For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேட்டிங் சென்று வந்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடர்கிறது! my story #252

தனது ஆண் நண்பருடன் பெண்ணொருத்தி டேட்டிங் செல்கிறாள், அதன் பிறகு அவளுடைய வாழ்க்கை இப்படி தடம் மாறும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

|

பள்ளிப்பருவத்தில் கிராமத்தில் வசித்தோம். பின் கல்லூரி, வேலை என்றானதும் குடும்பத்துடன் பெரு நகரத்திற்கு நாங்கள் குடிபெயர்ந்துவிட்டோம். நகரத்திற்கு வந்தால் நிறைய வசதி வாய்ப்புகள் கிடைக்கும் , நிறைய சம்பாதிக்கலாம், தொழில் துவங்கலாம் எளிமையான என்ற நிறம் மாறி பகட்டு என்ற மேற்பூச்சினை பூசிக் கொள்ளலாம்.

உண்மையில் இந்த மேற்பூச்சு நமக்கு பல நேரங்களில் தொல்லைகளாகவே இருக்கின்றன என்பதற்கு என்னுடைய கதை ஓர் உதாரணமாக சொல்லலாம். கிராமம் என்று சொல்வதை விட எங்கள் ஊரை வளர்ந்து வருகிற கிராமம் என்று சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக வசதி வாய்ப்புகள் ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்த காலத்தில் அப்பாவின் தொழில் நிமித்தமாக நாங்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்தோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்தியம் செய் :

சத்தியம் செய் :

ஆறு மாதமாகவே ஊர விட்டு போகப் போறோம் என்ற பேச்சு தான். சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் வந்து விசாரிப்பது, அங்கே முதலில் நீ மட்டும் சென்று போய் தங்கு அங்கே வீடு,தொழில் எல்லாம் அமைந்த பிறகு குடும்பத்தை வந்து அழைத்துச் செல்லலாம் என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால் அம்மா தான் கேட்கவேயில்லை. அன்று இரவு திண்ணையில் உட்கார்ந்து அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நீ மொதல்ல சத்தியம் செய்... ஊருக்கு போனதும் அவ வீட்டுக்கு போக மாட்டேன்னு அப்பா அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தார்.

ஏன் சிரிக்கிற? அப்போ போவியா நீ?

அப்பா நிஜமாவா? :

அப்பா நிஜமாவா? :

பள்ளி முடிந்து நானும் தம்பியும் அப்பாவுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம். எங்கள் வருகையை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட அம்மா.... வாசலுக்கு வந்தார்.

மாலையில் மார்க்கெட்டுக்குச் செல்லலாம் என்று சொன்ன அப்பாவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தம்பியின் காதில் எதோ கிசுகிசுத்தார்.... உடனே அப்பா நிஜமாவா ஐயையோ அப்பா என்று அலறினான். எனக்கோ ஆர்வம் தாங்கவில்லை அம்மாவிடம் தம்பியிடமும் என்னடா என்று கேட்டு நச்சரித்தேன். அப்பாவிற்கு இந்த கலவரம் எதுவுமே புரியவில்லை.

நாளைக்கே போலாம் :

நாளைக்கே போலாம் :

அப்பா நம்மல நாளைக்கே டவுனுக்கு கூட்டிட்டு போய் புதுத் துணி எடுத்து தரேன்னு சொல்லியிருக்காரு ஊர விட்டு பெரிய ஊருக்கு போகப்போறோம்ல அங்க எல்லாரும் புதுத் துணி தான் தினமும் உடுத்துவாங்களாம். அங்க போய் இப்டி இந்த துணிய போட்டு இருக்க முடியும். அதான் எல்லாருக்கும் புது டிரஸ் என்றார் அம்மா....

ஏய்... நான் எப்போ சொன்னேன் அதெல்லாம் கிடையாது, சந்தைக்கு சரக்கு வாங்கவே காசு இடிக்குது இதுல புதுத் துணி வேறயா என்ற மழுப்ப நாங்கள் இருவரும் சந்தைக்கு செல்ல வேண்டும் புதுத் துணி வேண்டும் என்று அடம்பிடித்தோம்,எங்களுடைய தொந்தரவு தாங்காமல் நாளைக்கே போகலாம் என்று சொல்லிவிட்டார்.

ஒழுங்கா நேத்தே சத்தியம் பண்ணியிருக்கலாம்ல என்று ஜாடையாக பேசிவிட்டுச் சென்றார் அம்மா.

இனி இப்படித்தான் :

இனி இப்படித்தான் :

சொன்னது போலவே மறுநாள் பள்ளி விடுமுறை என்பதால் காலையிலேயே கிளப்பி டவுனுக்கு அழைத்துச் சென்றார் எல்லாருக்கும் ஒரு செட் டிரஸ், அவருக்கு எடுத்துக் கொள்ளவில்லை, ஹோட்டலில் சாப்பாடு அன்று மாலை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பினோம்.

குடும்பத்துடன் இப்படி வெளியில் சுற்றுவது அப்போது தான் எனக்கு புது அனுபவமாக இருந்தது. கிராமம் என்பதால் தானே பள்ளிக்கு விடுமுறை இருக்கிற நாளில், பேருந்திருக்காக மணிக்கணக்காக காத்திருந்து செல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதே நகரத்திற்கு சென்றுவிட்டாள் இதை விட பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கை முழுவதும் ஜாலியாக இருக்கலாம். மெத்தையில் படுக்கலாம், காரில் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

போய் வருகிறோம் :

போய் வருகிறோம் :

அன்று வழக்கம் போல பள்ளி சென்று வந்தோம். இறுதித் தேர்வு எழுதிய நாள் அது, பார்த்தால் வீடு அலங்கோலமாய் கிடக்கிறது. வீட்டிற்கு முன்னால் நான்கைந்து மாட்டு வண்டி நிற்கிறது. அம்மாவும் அப்பாவும் புதை மணலுக்குள்ளே இருந்தோ எதையோ தேடுவது போல சுற்றிலும் ஜாமானை பரப்பி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஏய்.... சீக்கிரம் டிரஸ் மாத்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்புறோம். ஊருக்காம்மா, இனிமே இங்க வரமாட்டோமா? ஒரு வாரம் ஆகும் அப்பா மட்டும் போறாங்கன்னு சொன்னீங்க?? இப்பவே போறாமா.... நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்ட எதுவும் சொல்லலயே நான் போய் சொல்லிட்டு வந்திடவா என்றேன். நேரமாகுதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.... சீக்கிரம் கிளம்பு என்று அதட்டினார் அம்மா.

புது வாழ்க்கை :

புது வாழ்க்கை :

அழுகையாய் வந்தது, கிட்டத்தட்ட கிராமமே எங்களை சேர்ந்து வழியனுப்பினார்கள், திருவிழாவிற்கு அவசியம் வர வேண்டும். அங்கே சென்றதும் தலைவருக்கு போன் செய்து தகவலைச் சொல்லிவிடு என்று அம்மாவை கட்டியணைத்து பெண்கள் வழியனுப்பினார்கள். எங்களுக்கு திண்பண்டமும் காசும் கொடுத்தார்கள்.

சிமெண்ட் வீடு. தரையில் டைல்ஸ் எல்லாம் பதித்திருந்தார்கள். ஒரு மாட்டு வண்டி கூட இல்லை நகரத்திற்கு அடியெடுத்து வைத்ததும் நான் மட்டுமல்ல அம்மாவும் மிகவும் பயந்திருந்தார். தம்பிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நகர வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள ஆரம்பித்தோம். நான் கல்லூரி செல்ல ஆரம்பித்திருந்தேன்.

இரவு சந்திக்கலாம் :

இரவு சந்திக்கலாம் :

அன்று கல்லூரியிலிருந்து வெளி வரும் போது தான் அவனைச் சந்தித்தேன், தானும் இதே கல்லூரியில் படிப்பதாய் அறிமுகப்படுத்திக் கொண்டான். அறிமுக உரை முடிந்ததும் இன்று இரவு சந்திக்கலாமா? என்று கேட்டான்...

இரவா? இல்லை முடியாது என்றேன், சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி இந்த வார இறுதியில் டேட்டிங் செல்லலாம் என்று சொல்லிவிட்டு என் முடிவுக்காக காத்திருக்காமல் சென்று விட்டான். அதன் பிறகு தொடர்ந்து வர்புறுத்த ஆரம்பித்தான், வலிய வந்து பேசுவது, அடிக்கடி டேட்டிங் கூப்பிடுவது என்று அவன் தொல்லை அதிகரித்தது. இதெல்லாம் இங்கே சாதரணம் நீ ஏன் இவ்ளோ யோசிக்கிற? என்று கேட்டான்.

அதைவிட டேட்டிங் செல்லலாம் பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலமுறை என்னை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான்.

சூப்பர்க்கா :

சூப்பர்க்கா :

அன்று நானும் தம்பியும் மட்டும் வீட்டில் இருந்தோம். டேட்டிங் விஷயத்தை தம்பியிடம் சொன்னேன்.... ஏய் சூப்பர்க்கா போய்ட்டு வா என்றான். டேய் என்னடா சூப்பர்னு சொல்ற மூணு மாசமா பின்னாடி சுத்துறான் அவன நம்பி எப்டி போறது....

மூணு மாசமா உன் பின்னாடியா? என்று ஏளனச் சிரிப்பு சிரித்து விட்டு.... இப்ப எல்லாம் டேட்டிங் வர்லன்னு சொன்னா அடுத்த ஆளா பாத்துட்டு போய்ட்டே இருப்பாங்க நீ என்னடான்னா மூணு மாசம்னு சொல்ற என் பிரண்ட்ஸ் எல்லாரும் டேட்டிங் போய்டாங்க தெரியுமா? சொல்றத கேளு சான்ஸ மிஸ் பண்ணாத ஜாலியா போய்ட்டுவா அம்மா கேட்டா நான் சமாளிச்சுக்குறேன் என்றான்.

பப் :

பப் :

சரி அதுவரை டேட்டிங் சென்ற தோழிகளின் கதையை நிறைய கேட்டிருக்கிறேன், எனக்கும் சென்று தான் பார்ப்போமே தம்பியும் போகத்தானே சொல்கிறான், ஊரில் சாதரணமாக நடக்கிற விஷயம் தானே இதிலென்ன தப்பு இருக்கிறது போய் தான் பார்க்கலாம் என்று சமாதனம் சொல்லிக்கொண்டு அவனிடம் வருவதாய் சொல்லிவிட்டேன்.

அன்றைய தினம் மாலை இருவரும் கிளம்பினோம். முதலில் ரெஸ்டாரெண்ட் சென்று விட்டு பின் பப்புக்கு சென்றோம்.

அத்துமீறல் :

அத்துமீறல் :

அங்கிருந்து லாங் டிரைவ் சென்று ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கினோம். நானும் குடித்திருந்தேன், போதையிலேயே தள்ளாடியபடி அவன் மீது சாய்ந்து கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்து விழுந்து விட்டேன்.

அங்கே என்னை அவனும் அவனுடைய நண்பன் இன்னொருவனும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். என் அனுமதியில்லாமல் எதோ செய்கிறார்கள் என்பதை உணர்ந்தாலும் அதை தடுக்கும் மனநிலையிலோ எதிர்க்கும் வலிமையிலோ நானில்லை எதையோ உளறிக் கொண்டு கிடந்தேன்.

மிரட்டல் :

மிரட்டல் :

மறுநாள் காலை கண்விழித்து பார்த்த போது நானும் அவனும் நிர்வாணமாய் கட்டிலில் கிடந்தோம். அவசர அவசரமாக இருவரும் கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டோம். தம்பி இரண்டு முறை கால் செய்திருந்தான் நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். வீட்டிற்கு சென்றதும் இரவு வீட்டிற்கு வராததால் அப்பா பயங்கரமாய் கத்தினார் நான் தான் தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றிருப்பதாய் சொன்னேன் அதையே நீயும் சொல் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

ஒரு வித பயம் என் மனதில் எழ ஆரம்பித்திருந்தது அதுவரையில் என்னுடைய நெருங்கிய உறவினர்கள் தோழிகள் யாருமே டேட்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தியதே இல்லை. திருமணத்திற்கு முன்னால் இதெல்லாம் தவறில்லையா? இப்போது எனக்கு குழந்தை பிறக்குமா? நான் கர்ப்பமாகிவிடுவேனா அப்பா கேட்டால் என்ன சொல்வது அம்மா அடித்து துவைத்துவிடுவார்களே என்று மிகவும் குழப்பமாய் இருந்தது.

இந்த நேரத்தில் டேட்டிங் சென்ற ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் டேட்டிங் செல்லலாம் என்றான். ஒரு முறை சென்று வந்ததற்கே எனக்கு இவ்வளவு பதட்டமாய் இருக்கிறது இவன் இன்னொரு முறை வேறு கூப்பிடுகிறானே என்று சொல்லி, அதெல்லாம் முடியாது என்று கறாராக சொல்லிவிட்டேன்.

இரண்டு மூன்று கெஞ்சிப் பார்த்தான். நான் சம்மதிக்கவில்லை என்றதும் அவனுடைய சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்.

நிச்சியதார்த்தம் :

நிச்சியதார்த்தம் :

அன்று ஹோட்டலில் போதையில் இருந்த போது எனக்குத் தெரியாமல் அவனும் அவனுடைய நண்பனும் சேர்ந்து ஆபசப் படம் எடுத்திருக்கிறார்கள். அதைக் காட்டி இதை இணையத்தில் வெளியிட்டு விடுவேன், உன் அப்பாவிற்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியே அடிக்கடி என்னை உறவுக்கு அழைக்க ஆரம்பித்தான்.

அவனையும் தாண்டி அவனுடைய நண்பர்கள் நான்கு பேருக்கும் என்னை இரையாக்கினான். யாரிடமும் இது குறித்து வாயைத் திறக்க முடியவில்லை. டேட்டிங் சென்றது, போதையில் இருந்தது என் தவறு தானே.... இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் அவன் இழுத்த பகடைக்காயாக மாறியிருந்தேன். நாளுக்கு நாள் அவனின் டார்ச்சர் அதிகமானது. இந்த நேரத்தில் தான் வீட்டில் அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தார்.

இது எனக்கு வேண்டாம் :

இது எனக்கு வேண்டாம் :

ஒரு பக்கம் அவனின் டார்ச்சர் இன்னொரு பக்கம் இது வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்து விட்டால் அவர்களின் முன்னால் அப்பாவிற்கு அசிங்கமாகிடும். அதோடு இது நான் அவருக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். இதிலிருந்து எப்படி நான் மீண்டு வருவேன் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்று அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

அன்று என்னை பெண் பார்க்கவும் வந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் என்னை பெண் பார்க்க வந்தவரிடத்தில் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.வந்தவர்கள் கிளம்பிச் சென்றார்கள் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி ஏன் வேண்டாம் என்றாய் கடந்த ஆறு மாதமாக நீ சரியில்லை யாரிடமும் பேசமாட்டேன் என்கிறாய், எப்போதும் அந்த அறையிலேயே அடைந்து கிடக்கிறாய்... அடிக்கடி நண்பர்களுடன் ஷாப்பிங், ப்ராஜெக்ட் என்று வெளியில் சென்று கொண்டிருக்கிறாய் என்ன தான் நடக்கிறது என்று கேட்டார் அம்மா....

அக்கா எங்க? :

அக்கா எங்க? :

ஒரு வாரம் என்னிடம் யாருமே பேசவில்லை. தம்பி மட்டும் அவ்வப்போது வந்து சாப்பிட கூப்டாங்க.... டோர் லாக் பண்ணிக்கோ என்று தகவலை சொல்லிச் செல்வான்.

அம்மா அப்பா சரி, இவனுக்கு தான் விஷயம் தெரியுமே பின் ஏன் என்னிடம் பேசமாட்டேன் என்கிறான் என்று எனக்கு புரியவில்லை. என்னை காரணமாய் வைத்து அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த வீட்டிலேயே இருக்க முடியவில்லை கல்லூரி வேறு விடுமுறை என்பதால் வெளியில் எங்கும் செல்லவும் முடியவில்லை. தீர்க்கமாய் ஓர் முடிவெடுத்தேன்.

தம்பிக்கு, எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. என்னிடம் அன்பு செலுத்த யாருமே இங்கு இல்லை, இங்கு என்னுடைய உடல் தான் தேவையாய் இருக்கிறது. ஏமாற்றப்பட்டு உடைந்து கிடக்கும் போது எனக்கு ஆதரவளிக்க இந்த உலகத்தில் ஒரு ஜீவனும் இல்லை.

இந்த உலகில் வாழும் தகுதியும் எனக்கு கிடையாது. அதனால் நான் இந்த வீட்டை விட்டுச் செல்கிறேன். மன்னித்துவிடுங்கள் என்னை தேட வேண்டாம் என்று மெசேஜ் அனுப்பிவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பினேன்.

திசை மாறிய வாழ்க்கை :

திசை மாறிய வாழ்க்கை :

அன்று மாலை வகுப்பு முடிந்து என் குறுஞ்செய்தியை படித்தவன் உடனடியாக வீட்டிற்கு தகவல் சொல்லியிருக்கிறான். அதோடு கல்லூரி தோழிகளிடமும் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறான். என்னை யாரும் பின் தொடர்ந்து வந்து கண்டுபிடித்து விடக்கூடாது என்பதால் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருந்தேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படி எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் தாங்கிக் கொண்டார்களா என்று எதுவும் எனக்குத் தெரியாது.

என் வாழ்க்கையே அப்படியே திசை மாறிவிட்டது. ஊரை விட்டு வந்தேன். அங்கே இங்கே என அலைந்து திரிந்து நாடோடியாய் திரிந்தவளை ஒருத்தி தன் கூட்டில் இடம் கொடுத்தாள், அவளும் என்னைப் போலவே பாதிக்கப்பட்டிருப்பவள் போல இருவரும் தங்கள் சுயசரிதைகளை பரிமாறிக் கொள்ளவில்லை. தினமும் குடித்தோம்.

மதுவைத் தாண்டி போதைப் பொருளுக்கு மெல்ல மெல்ல அடிமையாக ஆரம்பித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Life Totally changed After Her First Dating

Girl Life Totally changed After Her First Dating
Story first published: Saturday, May 12, 2018, 12:19 [IST]
Desktop Bottom Promotion