Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
அண்ணன்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டான் ! my story #269
முதன் முதலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணொருத்தியின் அனுபவக் கதை
நண்பர்கள் நாங்கள் ஒரு ஆறு பேர் சேர்ந்து ஒரு சின்ன ஸ்டார்ட் அப் செய்யலாம் என்று திட்டமிட்டோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த திட்டம் இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை திட்டமிட்டு சிறிய ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிப்பது என்று திட்டம் இருந்தது.
பெரிய பட்ஜெட் எப்படி முதலீடு சேர்ப்பது அன்றாட செலவுகளை எப்படி பார்ப்பது, லாபத்தை எப்படி பிரித்துக் கொள்வது அங்கு வேலை செய்வது யார்? எப்படி இதை விளம்பரப்படுத்துவது? எல்லா நாட்களிலும் உணவு விற்க வேண்டுமே.... மீந்து விட்டால் என்ன செய்வது என்று ஏகப்பட்ட குழப்பங்கள் எந்த முடிவுக்கு வந்தாலும் அதற்கு மாறாக கேள்வியொன்று தொக்கி நின்றது. இந்த நேரத்தில் தான் எங்களுடன் ஏழாவதாக இணைந்தார் மோஹித்.
வடமாநிலத்திலிருந்து படிப்பிற்காக இங்கே வந்திருக்கிறார். எங்களுக்கு முந்தைய செட் அடிக்கடி கல்லூரிக்கு வந்த போது எங்களின் இந்த முயற்சி தெரிந்து இணைந்து கொண்டார்.

ஆரம்பம் :
எங்கள் எல்லோருக்குமே மோஹித் ‘சேட்ஜி'. மேலே சொன்ன கேள்விகள் அத்தனைக்கும் விடையாய் எங்களுக்கு தெரிந்தார் சேட்ஜி. பிஸ்னஸில் இருக்கிற சுவாரஸ்யமே இது ஜெயிக்குமா ஜெயிக்காதா என்பதில் தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் தொடர்ந்து ஓட ஒரு வில் பவர் வேண்டும்.
அதற்காக எந்த திட்டமும் இல்லாமல் இறங்க கூடாது. சரியான திட்டமிட்டு முயற்சித்தால் கண்டிப்பாக வெற்றிதான். ஊர் முழுக்க ஹோட்டல் இருக்கிறது. அவற்றிலிருந்து மக்கள் ஏன் உங்கள் ஹோட்டலுக்கு வரவேண்டும் என்று சற்று யோசி அவர்களை விட உங்கள் ஹோட்டலில் என்ன சிறப்பு?

சவால் :
விலையா? தரமா? அதோடு நீ எந்த ஏரியாவில் ஹோட்டல் ஆரம்பிக்க நினைக்கிறாய்... அங்கே இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு நீங்கள் முதலில் களத்திற்கு செல்ல வேண்டும்.
பக்கத்தில் வேறு ஹோட்டல் இருக்கிறதா? அங்கே என்ன மாதிரியான உணவு வகைகள் கிடைக்கிறது என்று பாடமெடுத்து எங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஏரியாவுக்கு அனுப்பி சரியான இடத்தை தேர்வு செய்ய வைத்தார். இடத்தை பார்ப்பதில் ஆரம்பித்து இண்டீரியர், சமையல் என அத்தனையும் இருந்து செய்ய வைத்தார். மிக முக்கியமாக பண விவகாரத்தை முழுதும் பார்த்துக் கொண்டது மோஹித் தான்.

பிஸ்னஸ் :
முதல் ஒரு மாதம் எல்லாருமே ஆர்வத்தில் வேலை பார்த்தோம். லாபமும் கிடைத்தது. கிடைத்த லாபத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இண்டீரியர் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டோம். வங்கியில் லோன், ஹோம் டெலிவரி, வேலைக்கு ஆட்கள் என கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரிப்பு ஆனது.
இந்த நேரத்தில் தான் மோஹித் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையை காட்டத் துவங்கினான்.

சந்தேகம் :
கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருந்தது. ஆரம்பம் முதலே பண விவகாரம் முழுவதும் அவனே பார்த்துக் கொண்டதால் நடுவில் நாங்கள் யாரும் நுழையவில்லை அவ்வப்போது விவரங்களை கேட்டுக் கொள்வதோடு சரி.
எல்லாம் வெல் செட்டில்டு ஆன பிறகு லாபம் வருவது குறைய ஆரம்பித்தது, முதலில் எங்கள் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. அடுத்த மாதம் பிடித்து விடலாம் என்று நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் செல்லச் செல்ல வருகிற போட்ட காசை எடுப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. என்ன நடக்கிறது என்று நாங்கள் சுதாரிப்பதற்குள் பெரிய பிரளயமே ஏற்பட்டது.

வெளியே போ :
கடை பத்து மணிக்கு க்ளோஸ் ஆகிடும். பத்து மணிக்கு பிறகு இரவு ஹோட்டலிலேயே நாங்கள் ஆறு பேரும் ஒரு சின்ன மீட்டிங் மோஹித் தாமதமாக வந்தான். எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது ஆனால் லாபம் மட்டும் கைக்கு கிடைக்கவில்லை என்றால் எங்கோ தவறு நடக்கிறது என்று தானே அர்த்தம்.
நன்றாக சென்று கொண்டிருந்த ஹோட்டல் திடீரென்று ஏன் நஷ்டத்தில் வந்து நிற்க வேண்டும். அங்கே இங்கே என்று சுற்றி மோஹித் பக்கம் திரும்பியது. பணமெல்லாம் நீ தானே பார்க்கிறாய் என்ன நடக்கிறது சொல் என்று கேட்க ஆரம்பித்தோம்.

பயம் :
முதலில் சமாளித்தவன் பின்னர் சந்தேகம் ஏற்பட்ட பிறகு நான் ஏன் இங்கே இருக்க வேண்டும். நான் செல்கிறேன் என்று சொன்னான். நானும் இன்னொருவனும் சமாதானம் செய்ய முயன்றோம் ஆனால் முடியவில்லை.
சரி சரி போட்டும் டீடெயில்ஸ் கேட்டா சொல்லணும் அத விட்டுட்டு உடனே நான் வெளிய போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் அவன் எதோ தப்பு பண்ணிருக்கான் நம்ம கண்டுபிடிச்சதும் அவனுக்கு பயம் அதான் வெளிய போறான் என்றார்கள்.

திக்குமுக்காட வைத்த தருணம் :
அவன் எங்களை விட்டுச் சென்றதும் ரொம்பவே திக்குமுக்காடித்தான் போனோம். போனில் என்னிடம் பேச ஆரம்பித்தான். உங்களுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் ஆனால் இப்படி என்னை அவமானப்படுத்தி அனுப்பி வீட்டீர்கள். உங்களுக்கு நன்மை செய்ததற்கு நீங்கள் செய்யும் பதில் இது தானா.... ஒரு அண்ணனாக உங்களை வழி நடத்த வேண்டும் என்று நினைத்த என்னை செருப்பால் அடித்தது போல வெளியே போ என்று விட்டீர்கள் என்று மிகவும் வருத்தப்பட்டு பேச... எனக்கு என்னவோ போல் இருந்தது.
இந்த விவகாரத்தை பேசி முடிக்க வேண்டும் என்று சொல்லி மோஹித்தை சந்திக்க வருவதாக சொன்னேன்.

மறுப்பு :
இல்லம்மா வேண்டாம் அவங்க எல்லாரும் நான் எதோ ஏமாத்திட்டு வந்ததா நினைக்கிறாங்க பிஸ்னஸ்னா மேல கீழ வரத்தான் செய்யும் அத புரிஞ்சுக்காம இப்டி பேசிட்டாங்க இந்த நேரத்துல நீ என் கூட பேசுறது பழகுறது தெரிஞ்சா கஷ்டம் அப்பறம் உன்னையும் வெளிய போன்னு சொன்னாலும் சொல்வாங்க நானும் அங்க ஒரு பாட்னர் தான் என் ஷேர இப்பவே எடுத்து வை அப்பதான் நான் போவேன்னு சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்.
அதனால நீ என்கூட டச்ல இருக்குறது அங்க யாருக்கும் தெரிய வேண்டாம். அதோட என்னைய பாக்க எல்லாம் வரவேண்டாம் நீ என்னோட தங்கச்சி மாதிரி இங்க ஒரு தங்கச்சி எனக்கு இருக்கான்ற நினப்பே போதும் என்று சொல்லி என்னை சந்திப்பதை மறுத்துவிட்டார்.

இரட்டை சவாரி :
மோஹித் மீது தவறில்லை நாம் தான் அவசரப்பட்டு விட்டோம் என்று தோன்றியது. நாங்கள் ஒன்றும் அவர் குற்றவாளி என்று சொல்லவில்லையே.... கணக்கு கேட்டதும் அவர் தான் என்னை சந்தேகப்படுகிறீர்கள் நான் போகிறேன் என்று சொன்னார் என்று நண்பர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்.
அவர்களிடமும் என்னால் அதற்கு மேல் பேச முடியவில்லை அதனால் அதோடு விட்டுவிட்டேன். ஆனால் தொடர்ந்து மோஹித்திடம் டச்சில் இருந்தேன். என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தார்.

உன்னைய பாக்கணும் :
அதீத லாபம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு வண்டி ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு நாள் திடீரென்று மோஹித்திடமிருந்து போன்... எங்க இருக்க உன்ன இப்ப உடனே பாக்கணும் வர முடியுமா என்றான்... காரணம் எதுவும் கேட்கவில்லை இருக்கிற இடத்தை மட்டும் தெரிந்து கொண்டு கிளம்பினேன்.
செல்லும் வழியெங்கும் எனக்கு எழுந்த ஒரே கேள்வி. இதற்கு முன்னால் நான்கைந்து முறை உங்களை சந்திக்க வேண்டும், நான் சந்திக்க வரவா என்று கேட்டபோதெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்தவர் இப்போது பார்க்க வேண்டும் என்று கூப்பிடுகிறாரே என்பது தான்.

சந்தேகமேயில்லை :
நண்பர்கள் யாரிடமும் எங்கே செல்கிறேன் என்று சொல்லவில்லை ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடறேன் என்று சொல்லி கிளம்பியிருந்தேன். மோஹித் வீட்டை அடைந்து விட்டேன் உள்ளே சென்றால் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.
என்ன ஆச்சு? ஏன் திடீர்னு பாக்கணும்னு சொன்னீங்க என்று கேட்டேன். என்னன்னு தெரியல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னைய யாரும் நம்ப மாட்றாங்க நான் நம்பினவங்க எல்லாம் எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு விட்டுட்டு போய்ட்டாங்க என் கேர்ள் ஃபிரண்ட் கூட என்னைய நம்பல அப்டியே செத்திடலாம் போல இருக்கு என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

நான் இருக்கிறேன் :
அந்த நேரத்தில் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. நான் சாகணும்னு முடிவு பண்ணிட்டேன் கடைசியா உன்னைய பாக்கணும்னு தோணுச்சு அதான் வர சொன்னேன் நீ மட்டும் தான் எனக்கு இப்போ ஆறுதலா இருக்க என்றார்.
ஏன் இப்டி எல்லாம் பேசுறீங்க இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல உங்கள விட்டு போனவங்க கண்டிப்பா உங்கள ரியலைஸ் பண்ணுவாங்க சும்மா இப்டி சின்ன புள்ளதனமா பேசாதீங்க என்றேன். இல்லை நான் பட்டதெல்லாம் போதும் இனிமேலும் என்னால் தாங்க முடியாது என்று என் கைகளை பற்றிக் கொண்டு ஆழ ஆரம்பித்தார்.

மாற்றம் :
தான் தன்னுடைய காதலியை எப்படி நேசித்தார், எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார், அவை எல்லாவற்றையும் ஒரே நொடியில் தூக்கிப் போட்டு போய்ட்டா என்று உருகினார்.
அவரின் பேச்சு மெல்ல மாறியதை உணர்ந்தேன். கைகளை பிடித்துக் கொண்டிருந்தவர் என் தோல் மேல் கை போட்டுக் கொண்டார். நீ மட்டுமாவது எனக்கு இருக்க இல்லன்னா நான் எப்பவோ செத்திருப்பேன். என் தோழில் சாய்ந்து ஒரு ஆண் அழுவது எனக்கும் என்னவோ போல் தான் இருந்தது. எதப்பத்தியும் நினைக்காதீங்க நான் இருக்கேன் உங்களுக்கு என்றேன். அவர் தோலில் சாய்ந்து அழுவதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்றதும் மெல்ல தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்.
முதலில் கைகளை தட்டிவிட்டேன். நீங்க எனக்கு நல்ல அண்ணன் நீங்களும் இங்க இருக்குற ஒரே தங்கச்சின்னு சொல்லியிருக்கீங்கள்ள என்று நாசூக்காக நழுவப் பார்த்தேன். ஆனால் அவர் விடவில்லை நீ என் தங்கச்சி மட்டுமில்ல நீ தான் என்னோட உயிர் என்று ஏதேதோ பிதற்றினார்.

மறக்க முயற்சி :
பெரிய தவறு செய்து விட்டதைப் போன்ற ஒரு தவிப்பு. யாரிடமும் சொல்ல முடியவில்லை நண்பர்கள் என் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதைக் கண்டு கேட்க ஆரம்பித்தார்கள் வீட்டை மிஸ் செய்கிறேன் என்று சமாளித்தேன். வேண்டுமானால் ஒரு வாரம் போய்ட்டு வா என்றார்கள்
இவர்களே என்னிடம் எதோ சரியில்லை எனும் போது அம்மா கண்டுபிடிக்காமல் இருப்பாளா..... அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது அதனால் ஊருக்கு போகல என்று சொல்லிவிட்டேன். நீ பெரிய தப்பு பண்ணிட்ட.... உன்னையவே நம்பிட்டு இருந்த உன்னோட ஃபேமில்லுக்கு நீ துரோகம் பண்ணிட்ட... அப்போ மோஹித் உன்கிட்ட ஒரு அண்ணனா பழகல உன்னைய ஏமாத்திட்டாங்க என்று திரும்ப திரும்ப எனக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

என்ன செய்வது ? :
என் வேலைகளில் கூட கவனம் செலுத்த முடியவில்லை விளையாட்டிற்கு சிரித்தாலும் வேறு எதோ கேள்விகேட்டாலும் அவர்களுக்கு உண்மை தெரிந்து விட்டதோ அதான் சிரிக்கிறார்கள் ஒரு வேலை மோஹித் சொல்லியிருப்பானோ என்று சந்தேகங்கள்.
அதன் பிறகு மோஹித் என்னிடம் பேச முயற்சித்தாலும் நான் பேசவில்லை. திடீரென்று ஒரு சந்தேகம் ஒரு வேலை அந்த இரவை அவன் வீடியோ எடுத்திருந்தால்? என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது ஒவ்வொருவரின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்று நினைக்கும் போதே கொடுமையாய் இருந்தது.
நம்ப வச்சு ஏமாத்திட்டான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன் இதிலிருந்து எப்படியாவது மீண்டு விட வேண்டும்.



Click it and Unblock the Notifications











