For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்களது தாம்பத்திய வாழ்க்கையை கெடுக்க என் மாமியார் போடும் நாடகம்! - My Story #76

கணவன் மனைவி உறவுக்குள் என் மாமியார் புகுந்து இப்படி எல்லாம் விளையாடுகிறாரே இது சரியா?

By Lakshmi
|

நான் என் வீட்டில் ஒரே பெண் எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். நான் கல்லூரி படிப்பை முடிந்து விட்டேன் ஆனால் எனக்கு அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை என்பதால், கல்லூரி காலம் முதலாகவே அரசாங்க வேலைக்கான பயிற்சிகளை தொடங்கி விட்டேன்.. ஒன்றல்ல இரண்டல்ல.. பல தடவைகள் நான் தேர்வு எழுதினேன்.. ஒரு சில தேர்வுகளில் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண்கள் பற்றவில்லை என்ற காரணத்தால் நான் அந்த தேர்வுகளில் தோல்வியடைந்துவிட்டேன்...

My Mother in law plays main role in my marriage life

ஆனால் கல்லூரி காலம் முடிந்ததும், விடாப்பிடியாக நன்றாக படித்தேன். அதன் விளைவாக எனக்கு சென்னையில் ஒரு அரசாங்க வேலை மிக நல்ல சம்பளத்தில் கிடைத்தது.. என் குடும்பத்தில், முதல் முதலாக அரசாங்க வேலைக்கு செல்வது நான் தான்...! என் அம்மா, அப்பா, அண்ணன் மூவரும் இதனை தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி சந்தோஷப்படுவார்கள்.. ஆனால் இந்த வேலையை பெற நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல... படித்து முடித்துவிட்டு வெட்டியாக வீட்டில் இருக்கிறாள் பாரு என்று என் சொந்தபந்தங்கள், பக்கத்து வீட்டு காரர்கள் என அனைவரும் என் கேலி பேசினார்கள்...

அந்த கிண்டல் கேள்விகளுக்கு எல்லாம் விடையாக கிடைத்தது தான் என் அரசாங்க வேலை...! இந்த வேலையால் எனக்கு ஊருக்குள் மதிப்பு உயர்ந்தது...! என்னை கேலி கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்று என்னை பார்த்து பெருமைப்படுகிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோரின் விருப்பம்

பெற்றோரின் விருப்பம்

நான் ஒரு ஆறு மாதங்களாக தான் வேலைக்கு சென்றிருப்பேன்.. அதற்குள் என் பெற்றோர்கள் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.. எனக்கு வேலை சென்னையில் என்பதால் எனக்கு மாப்பிள்ளையையும் சென்னையிலேயே பார்த்தார்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைத்தது. அவர் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.. நான் அவரது போட்டோவை கூட பார்க்கவில்லை. என் அம்மா, அப்பாவிற்கு பிடித்திருக்கிறது என்று சொன்ன காரணத்தால் நானும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்...

பிடித்த குடும்பம்

பிடித்த குடும்பம்

நான் அவரை எங்களது நிச்சயத்தன்று தான் முதல் முதலாக பார்த்தேன்... என் அப்பா, அம்மாவின் தேர்வு தப்பாகவில்லை என்று தோன்றியது. அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடன் நன்றாக பேசினார். அவரது அம்மா, அப்பாவும் என்னிடம் நன்றாக தான் பேசினார்கள், எனக்கு அவரது குடும்பத்தை ரொம்ப பிடித்துவிட்டது.

போன் தொடர்புகள்

போன் தொடர்புகள்

நிச்சயமான ஆறு மாதங்களில் எங்களுக்கு திருமணமும் நடக்கவிருந்தது. நாங்கள் இருவரும் தினமும் போனில் பேசிக்கொள்வோம். என்னை அவர் ஆழமாக காதலித்தது அவரது பேச்சிலேயே தெரிந்தது. எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை நினைத்து நான் மிக அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டேன்.. ஏனென்றால் அவர் என்னை அவ்வளவு அதிகமாக காதலித்தார்... அவர் மட்டுமல்ல தினமும் இரண்டு முறை என் அவரது அம்மாவும், அப்பாவும் எனக்கு கால் செய்து என்னுடன் பேசிவிடுவார்கள்... இதனால் அவர்களது குடும்பத்தின் மீது எங்களது குடும்பத்திற்கு நல்ல அபிப்பராயம் வந்தது...

எப்போது திருமணமாகும்

எப்போது திருமணமாகும்

நான் அவருடன் வாழப்போகும் நாள் எப்போதும் தான் வரும் என்று ஏங்கிக் கொண்டே இருப்பேன்... அவரை பார்க்க வேண்டும். அவரது கரங்களை பிடித்து நடக்க வேண்டும் என்று பலப்பல கனவுகள் எனக்குள் இருந்தது. அவர் என் அருகில் வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது... அவரை நான் அதிகமாக மிஸ் செய்வது போல தோன்றியது..! இந்த ஏக்கங்களுக்கு எல்லாம் தீர்வாக எங்களது திருமணம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடந்தது...

மகிழ்ச்சியான குடும்பம்

மகிழ்ச்சியான குடும்பம்

என் கனவுகள் எல்லாம் நிறைவேறியதை உணர்ந்தேன்.. என் கணவருக்கு ஐ.டியில் ஹைதராபாத்தில் வேலை... எனக்கு அரசாங்க வேலை என்பதால் என்னால் அவருடன் செல்ல முடியவில்லை.. ஆனால் திருமணமானது முதல் 10 நாட்கள் அவர் என்னுடன் இருந்தார்.. அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம்... அவரது அன்பை என்னால் மறக்கவே முடியாது.. அவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். என்னை என் மாமியார் எந்த வேலையையும் செய்ய விட மாட்டார்.. நானே சென்று உதவுகிறேன் என்று சொன்னால் கூட என் பேச்சை கேட்க மாட்டார்...!

பத்து நாட்கள்

பத்து நாட்கள்

என் கணவர் என்னுடன் இருந்த அந்த 10 நாட்கள் தான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அந்த 10 பத்து நாட்களுக்கு பிறகு என் கணவர் வேலைக்காக ஹைதராபாத் சென்று விட்டார். நான் எனது மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தேன்.. என் கணவர் என்னை இங்கே விட்டு சென்ற நாள் முதல் எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது...

மாறிய வாழ்க்கை

மாறிய வாழ்க்கை

என் கணவர் சென்றவுடன் என் மாமியார் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் முழுமையாக மாறியது... காலை டிபன், மதிய உணவு என வகைவகையாக சமைத்து வைத்து விட்டு தான் 20 கிலோ மிட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் எனது வேலைக்கு நான் செல்ல வேண்டிய நிலை இருந்தது... அதுமட்டுமல்ல.. நான் என்ன தான் வேலைக்கு சென்றாலும் கூட, வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்ய வேண்டியதாக இருந்தது...

 கொடுமைகள்!

கொடுமைகள்!

மேலும் என்ன தான் நான் அத்தனை வேலைகளை செய்தாலும் கூட, அவை ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறையை கண்டு பிடித்துவிடுவார்... நான் புடவை அணியும் விதத்தை பார்த்து கூட திட்டுவார்.. கிண்டல் செய்வார்.. என்னை அவர் நீ எதற்குமே உதவ மாட்டாய்... உன்னை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து என் மகனின் வாழ்க்கையை நானே கெடுத்துவிட்டேன் என்று என் மாமியார் என்னை அடிக்கடி திட்டுவார்... என் தோழியின் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்... தப்பு பண்ணிட்டனே... என்று புலம்புவார்... இதை பற்றி பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் என் முன்னாலேயே கூறுவார்...

கணவரிடம் கூறினேன்

கணவரிடம் கூறினேன்

என்னால் இதை எல்லாம் ஒரு நாள் பொருத்துக் கொள்ள முடிந்தது.. இரண்டு நாட்கள் பொருத்துக் கொள்ள முடிந்தது.. ஆனால் தினமும் இப்படி ஒரு கொடுமையை என்னால் அனுபவிக்க முடியவில்லை.. எனவே என் கணவரிடம் இது பற்றி பேசலாம் என்று நினைத்தேன்... ஒருநாள் உங்களது அம்மா இப்படி எல்லாம் செய்கிறார் என்று என் கணவரிடம் கூறினேன்.. அவர் என்னை நம்பவில்லை.. நான் கூறியது எல்லாம் உண்மையா என்று அவரது அம்மாவிடம் கேட்க தொடங்கினார்..

பேச முடியவில்லை

பேச முடியவில்லை

அதன் பயனாக என் மாமியார் என்னை பற்றி என் மாமானாரிடமும் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டார். இப்போது தான் என் பிரச்சனை இரண்டு மடங்கானது... என் மாமனாரும் என்னை கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டார்.. அவர்களிடம் இருந்து நான் கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு விட்டேன்.. என்னால் தாங்க முடியவில்லை.. என் கணவருடன் எத்தனை முறை பேச முயற்ச்சித்தாலும், நான் வெளியில் இருக்கிறேன், பிஸியாக இருக்கிறேன் என்று போனை வைத்துவிடுவார்...

திருந்திய கணவர்

திருந்திய கணவர்

நான் அவரை சந்திக்க நேரடியாக ஹைதராபாத் சென்றேன்... அவர் என்னுடன் பேசவே இல்லை.. என்னை அவமதித்தார்... நான் திரும்பி வந்துவிட்டேன்... அதன் பிறகு அவரது தவறை எல்லாம் உணர்ந்து அவர் பேசும் வரை நாம் பேசக்கூடாது என்று இருந்துவிட்டேன்... அவரும் தன் தவறை எல்லாம் உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு பேசினார்.. நமக்கு ஏற்ற மாதிரி அனைத்து விஷயங்களும் மாறுகிறது என்று நினைத்தேன்...!

வெடித்த பிரச்சனை

வெடித்த பிரச்சனை

நான் நினைத்தது தான் தவறானது.. என் கணவர் மாறினார்... ஆனால் என் கணவர் அவரது அம்மாவின் பக்கமாக தான் மாறினார்.. இந்த விஷயங்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. என் மாமனாருடன் பேசலாம் என்று நினைத்தேன்.. இந்த யோசனை தவறானது என்று என் மனது சொல்லியது.. ஆனால் நான் வேறு வழியின்றி எனது மாமனாருடன் பேசினேன்.. இதனால் நிலை மிகவும் மோசமானது.. என் மாமனாரும் மாமியாரும் சேர்ந்து என்னை வேலைக்காரியை விட கேவளமாக நடத்தினர்.

சுயமரியாதையை விட முடியுமா?

சுயமரியாதையை விட முடியுமா?

எனது அரசாங்க வேலையை விட சொன்னார்கள்.. எனக்கு இருக்கும் அரசாங்க வேலையையும் விட்டுவிட்டால், எனக்கு இருக்கும் கொஞ்ச மரியாதையும் சென்று விடும் என்று முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர்கள், நீ வேலையை விடவில்லை என்றால் நீ வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும் என்று கூறினார்கள்.. நான் என் அம்மாவிற்கு போன் செய்து நடந்த விஷங்களை எல்லாம் சொல்லிவிட்டேன்...

வீட்டை விட்டு வெளியேறினேன்

வீட்டை விட்டு வெளியேறினேன்

என் அம்மா என்னை அழைத்து செல்ல வந்தார்.. அழைத்து செல்லும் போது மாப்பிள்ளை வந்து கூப்பிட்டால் தான் என் மகளை நான் மீண்டும் அனுப்பி வைப்பேன் என்று கூறிவிட்டு வந்தார்.. இந்த செய்திகள் எல்லாம் என் கணவருக்கு எப்படி சென்றதோ தெரியவில்லை.. அவர் வாட்ஸ் அப், பேஸ் புக், போன் நம்பர் என அனைத்தையும் பிளாக் செய்து வைத்துவிட்டார்.. எனக்கு அவரை தொடர்பு கொண்டு பேசமுடியாத நிலை உள்ளது...

தவறானவள் என்ற பெயர் எனக்கு!

தவறானவள் என்ற பெயர் எனக்கு!

மூன்று மாதங்கள் ஆகிறது... என் கணவருடன் பேச இன்னும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. என் கணவருக்காக நான் காத்திருக்கிறேன்... ஆனால் என் கணவர் என்னை மிகவும் மோசமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. என் கணவரிடம் என் பக்கம் உள்ள நியாத்தை விளக்க கூட முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Mother in law plays main role in my marriage life

My Mother in law plays main role in my marriage life
Desktop Bottom Promotion