Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! இந்த 4 வகை காண்டம் உங்க துணைக்கு அதிக இன்பத்தைக் கொடுக்குமாம்... அடுத்தமுறை பார்த்து வாங்குங்க...!
பாதுகாப்பான உடலுறவுக்கும், தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்கும் காண்டம் உபயோகிப்பது மிகவும் எளிதான மற்றும் விலை குறைவான வழியாகும். காண்டம் பயனுள்ளது சாதகமாக இருந்தாலும் அது முழுமையான உடலுறவு அனுபவத்தை தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் அதன்மீது வைக்கப்படுகிறது.
சரியான ஆணுறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த குறைபாட்டை சரி செய்யலாம். கடைகளில் பல வகையான ஆணுறைகள் கிடைக்கிறது. இதில் சில ஆணுறைகள் உங்களின் உடலறவு அனுபவத்தை மகிழ்ச்சிகரமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றக்கூடும்.

எனவே உங்களுக்கு ஏற்ற பொருத்தமான ஆணுறையை வாங்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் எந்த வகை காண்டம் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறுகிறோம். யூஸ் பண்ணிக்கோங்க.
புள்ளியிடப்பட்ட ஆணுறைகள்(Dotted Condoms)
புள்ளியிடப்பட்ட ஆணுறைகள் மேற்பரப்பு முழுவதும் சற்று உயரமான புள்ளிகளைக் கொண்டிருக்கும். இந்த அமைப்பு உடலுறவின் போது உராய்வை அதிகரிக்க உதவுகிறது மற்றும் அனுபவத்தை தீவிரப்படுத்துகிறது. இதன் சிறந்த தூண்டுதல், நீங்களும் உங்கள் துணையும் சிறந்த உடலுறவு அனுபவத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.
பெரும்பாலான பெண்கள் மெல்லிய அல்லது மிக மெல்லிய ஆணுறைகளை விட சற்று கடினமான ஆணுறைகளை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது, உங்கள் துணையின் ரசனைக்கு ஏற்ப இதனை வாங்கலாம்
சில பெண்கள் வறட்சியை அனுபவிக்கிறார்கள் மற்றும் புள்ளியிடப்பட்ட ஆணுறைகளை உபயோகிக்கும் பொது நிறைய லூப் பயன்படுத்த தேவைப்படலாம்.
ரிப்பட் ஆணுறைகள்(Ribbed Condoms)
ரிப்பட் ஆணுறைகளும் இன்பத்தை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், புள்ளிகளுக்குப் பதிலாக இந்த ஆணுறைகள் மேற்பரப்பு முழுவதும் கடினமான முகடுகளைக் கொண்டிருக்கும். சில ஆணுறைகள் க்ளிட்டோரல் தூண்டுதலுக்காக நுனிப்பகுதியில் மட்டுமே ரிப்பட் செய்யப்படுகின்றன, மற்றவை முழுவதும் ரிப்பட் செய்யப்படுகின்றன.
வழக்கமான ஆணுறைகளை விட இந்த ஆணுறைகள் வித்தியாசமான அனுபவத்தை உங்கள் துணைக்குக் கொடுக்கும். ஆனால் இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது நல்லதல்ல.
மெல்லிய அல்லது மிகவும் மெல்லிய ஆணுறைகள்(Thin or Ultra Thin Condoms)
மெல்லிய அல்லது மிக மெல்லிய ஆணுறைகள் ஆண்களால் மிகவும் விரும்பப்படுகின்றன, ஏனெனில் இது ஆண்களுக்கு ஆணுறை அணிந்திருக்கும் உணர்வையேத் தராது. ஆணுறை மெல்லியதாக இருந்தால், அவரது அனுபவம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், பல பெண்கள் மெல்லிய அல்லது மிக மெல்லிய ஆணுறைகளை விரும்புகிறார்கள். புள்ளியிடப்பட்ட மற்றும் ரிப்பட் ஆணுறைகள் பெண்களுக்கு இருமடங்கு இன்பத்தைக் கொடுத்தாலும், சில பெண்கள் மெல்லிய ஆணுறைகளையே விரும்புகின்றனர்.
நீண்ட காலம் நீடிக்கும் ஆணுறை(Long lasting condoms)
நீண்ட காலம் நீடிக்கும் ஆணுறை சிறப்பு லூப்ரிகண்டுடன் வருகிறது, இது ஆண்களுக்கு நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் அந்த சிறப்பு தருணத்தை நீட்டிக்க உதவும். எனவே நீங்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட விரும்பினால், இந்த ஆணுறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பிராண்டட் ஆணுறைகளில் பெரும்பாலானவை உயவூட்டப்பட்டவை. மேலும் உங்கள் காதல் விளையாட்டை அதிக நேரம் நீட்டிக்க விரும்பினால், உச்சக்கட்டத்தை திறம்பட நீட்டிக்கும் லூப்களை வாங்கவும்.
இது கூடுதல் நேரம் வேலை செய்யும், எனவே இது உங்கள் துணைக்கு அதிக இன்பத்தைக் கொடுக்கும், மேலும் முதல் முறையாக ஆணுறை பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
பொதுவாக பெண்கள் உடலுறவுக்கு எந்த வகையான ஆணுறைகளையும் விரும்பலாம். ஆணுறையை விட, உங்களின் திறனும், பொசிஷனுமே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
