Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி? படிச்சு தெரிஞ்சிக்கங்க...
மிக சுவாரஸ்யமான விஷயமான ஒன்றாக, சிறந்த முத்தம் கொடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
முத்தம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆசைப்படும் ஒரு விஷயம் தான். அதிலும் நம் அன்பானவருக்கு கொடுக்கின்ற முத்தங்கள் மிகவும் அழகானது. உங்கள் காதலர் எதிர் வீட்டு ஜன்னலில் காத்து இருந்தால் என்ன செய்வீர்கள்

ஒருவருக்கொருவர் காற்றிலே முத்தங்களை பறக்க விட ஆரம்பித்து விடுவீர்கள் அல்லவா? இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் முத்தம் கொடுப்பது கூட ஒரு கலை என்கிறார்கள் காதலிப்பவர்கள்.

நச்சுனு முத்தம்
காதலி கொடுக்கும் ஒற்றை ப்ளேயிங் கிஸ்க்காக கால் கடக்க ஒவ்வொரு காதலனும் காத்திருக்கான். அந்த ஒற்றை முத்தத்தில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் எத்தனை எத்தனை காதல்கள் காற்றில் சுமந்த வண்ணம் செல்கின்றன. அப்படிப்பட்ட முத்தத்தை அழகாக நேர்த்தியாக கொடுக்க வேண்டாமா? போற போக்கி ல் தூக்கி போடுவதை போன்று செய்தால் உங்கள் காதலர் என்ன தான் உணர்வார். அதற்காகத்தான் சில டிப்ஸ்கள் இங்கே. அழகாக உங்கள் ப்ளேயிங் கிஸ்ஸை காற்றில் பறக்க விடுவது எப்படி? வாங்க பார்க்கலாம்.

கண்களால் கைது செய்
காதலர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி என்பது மிகவும் முக்கியம். அதில் கண்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே விழிகளால் கைது செய்தல் வேண்டும். எனவே முத்தம் கொடுப்பதற்கு முன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிசம் கொள்ள வேண்டும்.

கைகளால் முத்தத்தை தாங்குதல்
இப்பொழுது உங்கள் அழகான உள்ளங்கையை உதட்டின் அருகே கொண்டு சென்று குவிந்த உதடுகளை தாங்குங்கள். ரெம்ப தூரம் உள்ளங்கையை வைத்தால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் காதலருக்கு தெரியாது. எனவே உள்ளங்கையை உதட்டின் அருகே கொண்டு சென்று கிஸ் வையுங்கள்

பறக்க விடுங்கள்
ப்ளேயிங் கிஸ்ஸில் இது தான் முக்கியமான பகுதி. அப்படியே உள்ளங்கையை உதட்டின் அருகில் இருந்து எடுத்து முத்தங்களை ஊதி உங்கள் காதலர் காத்திருக்கும் திசைக்கு பறக்க விடுங்கள். உள்ளங்கையை மெதுவாக எடுத்து தாடையில் வைத்து பறக்க விடுங்கள்.

புன்னகை
புன்னகை ஒன்றே போதும் உங்கள் காதலை அவருக்கு வெளிப்படுத்த. இதில் தான ஏகப்பட்ட ஏக்கங்கள், காதல் வலி, காதலரை காணாத வேதனைகள் என்று எல்லாவற்றையும் ஓரே நாளில் சொல்லி விட முடியும். எனவே உங்கள் காதலரை நோக்கி புன்னகைக்க மறக்காதீர்கள்.

மனதில் வைக்க வேண்டியவை
மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸ்கள் உங்கள் க்யூட் கிஸ்ஸூக்கு உதவும். இருப்பினும் உங்களுக்கு ஏதுவாக இதை மாற்றி கொண்டு செயல்படலாம்.
முத்தம் கொடுக்கும் போது உங்கள் சுற்றுப்புறத்திலும் கவனம் இருக்கலாம். இது வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும் போது இந்த ப்ளேயிங் கிஸ்ஸை கொடுங்கள்.
அவசர அவசரமாக கிஸ் கொடுத்து விட்டு பேந்த பேந்த விழிக்காதீர்கள். எதிலும் நிதானம் அவசியம்.
ப்ளேயிங் கிஸ் கொடுக்கும் போது பார்த்து கொடுப்பது முக்கியம். வேற யாரையாவது பார்த்துக் கொண்டு கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் தங்களுக்கு தான் கொடுக்கிறீர்கள் என்று நினைக்க நேரிடலாம். பிறகு எல்லாம் வேடிக்கை ஆகி விடும். எனவே உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் இடையே ஐ காண்டேக் முக்கியம்.
இந்த ப்ளேயிங் கிஸ்ஸைத்தான் நம்ம செலிபிரிட்டிகளும் விரும்புகின்றனர் என்று சினிமா தகவல் கூறுகிறது.
என்னங்க ஆயிரம் முத்தங்களுடன் ரெடி ஆகிட்டீங்களா.



Click it and Unblock the Notifications