ஆண்கள், பெண்களை விட இன்பமாக இருப்பதற்கான காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கையை அனுபவிப்பதில் பெண்களை விட ஆண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் என்ற ஒரு கருத்து காலம், காலமாக நிலவி வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும். கண்டிப்பாக குடியும், ஊர் சுற்றுவதும் மட்டுமல்ல.

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

சாதாரண விஷயங்களை சாதாரணமாகவே பார்க்கும் பண்பு ஆண்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. தேவையற்ற பொறாமை, ஆசைகள் ஆண்களிடம் குறைவு. எடுத்துக்காட்டாக பார்த்தால், தன்னை மாதிரியே உடை அணிந்து வேறு பெண்ணை கண்டால் பெண்கள் தாங்கள் அந்த நிகழ்வில் தனித்துவமாக இல்லை என்று நினைத்து நொந்துக் கொள்வார்கள்.

ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!!

ஆனால், ஆண்கள் மத்தியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் உடனே நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இதுப் போன்ற சின்ன, சின்ன விஷயங்கள் தான் ஆண்கள் பெண்களை விட இன்பமாக இருப்பதற்கான காரணங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போன் கால்

போன் கால்

சராசரியாக எந்த ஆணும் சில நிமிடங்களுக்கு மேல் அலைபேசியில் பேசுவதே இல்லை. ஆனால், பெண்கள் அப்படியா, காலையில என்ன சாப்பிட்ட.. என ஆரம்பித்து உறவினர், தோழிகள், சகோதரி என அனைவருடனும் பல மணி நேரங்கள் பேசுவார்கள்.

போன் கால்

போன் கால்

நல்ல விஷயத்தில் பேச்சை ஆரம்பித்தாலும், ஏதேனும் பழைய சண்டைகள், அக்கம்பக்கத்து பிரச்சனை என வேண்டாதவற்றை பற்றி பேசி தங்கள் மகிழ்ச்சியையும் கெடுத்துக் கொள்வார்கள்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ்

உடை விஷயத்தில் தான் பெண்கள் மிகவும் மெனக்கெட்டு அலைந்து திரிந்து நொந்துப் போவார்கள். ஆனால், ஆண்கள் அப்படியில்லை ஜீன்ஸ் தான் பெரும்பாலான சாய்ஸ். கருப்பா நீலமா என்பதை பற்றி மட்டும் சில நிமிடங்கள் யோசிப்பார்கள் அவ்வளவு தான்.

அழைப்புகள் தேவையில்லை

அழைப்புகள் தேவையில்லை

திருமணம், வீட்டு விஷேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு கட்டாயம் அழைப்பிதழ் வைத்து அழைக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கும்.

அழைப்புகள் தேவையில்லை

அழைப்புகள் தேவையில்லை

ஆனால், ஆண்களுக்கு நண்பர்கள் மறந்தே போனாலும் கூட, மற்றவர் யாரேனும் கூறினால் கூட போதும், நிகழ்வுக்கு சென்று ஜமாய்த்து விட்டு தான் திரும்புவார்கள்.

சண்டைகள்

சண்டைகள்

நண்பர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டால் மறுநாளே மறந்து மீண்டும் அதே நட்புடன் பழகும் குணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பெண்கள் அப்படியில்லை, முதலில் அவள் வந்து மன்னிப்புக் கேட்கட்டும் பிறகு போய் பேசலாம் என்று நாட்களை கடத்துவார்கள்.

தோற்றம்

தோற்றம்

பெண்கள் பதின் வயதில் பொம்மை போன்றும், இருபதுகளில் தேவதை போன்றும் இருக்க விரும்புவார்கள். திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டி என ஆன பிறகும் சிலர் தோற்றத்தை பற்றி கவலைக் கொள்வது உண்டு.

தோற்றம்

தோற்றம்

ஆனால், ஆண்கள் அப்படி இல்லை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அந்த சிகை அலங்காரம் கூட மாறாது. மேலும், முப்பதை கடக்கும் போது தான் ஆண்கள் மேலும் அழகாக தோற்றமளிக்கின்றனர்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பத்து நிமிடத்தில் ஷாப்பிங் செய்யும் திறமை கொண்டவர்கள் ஆண்கள். ஆனால், பெண்கள் அவர்களுக்கு ஒரு புடவை வாங்கவே பத்துக் கடைகள் ஏறி இறங்கி தான் வாங்குவார்கள்.

கவலை இல்லை

கவலை இல்லை

தான் அணிந்துள்ளதை போலவே இன்னொரு ஆண் உட அணிந்திருந்தால் ஆண்கள் கவலை கொள்ள மாட்டார்கள், மாறாக நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.

கவலை இல்லை

கவலை இல்லை

ஆனால், பெண்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்கள். இதெல்லாம் தான் ஆண்கள் ஏன் பெண்களை விட இன்பமாக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான காரணமாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Boys Are Happy Creatures Than Girls

Reasons Why Boys Are Happy Creatures Than Girls, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter