For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளின் காதலை புதுமையான வழியில் எதிர்த்த அப்பா ! my story #225

மகளின் காதலை புதுமையான வழியில் எதிர்த்த அப்பா

|

காதல் திருமணம் செய்து கொண்டால் வீட்டினர் மட்டுமல்ல இந்த சமூகத்தினரின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. பல நேரங்களில் பெற்றோருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இருந்தாலும். ஊர்ல தப்பா பேசுவாங்க.... நம்ம ஆளுங்க மத்தியில என் கௌரவம் என்ன ஆகுறது என்று சொல்லியே காதல் திருமணத்தினை ஒப்புக் கொள்ள மறுத்துவிடுவார்கள்.

இதையொத்த பிரச்சனை தான் என் வீட்டிலும் எங்கோ ஆரம்பித்து எப்படியெல்லாமோ பயணித்து இன்று வந்து திரும்பி பார்ககியில் பெரும் குற்ற உணர்ச்சியில் தத்தளிக்க வைத்திருக்கிறது அந்த காலம். காதல் என்ன ஒரு முறை நம்மிடம் அனுமதி வாங்கி குடும்ப சூழ்நிலை, சமூக அந்தஸ்த்து பார்த்து வருமா என்ன?

துரோகி என்றும் மோசக்காரி என்றும் எதேதோ சொல்லித் காரித் துப்பினார்கள். அரிப்பெடுத்த நாயி நாசமா போய்டுவ டி என்று பாட்டி மண்ணை அள்ளி வீசி சாபமெல்லாம் கொடுத்தாள்.இன்னும் சொல்லப்போனால் எங்கள் கிராமமே வெறுத்தது. உறவினர்கள் உறவுகள் குழந்தைகள்,கீரை விற்கும் அக்கா, சர்பத் கடை அண்ணன் என யாருமே முகம் கொடுத்து பேச மாட்டார்கள். சிலர் மட்டும் சுற்றிலும் யாருமில்லை என்றால் வேறு எங்கோ பார்த்தபடி தேவையாம்மா இதெல்லாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டே கடந்து செல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர்கள் :

நண்பர்கள் :

நாங்கள் இருவருமே ஒரே ஊர்க்காரர்கள் தான். சுற்றி சுற்றி வந்தால் ஒரு பத்து தெரு அதிலிருக்கும் நாற்பது வீடுகள். ஒரு கோவில் ஒரு சர்ச். காலையில் மட்டுமே நடக்கிற இட்லி கடை அவ்வளவு தான் எங்கள் கிராமம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றால் பள்ளிக்கூடம், போஸ்ட் ஆபிஸ்,பெரிய கோவில், பலசரக்கடை எல்லாம் இருக்கும். பேருந்து நிறுத்தம் கூட அங்கு தான் இருந்தது. அந்த ஊரில் இறங்கி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரையில் நடந்து உள்ளே வர வேண்டும்.

அது ஒன்றும் நகரம் எல்லாம் அல்ல எங்கள் கிராமத்தை விட சற்று ஆட்கள் அதிகமிருக்கிற கிராமம் அவ்வளவு தான். பள்ளியை முடித்து கல்லூரிக்கு இருபது கிலோமிட்டர் தொலைவுக்கு பயணம் செல்ல வேண்டும்.

ஒரு நிமிஷம் :

ஒரு நிமிஷம் :

கல்லூரி முடிந்து திரும்பிய வழியில் தான் அறிமுகமானான். ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம் என்பது அப்போது தான் எனக்கே தெரிந்தது ஆனால் இருவருமே வேறு வேறு டிப்பார்ட்மெண்ட் .

ஏங்க எந்த ஊருங்க? இப்படித்தான் முதன் முதலில் பவ்யமாக பேசினான். ஊர் பேரைச் சொன்னதுமே விலகி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு முன்னால் இவனும் இவன் நண்பர்களும் கல்லூரியிலும் சரி வரும் வழியிலும் சரி பார்ப்பது, சிரிப்பது எதோ பேரைச் சொல்லி கத்துவது,பாட்டு பாடுவது என்று இருப்பார்கள். பல மாதங்கள் இப்படியே ஓடிய பிறகு இப்போதாவது பேச தைரியம் வந்ததே என்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்போதும் இப்படி தெரித்து ஓடுகிறானே.... என்று முழித்தேன்.

தவிர்ப்பு :

தவிர்ப்பு :

அதன் பின் சில நாட்கள் கண்ணிலேயே படவில்லை. ஒரு நாள் கல்லூரியில் சந்தித்தேன் தலையை குனிந்து கொண்டு வேகமாக ஓடினான். இரண்டு மூன்று முறை இப்படியே நடந்தது பின் பொறுக்க முடியாமல் , நிறுத்தி ஏன் என்னையப் பாத்து இப்டி பயந்து ஓட்றீங்க என்று கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் நீண்ட நேரம் அமைதியாக இருந்தான். பின் வர்புறுத்தி கேட்டதும்

இல்லங்க நான் ******* ஊரு.

காதல் :

காதல் :

என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அதன் பின் எப்படியோ இருவரும் அடிக்கடி சிரித்துக் கொள்வோம் மெல்ல பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். பழக ஆரம்பித்த பிறகு அவனுடைய சாதி சர்டிஃபிகேட் எல்லாம் நினைவிலேயே இல்லை.

ஒரு கட்டத்தில் இது நட்பையும் தாண்டிய ஓர் பந்தம் என்பதை உணர்ந்தோம். காதலை பகிர்ந்து கொண்டோம். இருவருக்குமே பிடித்துப் போனது. முதலில் படிப்பு முடியட்டும் அதுவரை வெளியில் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லி அமைதியாக இருந்தோம்.

மிரட்டல் :

மிரட்டல் :

ஆனால் அப்படி எங்களால் தொடர முடியவில்லை. அவன் என்னுடன் அடிக்கடி பேசுவதையும் பழகுவதையும் பார்த்தவர்கள் இதை அப்பா காதிற்கு கொண்டு சென்றிருக்கிறார். அவரும் இன்ன சிலரும் அவன் வீட்டை தேடிக் கண்டுபிடித்து இனி என் மகளிடம் பேசவோ பழகவோ கூடாது, மீறி பேசினால் அவன் அப்பா, அண்ணன் மற்றும் குழந்தைகளை எல்லாம் கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.

ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. அன்று மாலை விஷயம் தெரிய வந்தது எனக்கு வீட்டில் மிக கேவலமாக திட்டும் அடியும் கிடைத்தது.

பேசினால் தீரும் :

பேசினால் தீரும் :

இந்தப் பிரச்சனை பேசினால், பேசி புரியவைத்தால் தீரும் என்று இருவரும் உறுதியாக நம்பினோம். என் வீட்டிற்கே வந்துவிட்டான். அப்போது வீட்டில் அம்மா மற்றும் பாட்டி மட்டுமே தான் இருந்தார்கள். அவர்களே கத்தி கூச்சலிட்டு ஊரைக் கூட்டி அடித்து துரத்தி விட்டார்கள்.

அங்கிருப்பவர்களிடத்தில் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனால் அவன் பேசுவதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை அவனை அந்த இடத்தை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள்.

பெரிய பிரச்சனை :

பெரிய பிரச்சனை :

கிழிந்த சட்டையும் ரத்தக் காயங்களுடன் அவனைப் பார்த்தவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.அவன் எங்கள் காதல் விவகாரத்தையும் அடித்து துறத்திய கதையையும் சொல்ல அவன் எப்பிடி நம்ம பையன் மேல கை வைக்கலாம் என்று கிளம்பி வந்து விட்டார்கள்.

டவுனுக்கு போயிருந்த அப்பா வந்திருந்தார் விஷயம் கேள்விப்பட்டு அவரும் சிலரை அழைத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். நீ தான அவன வர சொன்னியா? அவன் வந்து கேட்டா அப்டியே தார வார்த்து கொடுத்திடணுமா? அடிச்சும் உனக்கு புத்தி வர்லல.... என்று அடிக்கப்பாய்ந்தார்.... அதற்குள் எங்கள் வீட்டு வாசலில் அவனின் ஊர்க்காரர்கள் கூடி விட்டனர்.

இங்கே காதல் பிரச்சனையல்ல :

இங்கே காதல் பிரச்சனையல்ல :

வந்தவர்கள் பேசி எங்கள் காதலை சேர்த்து வைப்பார்கள் என்று பார்த்தால் வந்தவர்களில் ஒருத்தர் கூட அதைப் பற்றி பேசவேயில்லை. எங்காளுக மேல நீ எப்பிடி கை வைக்கலாம் இதே நாங்க கைய வச்சா சும்மா இருப்பியா? என்று ஆரம்பித்தார்கள் பதிலுக்கு எங்கள் தரப்பும் சொல்ல இருவருக்கும் வாய்த்தகராறு அதிகரித்தது

அப்படியே மெல்ல நகர்ந்து நகர்ந்து 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கொடுக்கவில்லை, பத்தாண்டுகளுக்கு முன் நடந்த பஞ்சாயத்து தேர்தல் போஸ்டரில் எங்கள் பெயரைப் போடவில்லை,

திருமணத்திற்கு வந்தவர்கள் சரியாக முறையை செய்யவில்லை, காதுகுத்திற்கு அழைக்கவில்லை என்று ஒன்றுமில்லாத ஈரவெங்காயத்தைப் பற்றியெல்லாம் மாறி மாறி புகார் வாசிகக் ஆரம்பித்தார்கள்.

அட கூருகெட்டவைங்களா..... என்னத்தடா பேசுறீங்க இப்போ எதுக்கு வந்தீங்க என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

திட்டம் :

திட்டம் :

நண்பர்கள் உதவியுடன் நாங்கள் இருவரும் தகவல்களை பரிமாறிக் கொண்டேயிருந்தோம். அவ்வப்போது வெளியில் சந்தித்துக் கொள்வதும் உண்டு. ஒரு கட்டத்தில் என்னை முற்றிலுமாக கல்லூரியிலிருந்து நிறுத்தினார்கள்.

நண்பர்களிடம் பேசுவதையும், வீட்டை விட்டு வெளியில் செல்வதையுமே அதிகமாக குறைத்தார்கள். எப்போதும் என்னை இரண்டு கண்கள் பார்த்துக் கொண்டேயிருந்தது. இந்த சிறையிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அப்போது தான் எனக்கு தோன்றியது.

அன்று இரவு அப்பாவும் சில ஆட்களும் முத்து அண்ணனை அழைத்து பெரிய கட்டு பணத்தை கொடுத்தார்கள். சொன்னபடி வேலைய முடிச்சுட்டு மீதிய வாங்கிக்க என்றார் அப்பா. அண்ணே விஷயம் நம்ம பக்கம் திரும்பிராதுல என்றார் ஒருவர் அதெல்லாம் பக்காவா முடிச்சிடுவான் நம்ம பய என்று முத்து அண்ணனின் தோலைத் தட்டினார்.

 கல்லூரிக்கு :

கல்லூரிக்கு :

இங்கிருந்து என்னை எப்படியாவது அழைத்துப் போய்விடு என்று அவனிடம் தகவலைச் சொல்ல வேண்டுமே..... நண்பர்களையும் வீட்டுக்குற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். வெளியிலும் செல்ல அனுமதிப்பதில்லை அதனால் செமஸ்டர் தேர்வினை சாக்காக வைத்து வீட்டில் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

இந்த ஒரு வாரப் பரிட்சை. இத எழுதினா டிகிரி கிடைச்சிடும். மூணு வருசம் படிச்சது பூரா வீணாகிடும் என்று அழுதேன்,அவனைப் பார்க்கமாட்டேன் அவனிடம் பேசமாட்டேன் என சத்தியம் செய்து கல்லூரிக்குச் சென்றேன். எல்லாருக்கும் விஷயம் தெரிந்தே இருந்தது என் பேராசிரியர் ஆறுதலாய் பேசினார். தைரியம் சொன்னார், இப்போது உன் தேர்வில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.

உதவி :

உதவி :

கல்லூரியிலும் என்னை கண்காணிக்க உடன்படிப்பவர்களையே அப்பா நியமித்திருந்தார். இது அவனுக்கு தெரிந்ததால் நான் இருக்கும் பக்கம் கூட வரவில்லை பேராசிரியர் உதவியுடன் அவனிடம் வீட்டில் நடக்கிற விவகாரங்களைச் சொன்னேன். அப்போ நம்ம வீட்ட விட்டு ஓடிப்போறத தவிர வேற வழியில்ல.... நாளைக்குத் தான் கடைசிப் பரீட்சை நம்ம நாளைக்கே போகலாம் என்றான். பேராசரியர் உதவுவதாக சொன்னார்.

அழுகை :

அழுகை :

எங்கே எப்படி செல்லப் போகிறோம். வீட்டில் என்ன செய்து சமாளிக்கப்போகிறோம் என்று குழப்பமாய் இருந்தது. தேர்வுக்கும் சரியாக படிக்க முடியவில்லை மனம் பூராவும் அவனையும் முத்து அண்ணனுக்கு அப்பா ஏன் காசு கொடுத்தார் என்பதிலேயே குறியாய் இருந்தது.

அதோடு எங்களால் ஆசிரியருக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்றும் பயமாய் இருந்தது.

இறுதி நாள் :

இறுதி நாள் :

கடைசிப் பரிட்சையும் வந்தது. தேர்வை முடித்து விட்டு எல்லா ஆசிரியர்களையும் சந்தித்து விட்டு விடைப்பெற்றுக் கொண்டிருந்தோம். என்ன பண்ண போறீங்க என்று கேட்டார் எங்களுக்கு உதவுவதாக சொன்ன ஆசிரியர்.

தெர்ல மேம்... வீட்ட நினச்சா தான் பயமா இருக்கு இங்க கூட எங்கப்பா என்னைய வேவு பாக்க ஆளுங்கல வச்சிருக்காங்க என்று வருத்தப்பட்டேன். அந்த பையன் எங்கயிருக்கான் காமி என்றார்.

தேர்வு முடிவுகள் :

தேர்வு முடிவுகள் :

இரண்டு மாதங்கள் இப்படியே ஓடியது. ரிசல்ட் வந்ததும் என்றும் இல்லாதவராய் அப்பா சரி விடு இப்படி டிகிரி இல்லன்னா எவனும் கட்டமாட்டானா. உன்னைய தான் வேலைக்கு அனுப்ப போறது இல்லையே. இதுக்கெல்லாம் ஏன் மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்க என்றார்.

எதுவும் புரியவில்லை அப்பா என்ன சொல்றீங்க நான் எங்க உம்முனு இருக்கேன். இல்ல ரிசல்ட்ட பாத்துட்டு சோகமா இருந்தியேன்னு என்று இழுத்தார்.

அப்பா டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணியிருக்கேன் நான் ஏன் சோகமா இருக்கப்போறேன் என்றதும் நீயா? பாஸ் பண்ணிட்டியா? என்று திரும்ப திரும்ப கேட்டார்.

ப்ளான் :

ப்ளான் :

ஏன்ப்பா இப்டி கேக்குறீங்க என்றேன்.... இல்லமா நீ நல்லா பாத்தியா அது உன் பேரு தானா நம்பர் எதாவது மாத்தி போட்டிருக்கப்போற என்றார். வழக்கமாக அப்பா இப்படியெல்லாம் பேசியதில்லை அப்பா சொல்ல சொல்ல எனக்கும் சந்தேகமாய்த் தான் இருந்தது.

கல்லூரிக்குச் சென்று என் ஆசிரியரை சந்தித்தேன் என்னைப் பார்த்ததுமே கங்கிராட்ஸ் கலக்கிட்ட என்றார். மேம் அந்த ரிசல்ட்...... எங்க வீட்ல யாருமே நம்பல தெரியுமா? எங்கப்பா திரும்ப திரும்ப அது உன் மார்க் தானானு கேட்டுட்டேயிருந்தாரு அதான் இங்க வந்தேன் என்றேன் .

பின்ன அவருக்கு சந்தேகமா இருக்காதா? என்றார் புரியாமல் விழிக்க... உன்னை ஃபெயில் பண்ணிவிடச்சொல்லி பிடி மாஸ்டர் மூலமா உங்கப்பா சொல்லியிருக்காரு அவரு நேரா என்கிட்ட வந்து உங்க க்ளாஸ் தான் நமக்கு வேண்டப்பட்டவரு கொஞ்சம் பாத்து செய்யுங்கன்னு சொல்லி உன் நம்பர சொன்னாரு எல்லாரும் பாஸ் பண்ண வைக்கச் சொல்லி தான கேப்பாங்க இவன் என்ன ஃபெயிலாக்கச் சொல்லி கேக்குறான்னு நம்பர வச்சு தேடினேன் பாத்தா உன் பேப்பர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father Opposed Daughter Love in New Way

Father Murdered Daughter Lover Because of Caste
Desktop Bottom Promotion