Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
காதலனுக்கு உங்கள் மீது நாட்டம் அதிகமாக வேண்டுமா? இத முயற்சி செய்யுங்க...
நீங்கள் யாருக்கோ அதிகமாக தேவைப்படுகிறீர்கள் என்ற எண்ணத்தால் உங்கள் நம்பிக்கை அதிகரிப்பது எப்போது? ஆம் உங்கள் காதலன் உங்களை அழைக்கும் போது தான். அந்த தருணத்தில் உங்களுக்குள் ஒரு விசேஷ உணர்வு ஏற்படும். மனது பிடித்தவரிடம் இருந்து அழைப்பு வந்தால் உங்களை நீங்களே விரும்புவீர்கள். வெறுமனே "ஹாய்" என்று சொல்லுவதற்காக அழைத்தாலும் சரி அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கீர்கள் என்பதை கேட்பதற்காக அழைத்தாலும் சரி, பல வார்த்தைகளை விட முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பாக உங்களுக்கு அது அமையும். அவரின் அழைப்புக்காக பல நேரம் காத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். சில நேரம் அழைப்பு வரவில்லை என்று வேதனையும் அடைவீர்கள்.
எந்த ஒரு புது உறவு ஆரம்பிக்கும் போதும், உங்களிடம் இருந்தும் அவரிடம் இருந்து உங்களுக்கும் அழைப்புகள் வந்து கொண்டிருக்கும். இந்த உறவு வளர வளர, ஆரம்பத்தில் இருந்த குதூகலம் குறையத் தொடங்கும். அதனால் பல முறை அழைப்பதும் குறைந்து விடும். இருப்பினும் அடிக்கடி அழைப்புகள் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் தேவை எப்போதும் அவருக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பல நேரம் அவ்வளவு சுலபமாக நீங்கள் விளையாடி விட முடியாது. அதனால் உங்களை பற்றிய பல விஷயங்களை உடனே அவரிடம் கூறி விடாதீர்கள். இதுவே அவருக்கு உங்கள் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்யும்.
உங்கள் காதலன், எந்த பெண்ணை விடவும் உங்களை அதிகமாக விரும்பச் செய்ய வேண்டுமானால், உங்கள் குணத்தில் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவர் உங்களிடம் எதை முதன் முதலில் விரும்பினாரோ அது தான் உங்கள் உண்மையான குனாதிசயமாக இருக்க வேண்டும். அழகான வெற்று சிப்பியை யாரும் விரும்புவதில்லை. நீங்கள் எப்போதுமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். அதனால் அவருக்கு உங்கள் மீதான நாட்டம் குறையாமல் இருக்கும். அவரை உங்களை அழைக்க வைக்க இதோ சில வழிகள்:

விளையாட்டு லேசுபட்டதாக இருக்கக்கூடாது
ஆம், அவரை உங்கள் மீது நாட்டம் கொள்ள வைக்க அவரிடம் நீங்கள் விளையாடும் விளையாட்டு லேசுபட்டதாக இருக்கக்கூடாது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருப்பினும் உங்கள் விளையாட்டு மிகவும் இறுக்கமாக அமைந்து விடக்கூடாது. உங்களிடம் இருக்கும் ஆச்சரியங்களை தெரிந்து கொள்ளவும் உங்கள் மீது ஆவலை அதிகரிக்கவும் அவரிடம் அப்படி நடந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லை.

பொறுமை
நீங்கள் அவரிடம் விளையாடுவதை போலவே அவரும் உங்களிடம் விளையாடலாம் அல்லவா? உங்களின் டேட்டிங் அல்லது சென்ற அழைப்புக்கு பிறகு நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக இருங்கள். எப்போதும் போல சுறுசுறுப்புடன் இருந்து அவரிடம் இருந்து அழைப்பை எதிர்பாருங்கள் அல்லது பொதுவான ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உங்கள் உரையாடலை தொடங்குங்கள்.

உடல் ரீதியாக தள்ளியே இருங்கள்
உங்கள் காதலனிடம் முடிந்த வரை உடல் ரீதியாக தள்ளியே இருங்கள். இந்த தூரம் அதிகமாக இருந்தால் தான் உங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கும். பல அன்யோநியமான உறவுகள் நல்லபடியாக தொடர உடல் ரீதியாக நெருக்கம் இருக்க தான் செய்யும். இருப்பினும் அவரை உங்களை அழைக்க வைக்க இந்த நெருக்கத்தில் சற்று இடைவேளை விட தான் வேண்டும். தேவையான நேரத்தில் உடல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கண்ணோட்டம்
உங்கள் மீது அவருக்கு இருக்கும் கண்ணோட்டம் அவரை தொடர்ந்து உங்களை அழைக்கும் படி இருக்க வேண்டும். உங்கள் மீதான ஆர்வமும் குறைய கூடாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதற்காகவே அவர் உங்கள் மீது காதல் கொண்டவராக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நீங்கள் அடிக்கடி உங்கள் குணத்தை மாற்றி உங்கள் மீதான அவரின் ஆர்வத்தை குறைக்க கூடாது.

உணர்வு ரீதியான துணை
ஒவ்வொரு ஆணுக்கும் தான் சோர்ந்து போயுள்ள தருணத்தில் தனக்கு தோல் கொடுக்க ஒருவர் தேவைப்படுவார். அந்த நபர் நீங்களாக இருக்க உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ள நேரத்தில் நீங்களாகவே அவரிடம் சென்று ஆறுதல் அளிக்க வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கை அதனால் அதிகரிக்கும். இதனால் உங்கள் மீதான ஆர்வம் எப்போதும் அவருக்கு குறையாமல் இருக்கும். அதனால் உங்களை அடிக்கடி அழைக்காமல் அவர் இருப்பதில்லை.

அலுப்புத் தட்ட வைக்காதீர்கள்
அவரின் விருப்பு வெறுப்பு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஒன்றும் தவறில்லை. அவர் அழைக்கும் போது அதை பற்றி பேசுவதிலும் தவறில்லை. சொல்லப்போனால் அவருக்கு உங்கள் மீதான மதிப்பு இதனால் அதிகரிக்கவே செய்யும். அதனால் தன் நண்பர்களை அழைப்பதை விட உங்களையே அதிகமாக அழைப்பார். உங்கள் மீதான அன்யோநியமும் அதிகரிக்கும்.

அர்த்தம்
அவரிடமான உங்கள் உறவு சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டும். அது சரியாக செல்ல சரோயான அர்த்தத்தை கொண்டிருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் உறவை அர்த்தம் உள்ளதாக மாற்றுங்கள். அதனால் உங்கள் மீது ஆர்வம் குறையாமல் இருக்கும் அல்லவா?



Click it and Unblock the Notifications











