For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளைஞர்களே! இந்த வயதில் இந்த தவறுகளை செய்வது உங்க வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்துமாம்...!

ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட் மற்றும் சேமிப்பு. உங்களிடம் நிறைய பணம் இருந்தாலும், கண்மூடித்தனமாக செலவு செய்யாதீர்கள்.

|

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு காலமும் நமக்கு மிகவும் முக்கியமானது. 50 வயதை கடந்த பிறகு சிறிய வயது முதல் தற்போது வரை உள்ள நினைவுகளை நாம் நினைத்து பார்த்து வாழ்வோம். இதில், மிகவும் முக்கியமான காலகட்டம், நம் இளைமை பருவ தொடக்கம். 20 வயதை தொட்டவுடன் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும், அதோடு பல கடமைகளும் பொறுப்புகளும் நமக்கு சேர்த்துவிடும். உங்களின் 20ஆவது வயதில் உங்களின் முக்கிய நேரம் மற்றும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தவறு செய்வது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வதும் மிகவும் கவனமாக இருப்பதும் நியாயமானது.

avoid-these-mistakes-in-your-20s-at-all-costs-in-tamil

ஏனென்றால் உங்கள் 20 வயதில் ஒரு எளிய தவறு உங்களுக்கு பெரும் சுமையாக இருக்குமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பிற்காலத்தில் வருத்தப்படுவதைத் தடுக்க, உங்கள் 20ஆவது வயதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்ஜெட் செய்ய கற்றுக்கொள்ளவில்லை

பட்ஜெட் செய்ய கற்றுக்கொள்ளவில்லை

ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட் மற்றும் சேமிப்பு. உங்களிடம் நிறைய பணம் இருந்தாலும், கண்மூடித்தனமாக செலவு செய்யாதீர்கள். பணத்தைச் சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் நிதிநிலையை மேலும் அதிகரிக்க உதவும். இதன் மூலம் நீங்கள் வசதியான வாழ்க்கையை வாழ முடியும். சரியான பட்ஜெட் கட்டமைப்பின்றி பணத்தை செலவழித்தால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்தல்

சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்தல்

உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் நட்சத்திரமாக ஒளிர்ந்தாலும், சமூக ஊடகங்களில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய அதிகமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகமாக வெளியில் தெரிவிப்பது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஊகங்களைச் செய்வதால் உங்கள் உணர்ச்சி மற்றும் மன நிலையை மிகவும் எதிர்மறையாக பாதிக்கலாம்.

உடற்பயிற்சி செய்யவில்லை

உடற்பயிற்சி செய்யவில்லை

எந்த வகையான உடற்பயிற்சியையும் தவிர்ப்பது ஆபத்தானது. அதுவும் இளம் வயதில் நீங்கள் சுறுப்பாக இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இல்லையெனில், நீங்கள் 50 அல்லது 60 வயதை நோக்கிச் செல்லும்போது, ​​உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கலாம். அது உங்களுக்கு மிகவும் கடினமான நேரத்தைத் தரக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது.

பாதுகாப்பு வளையத்திற்குள் தங்கியிருங்கள்

பாதுகாப்பு வளையத்திற்குள் தங்கியிருங்கள்

உங்கள் 20ஆவது வயது என்பது வாழ்க்கையில் நீங்கள் பரிசோதனை செய்து எந்த திசையை நோக்கி செல்ல வேண்டும் என்பதை பகுப்பாய்வு செய்யக்கூடிய நேரம். நீங்கள் எப்போதும் உங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் தங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது உங்கள் திறன்களை வளர்வதைத் தடுக்கும். உங்கள் ஆறுதல் மண்டலத்திற்குள் தங்குவதன் மூலம், வாய்ப்புகளைப் பெறுவதில் இருந்து உங்களைத் தடுத்து நிறுத்துவீர்கள்.

அலுவலக விடுமுறையை எடுங்கள்

அலுவலக விடுமுறையை எடுங்கள்

நீங்கள் விடுமுறை கேட்டால் உங்கள் முதலாளி என்ன நினைப்பார் என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் பணியிடத்தில் கடினமாக உழைத்த பிறகு அந்த நேரத்திற்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் மன, உடல் மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மைக்காக, நீண்ட காலமாக நீங்கள் விரும்பிய பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் தனியாக இருக்க பயப்படுவது

நீங்கள் தனியாக இருக்க பயப்படுவது

இது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறாக இருக்கலாம். ஏனெனில் இது உங்கள் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் பறித்துவிடும். நீங்கள் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக ஒருவருடன் தங்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. அப்படி இருந்தால், நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். மேலும், நீங்கள் இறுதியாக தனியாக வாழ கற்றுக் கொள்ளும்போது அதனுடன் வரும் மகிழ்ச்சியை நீங்கள் ஒருபோதும் உணர மாட்டீர்கள். அச்சமில்லாமல், தைரியமாக தனியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களை தைரியமான நபராக மாற்ற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid These Mistakes In Your 20s at all costs in tamil

Here we are talking about the Avoid These Mistakes In Your 20s at all costs in tamil.
Story first published: Thursday, September 22, 2022, 19:16 [IST]
Desktop Bottom Promotion