For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ்டிங் செய்யும் நபரா நீங்க? பாத்து சூதானமா இருந்துக்குங்க!

செக்ஸ்டிங் செய்யும் நபர்கள், அது பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

|

செக்ஸ்டிங்கா? எப்படின்னா என்ன? செக்ஸ்டிங் என்றால் ஒரு நபர் இன்னொரு நபருக்கு ஆபாசமான செய்தி, படம் அல்லது வீடியோ அனுப்புவது. இதை பதின் / இளம் வயதில் பலர் திரில்லுக்காக செய்கின்றனர்.

செக்ஸ்டிங் என்பது பாதுகாப்பற்றது. பலரும் தங்கள் அந்தரங்க படங்களை ஒரு நபருடன் பகிர்ந்து, பிறகு அதை இணையத்தளங்களில் பகிரப்பட்டதை கண்டு வாழ்க்கையே இழந்தவர்களும் இருக்கின்றனர்.

இந்த செக்ஸ்டிங் குறித்து ஒரு பெண் புகார் கொடுத்தால், அந்த நபரை போலீஸ் உடனே கைது செய்யும் என்பதை யாரும் மறந்துவிட கூடாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நம்மில் பலரும் ஆண்கள் மட்டும் தான் செக்ஸ்டிங் செய்வார்கள் என கருதலாம். ஆனால், ஒரு ஆய்வில் 60% பெண்கள் செக்ஸ்டிங்கில் அவர்களது காதலருடன் ஈடுபடுகிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

சில நாடுகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக செக்ஸ்டிங் செய்கிறார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#2

#2

சில பெண்கள் தங்கள் பதின் வயதில் மட்டுமே செக்ஸ்டிங்கில் ஈடுபட்டோம் என கூறுகின்றனர். இதில்...,

  • 40% பேர் திரில் அனுபவத்திற்காக செக்ஸ்டிங்கில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
  • 35% பேர் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த செக்ஸ்டிங்கில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
  • 12% பேர் உடன் இருக்கும் தோழிகள், மற்ற பெண்கள் ஈடுபடுவதை கண்டு ஈடுபட்டோம் என கூறியுள்ளனர்.
  • இவர்கள் எல்லாம் முதிர்ச்சி அடைந்த பிறகு செக்ஸ்டிங்கில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    #4

    #4

    ஏறத்தாழ 40% பெண்கள் செக்ஸ்டிங் செய்யும் போது, வேண்டிய செய்திகளுக்கு இணங்கி பதிவு செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால், பெண்களை காட்டிலும், ஆண்கள் தான் அதிகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    #5

    #5

    பல நாடுகளில் நிர்வாண படங்கள் பகிர்வது குற்ற செயலாகும். 18 வயதுக்குட்பட்டவர்கள் நிர்வாண படங்களை பகிர்வதும், பெறுவதும் குற்றமாகும் என்றும், இதற்காக சிறை தண்டனை பெற கூட பெறலாம் என்றம் கூறப்படுகிறது.

    #6

    #6

    பல ஆண்கள் பெண்கள் செய்தி அனுப்பினாலே, அவர் அதற்கு விருப்பமாக இருக்கிறார் என எண்ணுகின்றனர். ஆனால், அப்படி இல்லை, பெரும்பாலான பெண்கள் பேச மட்டுமே விரும்புகின்றனர் என்றே அர்த்தம். இதை தவறாக உணர்ந்து பல ஆண்கள் செக்ஸ்டிங் செய்ய துவங்குவது உண்டு.

    #7

    #7

    ஆண்கள், இரவில் செய்தி அனுப்பும் பெண்கள் வரைமுறையற்றவர்கள் என எண்ணுவது உண்டு. அவர்களது குணாதிசயங்கள், பண்புகள் மீது தவறான கருத்தும் கொள்வதுண்டு. இது போன்ற எண்ணம் முற்றிலும் தவறானவை.

    #7

    #7

    சில, ஆண்கள் விடியற்காலையில் ஒரு பெண் செய்தி அனுப்பினால், உடனே அவருடன் மறைமுகமாக வேறு மாதிரி பேச துவங்குவதாக பெண்கள் கூறியிருக்கின்றனர்.

    மேலும், செக்ஸ்டிங் கில் ஈடுப்பட்டு அந்த பெண் புகார் அளித்தால் கம்பி தான் எண்ண வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். ஒரு ஸ்க்ரீன்ஷாட் ஆதாரமே போதுமானது என காவல் துறை கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Sexting

Sending or receiving erotic stuff over the mobile in the form of a text, picture or a video is known as sexting and it is a crime in many countries.
Desktop Bottom Promotion