For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர்கள் பிரிந்த பின்னர் நட்பு பாராட்ட முடியுமா?

இணையர்களாலேயோ அல்லது வெளி சூழ்நிலைகளாலோ காதல், திருமணத்தை நோக்கி நகரவில்லையெனில் என்ன செய்யப்போகிறோம்? விட்டுச் சென்ற உறவை எப்படி அணுகலாம் என்பதை பற்றி இப்போது பேசலாம்.

|

காதலர்களுக்கான காலம் உலகம் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். இணையர்களாலேயோ அல்லது வெளி சூழ்நிலைகளாலோ காதல், திருமணத்தை நோக்கி நகரவில்லையெனில் என்ன செய்யப்போகிறோம்? விட்டுச் சென்ற உறவை எப்படி அணுகலாம் என்பதை பற்றி இப்போது பேசலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் பறவை :

காதல் பறவை :

உயிருக்கு உயிராய் நேசித்த உறவு ஒன்று திடீரென்று விலகிச் செல்ல நேரிடும். ஆம், கண்டிப்பாக இச்சூழல் வரும் . அப்போது , அதை அணுகும் விதத்தில் அதை கடந்து போகிற அழகில் தான் உங்களது மொத்த எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

காதல் என்பது ஓர் பறவையைப் போல, அது வானத்தில் பறந்து கொண்டேயிருக்க வேண்டும். சுதந்திரமாய் சுற்ற வேண்டும்.

கூண்டில் அடைத்து வைத்து சிறைபடுத்த நினைப்பது பெரும் தவறு. உயிருக்கு உயிராய், உங்களுக்கு மிகவும் பிடித்தமான, உங்களை மிகவும் நேசித்த ஒர் உறவு இனி இல்லை என்பதை முதலில் உணருங்கள்.

அதனை நம்புங்கள். இதுவரை காலமும் என் எதிர்காலமே அவள்/ன் தான் என்று ஆசையில் திளைத்த உங்களுக்கு இந்த முடிவு ஏற்க முடியாதவையாகவும், ஜீரணிக்க முடியாதவையாகவும் இருக்கலாம்.

ஆனால் உண்மையை நீங்கள் உணர வேண்டியது மிக மிக அவசியம்.

காதல் பலூன் :

காதல் பலூன் :

காதலை காதலாக அணுகுங்கள். இன்றைக்கு காதல் மீது ஓர் நோயைப் போல பார்வையும் நோயாளிக்கான அணுகுமுறையும் தான் இருக்கிறது.

நீங்கள் வாழ்ந்து முடித்திடும் காலம் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் வரட்டும். ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் சேமித்திடுங்கள்.

பின்னாட்களில் உங்கள் ஓய்வு நேரங்களை நிரப்பிட ஏராளமான நினைவுகளை அனுபவித்திடுங்கள். சோர்ந்து சுருண்டு கிடந்த பலூனுக்குள் காற்று உள்ளே செல்ல செல்ல விரியும்... விரியும்... பலூனின் கொள்ளவைத் தாண்டி ஒர் இன்ச் அதிக காற்றை ஊதினாலும் அது வெடித்துவிடும். அது போலத்தான் இந்த காதலும்.

காதலில் எதையும் திணிக்க பார்க்காதீர்கள். நிறைகளை விரும்பி ஏற்பது போல குறைகளையும் விரும்பி ஏற்க பழகுங்கள்.

காதல் எப்போதும் சுகமாய்த் தெரியும்.

கனவு வாழ்க்கை :

கனவு வாழ்க்கை :

என் காதல் என்னை விட்டுச் சென்றால் என்ன? எங்கள் காதலின் சாட்சியாக நான் இருப்பேன் என்பதோ என் இணையோடு கனவுலகில் ஆசை தீர வாழ்வேன் என்று கற்பனை வாழ்க்கை வாழ்வது என்பது சுத்த முட்டாள்தனமானது.

கனவு வாழ்க்கைக்குள் சென்று அதில் அடிமையானவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜெயிப்பது, ஜெயிப்பது ஏன் வாழ்வதே கடினம். ஒரு நாளின் மூன்று வேலையும் ஒரே உணவு சாப்பிட்டால் அலுப்பு வரும் தானே அதே போலத் தான் இந்த வாழ்க்கையும்.

காதல் நமக்கெல்லாம் வாய்க்கதா என்று ஏங்கி தவித்து, உங்கள் மனதுக்கு பிடித்த இணையுடன் பேசியது,நட்பு பாராட்டியது, விடிய விடிய பேசியது, சொல்ல நினைத்து தயங்கி நின்றது, வாழ்க்கையில் இதைவிட வேறு சந்தோசம் ஏதேனும் இருந்திடுமா என்று மகிழ்வின் எல்லைக்கே சென்று வந்தது, என எல்லா நினைவுப் பொக்கிஷங்களை சேகரித்து நினைத்து நினைத்து அனுபவிப்பது போலவே பிரிவையும் அனுபவிக்கலாம் . இதில் தவறே இல்லை.

பிரிவுத் துயர் :

பிரிவுத் துயர் :

காதலின் எல்லை திருமணம் என்று யார் சொன்னது? காதலுக்கு எப்படி ஓர் எல்லையை வகுத்துக் கொள்ள முடிகிறது உங்களால்.

உங்களுக்கு பிடித்தமான ஒரு நபர் வாழ்க்கை முழுவதும் கூடவே வர வேண்டும் என்கிற ஆசை, எதிர்ப்பார்ப்பு தான் இணையாய் வர சம்மதம் கேட்க வைக்கிறது.

உணர்வுப்பூர்வமான காதல் என்பது அதனை கையாளும் விதத்தில் தான் இருக்கிறது. காதலின் ஒவ்வொரு சம்பவங்களின் போது அதை தள்ளி நின்று ஒரு நிமிடம் யோசித்தால் எந்த ஓரு உணர்வுப்பூர்வமான முடிவுகளையும் உங்களால் எடுக்க முடியாது.

காதலிக்க ஆரம்பிக்கும் போது இனி வாழ்க்கை முழுவதும் என்னுடனே இருக்கப்போகிறவன்/ள் என்று நினைத்து நினைத்து திருப்தியடைந்த உங்களுக்கு திடீரென்று இல்லை என்றானதும் மனம் வெடித்து அழத்தான் செய்யும்.

இல்லை இனி அந்த நபரை முழுவதுமாக மறந்துவிட்டேன். முற்றிலுமாக துறந்துவிட்டேன் என்று நினைத்த நேரத்தில் நீக்க நினைப்பது என்பது நீங்கள் செய்யும் முட்டாள் தனமான செயல்.

ஏன் மறக்க வேண்டும் ?:

ஏன் மறக்க வேண்டும் ?:

சில ஆண்டுகள் காதலித்தோம். பின் பிரிந்துவிட்டோம். பிரிவிற்கான காரணங்களை தேடிப்பிடித்து ஆராய்ந்து என் மேல் எந்த தப்பும் இல்லை என்று நியாயம் கற்பிப்பதை விட்டுவிடுங்கள்.

தவறு யார் மீதும் இருக்கட்டும். உங்கள் மீது, பெற்றோர் மீது, இந்த சமூகம் மீது, பணத்தின் மீது, காதலின் பிரிவுக்கு காரணங்களா வேண்டும்? பிரிவிற்கு பிறகு முற்றிலுமாக மறக்கப்போகிறன் என்று துவங்கி தோற்றுப்போகாதீர்கள்.

நீங்கள் மிகவும் நேசித்த ஒரு பொருளை, நபரை மனதிலிருந்து முற்றாக வழித்தெடுக்க எல்லாம் முடியவே முடியாது. மனதின் ஏதோ ஒர் மூலையில் அந்த காதலின் ஈரம் துளிர்த்துக் கொண்டேயிருக்கும்.

அது கசிந்திடும் நேரத்தில் சுதாரித்திடுங்கள்.

மறத்தல் தகுமோ :

மறத்தல் தகுமோ :

சரி, விலகிச் சென்ற காதலை என்ன செய்யலாம். காதல் பிரிந்த அந்த கணத்தில் உங்களின் உறவுகளுக்குள் முற்றுப் புள்ளி வைத்திடுங்கள். இந்த புள்ளி காதல் உறவுக்கு மட்டுமே.

அதே உறவிடம் தாராளமாக நட்பு பாராட்டுங்கள். புதிய வாழ்க்கை நலமாக வாழ வாழ்த்துக்கள் சொல்லுங்கள். என்னை ஏமாற்றிவிட்டாள், என் காதலை கொச்சை படுத்திவிட்டாள் என்று புலம்பாமல் நிதர்சனங்களை ஏற்க பழகுங்கள்.

முற்றிலுமாக மறக்கப்போகிறேன் என்று சமூகவலைதள பக்கங்களில் ப்ளாக் செய்வது, போன் நம்பரை டெலிட் செய்வது எல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.

எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் ஒழித்துக் கட்ட நினைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் உங்கள் நினைவுகளில் அது இருந்து கொண்டேயிருக்கும்.

என்ன செய்யலாம் :

என்ன செய்யலாம் :

பிரிவுக்குப் பின்னும் தாராளமாக உங்கள் இணையுடன் பேசுங்கள். "லவ்- யூ" என்று முன்னால் அனுப்பிய குறுஞ்செய்திகள் இப்போது வேண்டாம்.

காதலிடம் பச்சாதாபம் எதிர்பார்க்காதீர்கள் பிரிந்த பின் இணையின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்காதீர்கள். அவரது வாழ்க்கையை அவர் வாழட்டும். பேச ஆரம்பித்த பிறகு, காதலித்த போது நடந்த சம்பவங்களை எல்லாம் நினைவுபடுத்தி ஒருவர் செய்த தவறுகளை இன்னொருவர் கிளறி சண்டையை ஆரம்பிக்காதீர்கள்.

இவ்வளவு நாட்கள் நகமும் சதையுமாய் இருந்தவர்கள் பிரிவை உணரட்டும். இந்த இடைவேளை என்ன சொல்கிறது என்பதை யோசிக்கட்டும். வர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டால் தோல்வியென கருதி சோர்ந்து போகாமல் நட்பு பாராட்டுங்கள்.

காதலுக்கு கை குலுக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love marriage friendship life
English summary

After Breakup Is It Possible Maintain Friendship With Ex?

After Breakup Is It Possible Maintain Friendship With Ex?
Desktop Bottom Promotion