For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுக்குப் பேரும் லவ் பெய்லியர்னு சொல்லலாம்! My Story # 218

ஒரு பெண் திருமணத்தை முடிப்பதற்குள் அவள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிய தொகுப்பு

|

எல்லாமே ரூல்ஸ்படி வரிசையாக காலவரிசை கூட மாறாமல் அப்படியே அந்தந்த பருவத்தில் கண்டிப்பாக எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா என்ன? டிகிரி முடித்ததுமே 21 வயதில் திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப்போகிறோம். அதே 25 வயதுக்கு மேல் செய்து கொண்டால் என்ன? இதைத் தான் கேட்டேன்..... திட்டி தீர்த்து விட்டார்கள்.

நண்பர்களுடன் மிகவும் ஜாலியாக கொடைக்கானலில் படித்தேன்,விடுதி வாழ்க்கை மிகவும் சுவரஸ்யம் நிறைந்ததாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுத் தருபவையாக இருந்தன. எதையும் எளிதாக கையாளத்தெரிந்த எனக்கு இந்த வாழ்க்கையை, காதலை கையாளத் தெரிந்திருக்கவில்லை.

தோழிகள் சொல்வதைக் கேட்டும், திருமணமான அக்காக்கள் சொல்வதைக் கேட்டும் திருமணம் குறித்த பயம் மனதில் இருந்தது. அதோடு 25 வயது வரை வாழ்க்கை குறித்த எந்த முடிவுகளையும் நாம் எடுக்க கூடாது. படிப்பு முடிந்து விட்டாலே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்ன அவசியம் வாழ்க்கையை வாழலாம்.... இளமை என்ன அப்படியே இருக்கப்போகிறதா என்ற எண்ணமும் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளையாட்டு :

விளையாட்டு :

நான்கு வருடம் வெளியூரில் இருந்ததினால் வீட்டில் பயங்கர கவனிப்பு கூடவே நான் பயங்கரமாக ஆட்டம் போட்டேன் என்று தான் சொல்லவேண்டும். மூன்று மாத காலம் வேலை குறித்தோ திருமணம் குறித்தோ எதுவும் பேசவில்லை. வெளியில் சுற்றுவது, படம் பார்ப்பது,நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது என்றே தான் இருந்தது.

யாரோட பேசுற :

யாரோட பேசுற :

நண்பர்கள் ஒவ்வொருவரும் வேலை, கல்யாணம் என்று செட்டில் ஆக நான் மட்டும் ஒன்றும் செய்யாமல் வெட்டியாய் இருந்தேன், ஒவ்வொராக என்ன பண்ற என்று கேட்க ஆரம்பிக்க இவர்களுக்கு பதில் சொல்லவாவது எதாவது ஒரு வேலையில் போய் உட்கார வேண்டியிருந்தது.

ஒண்ணுக்கு நாலு வாட்சப் க்ரூப் ஆரம்பித்து போனிலேயே மூழ்கி கிடக்க.... வீட்டினருக்கு வரும் வழக்கமான சந்தேகம் எழ ஆரம்பித்தது.

எல்லாரையும் பாரு :

எல்லாரையும் பாரு :

என் வீட்டில் எல்லாரும் செம்ம க்ளோஸ் அப்பா செல்லம் நான், அம்மா மெல்ல திருமண பேச்சை ஆரம்பித்தார்..... இப்ப இருந்தே பாக்க ஆரம்பிச்சா தான, காலாகாலத்துல பண்ணிகொடுத்துட்டா நம்ம வேல முடிஞ்சது என்றார். அப்பா ப்ளீஸ் நீ சொல்லு ஐ ம் ஜஸ்ட் 21 என்றேன்.

பேசாதே என்று சைகை காண்பித்தார். அதன் பிறகு வெளியே அழைத்துச் சென்றார். அங்க பாரு.. இவங்களப்பாரு என்று திருமணமான தம்பதிகளை கை காட்டினார். எல்லாம் இந்த வயசுல கல்யாணம் பண்ணவங்க தான் என்று வேறு விதத்தில் அட்வைஸ் செய்தார்.

அப்பா ப்ளீஸ் :

அப்பா ப்ளீஸ் :

அப்பா தயவு செஞ்சு மொக்கப்போடாதப்பா..... முடியல நான் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கேன் ப்ளீஸ்.... அதுவரைக்கும் நாங்க ஃப்ரீயா இருக்கணுமே.... நான் ரிட்டயர்டு ஆகிட்டேன்னா உன் கல்யாணத்த எப்டி நடத்துறது. ஏன்ப்பா கல்யாணம் கல்யாணம்னு என் லைஃபோட கோலா அத செட் பண்றீங்க?

சற்றே டென்ஷன் ஆக....

அப்பா என் கைகளை பிடித்துக்கொண்டார்.... லவ் எதாவது பண்றியா? அத சொல்ல பயந்துட்டு தான் இவ்ளோ சீன் போட்டுட்டு உக்காந்திருக்கியா என்றார் சந்தேகமாக...

லவ் லவ் லவ் என்று சிரித்துக் கொண்டே மூன்று முறை சொன்னேன்.

லவ் பண்லாமா? :

லவ் பண்லாமா? :

சூப்பர் ஐடியாப்பா.... என்று சிரித்துக் கொண்டே எழுந்து விட்டேன், பையன் யாருன்னு சொல்லு அப்பா போய் பேசுறேன் என்றார். மூணு மாசத்துல சொல்றேன்ப்பா..... பையனுக்கு அதுக்குள்ள வேல கிடச்சுருமா? பையன் கிடச்சுருவான் ? முழித்தார் இனி தான்ப்பா தேடணும்.

அடிப்பாவி உங்கம்மாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது அவ்ளோ தான்.

காலேஜ் லவ் :

காலேஜ் லவ் :

கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த காதலை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு காதல்கள் என்னைத் தேடி வந்தது, ஒன்று என் கல்லூரி சீனியர் இன்னொன்று என் உடன் படித்தவன். நாங்கள் வீடெடுத்து தங்கியிருந்த பகுதியில் இருந்து தினமும் கல்லூரி வரை ஃபாலோ செய்து கொண்டு வருவார், அதை எப்படி கையாள வேண்டும் என்ற திட்டமோ அல்லது அனுபவமோ இல்லாததால் நான் முன்னே செல்ல அவர் பின்னே வர என்று தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஹோட்டலில் :

ஹோட்டலில் :

ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலுக்குச் சொல்வோம். அப்போது என்னை நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி அழைத்தார். முதலில் மறுக்க, பின் கெஞ்சியதும் சம்மதித்து சென்றேன்.வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்க்ள், ஆசிரியர்கள்,ப்ராஜெக்ட், கல்ச்சுரல்ஸ் என எல்லா கதைகளையும் விவாதித்தோம்.

பதிலே சொல்லமாட்ற என்றான் பேச்சுவாக்கில்.... எங்கே ஆரம்பித்து எங்கே சுற்றி எங்கே வருகிறான் என்று புரிந்து கொண்டு அங்கிருந்து நைஸாக நழுவினேன்.

உண்மையா இல்லையா? :

உண்மையா இல்லையா? :

அதற்குள்ளாக கல்லூரி முழுவதுமே சண்டே ஹோட்டல் போனோம்....வீட்ல தான் ப்ராப்ளம் போல அதான் பயந்துட்டு ஒலே பண்ணமாட்ரா என்று சொல்லி வைத்திருந்தான், நண்பர்கள் எல்லாரும் வரிசையாக வந்து என்ன சீனியர லவ் பண்றியா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னடா இது என்று மீண்டும் சீனியரை அழைத்துப் பேசினேன். ஆமா பிரண்ட்ஸ் சும்மா கேட்டாங்க என்ன சொல்றது அதுக்கு என்ன? நான் யாரையும் லவ் பண்ல... லைஃப் பத்தின டெசிஷன் எதுவும் இப்போ நான் எடுக்குறதா இல்ல. சோ நான் லவ் பண்ணுவேன்னு வீணா கற்பனை பண்ணிட்டு இருக்காதீங்க என்று சொல்லி கிளம்பி வந்து விட்டேன்.

 அக்கா :

அக்கா :

அந்த கதை அதோடு முடிந்தது, அவ்வப்போது அவன் முயற்சியெடுத்தாலும் நான் கண்டுகொள்ளாமல் இருக்கவே அப்படியே விலகிச் சென்றான். இப்போது என் படித்தவனின் ப்ரோப்போசல் கதையை சொல்கிறேன். ரெக்கார்ட் சப்மிட் செய்ய வரிசையாக நின்றிருந்தோம்.

அக்கா.... அக்கா என்று அழைப்பது கேட்டது. திரும்பினால் வகுப்புத்தோழன்.

முறைப்புடன் நான் உனக்கு அக்காவா என்றேன்? வேணாம்னா லவ்வரா கூட இருக்கலாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல என்றான்.

ஒரு கணம் முழித்து சிரித்தேன்.

ஐவி :

ஐவி :

வகுப்பு இரண்டு குழுக்களாக பிரித்து ஐவி அழைத்துச் சென்றார்கள். அங்கே எனக்கு நிறைய உதவிகளை செய்தான். அக்கா எப்போக்கா பதில் சொல்லப்போறீங்க.... அக்கா என்னைய பாத்தா பாவமா தெர்லயா என்று அவ்வப்போது கேட்டேக் கொண்டேயிருப்பான்.

சாரிடா தம்பி.... சின்னப்பசங்கள எல்லாம் நான் லவ் பண்றதா இல்ல.... போ போய் உன் வயசுக்கு ஏத்த மாதிரி பொண்ண தேடிக்கோ அக்காட்ட எல்லாம் இப்டி பேசக்கூடாது.

குட் கலெக்‌ஷன்ஸ் :

குட் கலெக்‌ஷன்ஸ் :

ஏய்... ஐயோ சும்மா விளையாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சு அதுவே பழகிடுச்சு நீ என்ன இப்டி சொல்ற, கல்யாணம் பண்ணி புள்ளகுட்டிய பெத்துட்டு என்ன பண்ணப் போற எதுக்கு இவ்ளோ சின்ன வயசுலயே அவ்ளோ பொறுப்புகள சுமக்கணும்னு நினைக்கிற நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் பொறுப்பு வராது அப்றம் ஏன் இந்த வீண் பந்தா?

லைஃப் என்ஜாய் பண்ணு 25 யியர்ஸ் வரைக்கும் எந்த கமிட்மெண்ட்டும் இருக்கக்கூடாது அதுக்கப்பறம் பாத்துக்கலாம் என்றேன். அவனுக்குப் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் எதையோ யோசித்தப்படி திரும்பிச் சென்றான். சிறிது தூரம் சென்று விட்டு குட் டெசிசன் அண்ட் குட் கலெக்‌ஷன் என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

தோழி திருமணம் :

தோழி திருமணம் :

இது ஒன் டே லவ்.... நானே ஆரம்பித்து நானே முடித்துக் கொண்ட லவ் ஸ்டோரி. தோழியின் திருமணத்திற்கு நாங்கள் எல்லாரும் சென்றிருந்தோம். போன இடத்தில் சும்மா இருப்போமா? ஆளாளாக்கு சைட் அடித்துக் கொண்டிருந்தோம். அங்கிருக்கும் ஒருவனைப் பார்த்து சைட் அடிக்க நண்பர்கள் நோட் செய்துவிட்டார்கள்.

பெட் கட்டி போன் நம்பர் வாங்குவதென்ன, மெசேஜ் செய்வதென்ன இரண்டு நாட்கள் திருமணம் மணமக்களை வாழ்த்தினார்களோ இல்லையோ நண்பர்கள் எங்களை ஓட்டுவது தான் முதன்மையான வேலையாக வைத்திருந்தார்கள்.

காதலைச் சொல் :

காதலைச் சொல் :

நான் எவ்ளவோ மறுத்தும் நண்பர்கள் கேட்கவில்லை, போய் காதலைச் சொல் என்று வர்புறுத்தினார்கள். எனக்கும் அவனைப் பிடித்திருந்தது என்பதால் காதலைச் சொல்ல ஒப்புக் கொண்டேன். பொங்கல் பண்டியென்று நினைக்கிறேன் அதே தோழியின் வீட்டிற்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்தோம். அவனும் வந்திருந்தான்.

காதலைச் சொல்லலாம் என்று அருகில் தைரியமாக சென்றுவிட்டேன் ஆனால் அருகில் என்று பேச்சே வரவில்லை ஐயையோ தைரியமா வந்துட்டோம் என்ன சொல்றது.... பளார்னு கன்னத்துல அரஞ்சுட்டா என்ன செய்றது... திட்டிடுவானோ என்று கற்பனைகள் வேறு....

நான் அருகில் நிற்பதைப் பார்த்து வாட்? என்றான்... உளறிக் கொட்டினேன் இல்ல பொங்கல் ரெடியாச்சாம்... அது காலைலயே சாப்ட்டாச்சுல்ல... இல்ல எப்டி ரெடி பண்றது ஐயோ உளர்றேனே என்று சொல்லிக் கொண்டே பொங்கல் எப்டி பண்றது தெரியுமா? என்று கேட்டுவிட்டேன் ஏற இறங்க பார்த்தவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

நாளைக்கு மீட் :

நாளைக்கு மீட் :

அதன் பிறகு எதார்த்தமாக ஒரு ஷாப்பிங் மாலில் சந்தித்துக் கொண்டோம், பொங்கல் எப்டி பண்றதுன்னு கத்துக்கிட்டீங்களா? என்றான். ஐயோ நான் எதோ சொல்ல வந்து பதட்டத்துல பயத்துல உளறிக் கொட்டிட்டேன். பிரண்ட்ஸ் தான் ஓட்றாங்கன்னா நீங்களுமா என்றேன்....

சிரித்துக் கொண்டே ஒகே... ஒகே சாரி . ஃப்ரீனா சொல்லுங்க நாளைக்கு மீட் பண்லாம் என்றார்.

அடடே..... நம்ம தான மீட் பண்ணப் போறோம் அல்வேஸ் ஃப்ரீ தான் என்று சந்திப்பு நேரத்தை உறுதி செய்தேன்.

பீ ரெடி... ஃபோக்கஸ் :

பீ ரெடி... ஃபோக்கஸ் :

அன்னக்கி சொதப்புன மாதிரி சொதப்பிறக்கூடாது. லேட் பண்ணக்கூடாது பாத்ததும் குட் நூன் சொல்ற மாதிரி லவ் யூன்னு சொல்லிடணும் என்று என்னை தேற்றிக் கொண்டே சென்றேன். சொன்ன இடத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னாலேயே சென்றுவிட்டேன்.... கடைசி நிமிட பதட்டங்களை தவிர்க்கத்தான்.

வந்தான்.... பின்னாலேயே இன்னொரு பெண்ணும் வருகிறாள். ஷீ இஸ் மை கேர்ள்... த்ரீ யியர்ஸா லவ் பண்றோம். நெக்ஸ்ட் மன்த் கல்யாணம். வெட்டிங் ஷாப்பிங்காக இங்க வந்திருக்கா என்று அறிமுகப்படுத்தினான். எழுந்து ஹாய் என்றேன் அவளும் சிரித்துக் கொண்டே கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் என்றாள்.

அன்னக்கி பாத்தோமே :

அன்னக்கி பாத்தோமே :

அவசர வேலை என்று சொல்லி கிளம்பினேன். வீட்டிற்கு சென்றதும் அழுது தீர்த்தேன் இது முட்டாள்தனமானது, அழுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அறிவுக்கு புரிந்தாலும் மனதுக்கு புரியவில்லை எதோ காதலித்து ஏமாற்றியதாய் மனம் வெம்பி அழுதேன்.

நண்பர்கள் ஒவ்வொருவருக்காய் போன் செய்து.... பொங்கல் அன்னக்கி பாத்தோமே என்று ஆரம்பித்து வரலாற்றினை வாசிக்க ஆரம்பித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Love Proposals Story Of a Girl

Love Proposals Story Of a Girl
Story first published: Monday, March 26, 2018, 17:08 [IST]
Desktop Bottom Promotion