Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!
சிவனுக்கு எப்படி மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் பெரும் சக்தி பெற்றுள்ளதோ. அப்படி தான் மனிதர்களுக்கு மூன்றாவது கையான தன்னம்பிக்கை பெரும் சக்தியை தரவல்லது. தன்னம்பிக்கை இருப்பவர் ஒருபோதும் வீழ்ச்சியடைவதில்லை.
தன்னம்பிக்கைக்கு உதாரணமான தல தோணி, அஜித் இடையேயான ஒற்றுமைகள்!
பெரும்பாலும் தன்னம்பிக்கை இழக்கும் தருவாயில் தான் நாம் உறவிலும், வேலையிலும், வளர்ச்சியிலும் சரிவை சந்திக்கிறோம். தன்னம்பிக்கையை வளர்க்க மருந்து ஏதேனும் இருந்தால் அது தான் தற்போதைய உலகில் அதிகம் விற்பனையாகும் பொருளாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்....
தன்னம்பிக்கை வளர்ப்பதற்கான மருந்து உங்களிடமே இருக்கிறது. ஆம் அது நீங்கள் தான்.., உங்களுடைய எண்ணம் தான்....

தோற்றம்
கருப்பாக இருப்பினும் சரி, வெள்ளையாக இருப்பினும் சரி, முகம் வடிவாக இருப்பினும் சரி, இல்லாவிடிலும் சரி நீங்கள் அழகு தான் என்பதை மனதால் நம்புங்கள். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் முதல் கருவி உங்களை நீங்களே உயர்வாக எண்ணுவது தான்.

எதிர்மறை எண்ணங்கள்
எக்காரணம் கொண்டும், எந்த செயலில் ஈடுபடும் போதும், துவங்கும் போதும் எதிர்மறையாக எண்ண வேண்டாம். இது உங்கள் தன்னம்பிக்கியை கெடுக்கும் செயலாகும். எனவே, எப்போதும் நேர்மறையாக எண்ண துவங்குங்கள். தோற்றாலும் கூட அடுத்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றியடைய முடியும் என நம்புங்கள்.

பிரதிபலிப்பு
சமூகத்தில் நீங்கள் பிரதிபலிக்கும் படி செயல்களில் ஈடுபடுங்கள். மற்றவர்களுக்கு உதவுங்கள். முடிந்த வரை வார்த்தை அளவிலாவது மனதுக்கு ஆறுதலாக பேசுங்கள். சமூகத்தில் உங்கள் பெயர் வளர, வளர உங்கள் தன்னம்பிக்கையும் வளரும்.

பண்பு
மற்றவரிடம் பண்பாக, அன்பாக நடந்துக் கொள்ளுங்கள், கனிவாக பேசுங்கள்.

தன்னடக்கம்
உங்களை பற்றி நீங்களாக தற்பெருமையாக பேச வேண்டாம். மேலும், மற்றவர்கள் புகழ்ந்தாலும் வானுயரத்திற்கு சென்றுவிட வேண்டாம். தன்னடக்கம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

தொலைநோக்கு பார்வை
உங்களது திட்டங்கள், முயற்சி, செயல்பாடுகள் என அனைத்தையும் தொலைநோக்கு பார்வையில் காண துவங்குங்கள். இது நீங்கள் தோல்வியடையாமல் இருக்க உதவும்.

பயிற்சி
வேலை மட்டுமின்றி உடற்பயிற்சியும் கூட மிகவும் முக்கியமாகும். உடலும், மனதும் ஒரு சேர்ந்து வலுமையாக இருப்பது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

அக்கறை
உங்கள் மீதும், உங்களை சுற்றி இருக்கும் உறவினர், நட்பு வட்டாரத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல், உங்கள் அருகில் இருப்பவருக்கு ஏதேனும் உதவி வேண்டும் எனில் தயங்காமல் நீங்களாக சென்று உதவுங்கள்.

திட்டங்கள்
எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதையும் திட்டமிட்டு செய்ய துவங்குங்கள். ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து களத்தில் இறங்குங்கள். மேலும், பலரிடம் ஆலோசனை பெற்று நீங்களாக ஓர் தீர்க்கமான முடிவை எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

அச்சம்
அச்சம் தவிர்! தோல்வியும் சரி, வெற்றியும் சரி இரண்டுமே நிலையற்றவை தான். மேகத்தை போல அவை உங்கள் வாழ்க்கையில் கடந்துக் கொண்டே இருக்கும். எனவே, எதை கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications