அவங்க சந்தோசப்படுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. ஐடியாங்கிறத தாண்டி என் மனநிலை அதுக்கு ஒத்துழைக்கல.

ஒரு நாள்!

ஒரு நாள்!

அத்தை மாமா இதப்பத்தி பேசி ஒன்னு ரெண்டு வாரம் இருக்கும். அன்னிக்கி ஞாயிற்றுக்கிழமைன்னு நினைக்கிறேன். வீக்கென்ட் மாமா வீட்டுல தான் தங்கி இருந்தேன். நான் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருந்தேன். ரொம்ப நேரமா அத்தை குளிச்சுட்டு வான்னு சொல்லிட்டே இருந்தாங்க. சண்டே தான... எதுக்கு அவசரம். எங்கையாவது வெளியே போறோமான்னு கேட்டேன். அவங்க சொன்ன பதில் எதுவுமே சரியில்லை.

அப்ப தான் நாங்க பேசிக்கிட்டே இருக்கும் போது ஒரு கார் வந்து நின்னுச்சு.

மூஞ்சில அடிச்சாப்பல...

மூஞ்சில அடிச்சாப்பல...

ரெண்டு பேர் வந்தாங்க... ஒருத்தன் உயரமா கொஞ்சம் குண்டா இருந்தான்.. ஒருத்தன் சுமாரான உசரம்... அவங்கள நான் முன்னப்பின்ன வந்ததே இல்ல. மாமா யாரோ உங்கள பார்க்க வந்திருக்காங்கன்னு கூப்பிட்டேன். அவங்க என்ன பார்க்க வரல, உன்ன தான் பார்க்க வந்திருக்காங்கம்மான்னு மாமா சொன்னாரு. ஆமா, பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க. பொண்ணு பார்க்க வரும் போது எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அப்படி தான் நான் அன்னிக்கி இருந்தேன்.

பெருசா எதுவுமே பேசல. உசரமா குண்டா இருந்தவரு தான் எனக்கு பார்த்த மாப்புள. நான் முன்னாடி குண்டா தானே இருந்தேன். அதுக்கு ஏத்தாப்புல பார்திருந்தாங்க போல. தண்ணி மட்டும் குடிச்சிருப்பாங்க. அத்தை காப்பி போட்டு எடுத்துட்டு வரதுக்குள்ள. எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டேன்.

வருத்தம்!

வருத்தம்!

ஏதோ நெனப்புல மூஞ்சில அடிச்சாப்புல பேசிட்டேன். ஆனா, அவங்க போனதுக்கு அப்பறம் நிறையா வருத்தப்பட்டேன். என்ன இருந்தாலும் அப்படி பேசி இருக்க கூடாது. ஒருவேள அந்த பையன் குண்டா இருக்கனால தான் நான் அப்படி பேசிட்டேன் அவன் வருத்தப்பட்டிருந்தா... அந்த வருத்தம், வலி எனக்கும் தெரியும். அம்மா இருக்கும் போதே சிலர் நான் குண்டா இருக்கேன்னு வேண்டாம்ன்னு அவாய்ட் பண்ணியிருக்காங்க. திரும்ப கூப்பிட்டு சாரி சொல்லலாம்ன்னு தோணுச்சு. ஆனா, கல்யாணமே வேண்டாம்ன்னு ஆனதுக்கு அப்பறம் எதுக்கு.. அப்படியே விட்டுடலாம்ன்னு நெனச்சுட்டேன்.

ஆறேழு மாசம்!

ஆறேழு மாசம்!

அப்பறம் கொஞ்ச நாள் போச்சு.. நானும் வேலை, ஃபிரெண்ட்ஸ் அப்படி இருப்படின்னு கொஞ்சம் வருத்தம் குறைஞ்சு அப்பா, அம்மாவ நெனச்சு அழறத விட்டுட்டேன். அந்த சம்பவத்துக்கு அப்பறம் நானா கேட்குற வரைக்கும் மாப்பள பார்க்க வேண்டாம்ன்னு அத்தை, மாமா விட்டுட்டாங்க. மாமா வீட்டுல எனக்காக வந்த ஜாதகம் சிலது டேபிள்க்குள்ள அப்படியே இருந்துச்சு. அப்ப தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்துச்சு.

அவனுக்கும்...

அவனுக்கும்...

என்ன மாதிரியே அவனுக்கும் அப்பா, அம்மா இல்ல. அப்ப தான் நான் பேசுனது அவனுக்கு எவ்வளவு பெரிய வலி கொடுத்திருக்கும்ன்னு நெனச்சேன். பெரிய தப்பு பண்ணது மாதிரி மனசுக்குள்ள ஒரு வருத்தம். மாமாக்கிட்ட போய் அதே பையன கூப்பிட்டு பேச சொன்னேன். அவங்க சொந்தக் காரங்க ஒருத்தங்க நம்பர் தான் இருந்துச்சு. ஆனால், அவங்க சரியா பதில் சொல்லல. அவன் ஏதோ அமெரிக்கா போக போறதா கேள்விப்பட்டேன். இதுக்காக தான் ஆசைப்பட்டு பேசுறேன்னு நெனச்சுப்பான்னு, அதுக்கு அப்பறம் பெருசா இன்ட்ரஸ்ட் எடுத்துக்கல.

கால் வந்துச்சு...

கால் வந்துச்சு...

ஒரு வாரம் கழிச்சு ஒரு கால் வந்துச்சு... அவன் சொந்த காரங்க ஒருத்தங்க தான் பேசுனாங்க. கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டாங்க. மாமாக்கிட்ட பேசுங்கன்னு சொன்னேன். அப்பறம் தான் மாமா தான் நம்பர் கொடுத்தாரு. எதுக்கும் உன் சம்மதம் கேட்டுட்டு அப்பறமா பையன் கிட்ட சொல்லிக்கலாம்ன்னு சொன்னாங்க. எல்லாத்துக்கும் சம்மதம்னா எனக்கும் ஓகேன்னு சொல்லிட்டு வெச்சுட்டேன். ரொம்ப நாள் கழிச்சு என் மனசுல ஒரு இனம் புரியாத சந்தோஷம்.

ரொம்ப நல்லவன்...

ரொம்ப நல்லவன்...

நல்லவனுக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டு இதெல்லாம் தான் இருக்கணும்ன்னு சொன்னா... அதுல 90% அவன்கிட்ட எல்லாமே இருக்கும். என்ன ரொமான்ஸா பேசுறதுக்கு மட்டும் வராது. மத்தப்படி நல்லா புரிஞ்சு, அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கிற கேரக்டர். இவனையா அன்னிக்கி மூஞ்சில அடிச்சாப்புல பேசி அனுப்புனோம்ன்னு அப்பப்ப தோணும். அதுக்காக அத சொல்லி, சொல்லி சாரியும் கேட்டிருக்கேன். போதும்மா.. ஒரு டைம் பண்ணாதே போதும்... திரும்ப, திரும்ப அதையே சொல்லி, சொல்லி கொல்லாதன்னு சொல்லுவான்.

நன்றி!

நன்றி!

ஒருவேளை அம்மா, அப்பா தான் இவன எனக்காக அனுப்பி இருக்காங்களோன்னு நெனச்சுப்பேன். அம்மா, அப்பாங்குறது ஒரு உலகம்.. அதுக்குள்ள நாம ஒரு அங்கம். ஆனா, கணவன், மனைவிங்கிறது நாம உருவாக்கிக்கிற உலகம். அது எல்லாருக்கும் ஆரம்பத்துல இருந்த அழகா, நல்லதா அமையாது. அப்படி ஒரு உலகத்த.. நான் ஒதுக்குன ஒரு உலகம்.. எனக்காக ரொம்ப அழகா அமைஞ்சிருக்கு. நிச்சயம்... அம்மா, அப்பாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். அவங்க ஆசீர்வாதம் இல்லாட்டி... இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அமைஞ்சிருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: After My Parents Death, I Felt Like Lost Everything. But, Got Sent Him as a Precious Gift of My life!

Real Life Story: After My Parents Death, I Felt Like Lost Everything. But, Got Sent Him as a Precious Gift of My life!
Desktop Bottom Promotion