Latest Updates
-
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்..
உங்களுடைய முன்னாள் காதலர் இன்னும் உங்களை விரும்புகிறாரா என்பதை அறிய வேண்டுமா?
நீங்கள் உங்கள் ஆண் நண்பரிடமிருந்து விலகிவிட்ட போதும், அவர் உங்கள் மீது இன்னமும் மையல் கொண்டிருப்பதாக நினைத்தால், அதை உங்களுக்கு உணர்த்த பல்வேறு அறிகுறிகள் உள்ளன. ஆனால், இதைப்பற்றி நாம் மேற்கொண்டு பேசும் முன்னர், நீங்கள் பிரிந்ததற்கான காரணத்தை முதலில் அலசுவோம். பிரிவிற்கான காரணங்கள் உங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்திருந்தால் மட்டுமே அது சட்டப்படியான பிரிவாக இருக்கும். இந்த காரணங்கள் தெளிவற்றதாக இருந்தால், உங்களுடைய முன்னாள் துணைவரைப் பற்றி நினைக்கவும் மற்றும் பேசவும் தொடங்கலாம்.
சில நேரங்களில், இந்த பிரிவு சிக்கலானதாக இருக்கும் நேரங்களில், உங்கள் முன்னாள் துணைவர் முன்பைப் போலவே உங்களை இன்னும் விரும்பிக் கொண்டிருக்கலாம். உங்கள் முன்னாள் துணைவர் இன்னமும் உங்களை விரும்புகிறாரா என்பதை சில அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

1. தொடர்ச்சியாக தொடர்பு கொள்ளுதல்: பிரிவிற்கான முதல் முடிச்சு அனைத்து விதமான தொடர்பு கொள்ளும் வழிமுறைகளையும் நிறுத்தும் போது விழுகிறது. ஆனால், உங்கள் முன்னாள் துணைவர் இந்த அடிப்படை விதியை கடைபிடிக்காமல், தொடர்ந்து உங்களுக்கு போன் மூலம் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தால், நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டும். அதே சமயம், அவர் உங்களுக்கு மெஸேஜ் அனுப்புவதால் மட்டுமே;, அவர் உங்களுடன் மீண்டும் இணைய விரும்புகிறார் என்று அர்த்தமில்லை, ஆனால் இது அந்த திசையை நோக்கிய முதல் அறிகுறியாகும். இந்த இணையும் முயற்சிகளை நீங்கள் விரும்பவில்லையெனில், அவரை நீங்கள் தவிர்க்க முயற்சிக்கலாம்.
2. உங்கள் வாழ்க்கையின் மீது ஆர்வம் காட்டுதல்: நீங்கள் பிரிந்த பின்னரும் உங்களுடைய வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அவர் அறிந்து கொள்ள விரும்பினால், அவர் உங்களை மீண்டு விரும்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர் உங்களை பார்க்க முயற்சிக்கலாம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடம் பேசவும், உங்களைப் பற்றி கேட்கவும் முயற்சிப்பார். சில நேரங்களில், அது தற்செயலானதாகவும் இருக்கலாம், ஆனால் பல நேரங்களில் இது போல நிகழ்ந்தால், அது உங்களுடைய உணர்வுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிகுறியாகவே இருக்கும். அவர் உங்களை நெருங்கி வரத் துடிக்கிறார்!
3. அக்கறைப்படுதல்: மிகவும் மோசமான பிரிவிற்குப் பின்னரும், உங்களுடைய துணைவர் உங்கள் மீது முன்பிருந்ததைப் போலவே அக்கறையுடன் இருந்தாலும், உங்களை சந்தோஷப்படுத்தும் வகையில் எல்லாவற்றையும் செய்தாலும், அவர் உங்கள் மீது இன்னமும் குறையற்ற அன்பை கொண்டுள்ளார். அவர் காட்டும் அதிகபட்ச அக்கறை மூலம், உங்களை சம்மதிக்கச் செய்து மீண்டும் இணைய வைக்க அவர் நினைக்கிறார். இதிலிருந்து நீங்கள் விலகி நிற்க விரும்பினால், எல்லா விதமான தொடர்புகளையும் நிறுத்தி வைப்பது நலம். ஆதன் மூலம், உங்களுடைய முன்னாள் துணைவர் உங்களைப் பற்றி நினைப்பதையும் மற்றும் அக்கறை கொள்வதையும் நிறுத்த முடியும்.
4. குடும்ப உறவுகள்: பிரிவிற்குப் பின்னரும் கூட உங்கள் முன்னாள் துணைவர், உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதும் சற்றே வித்தியாசமாகவும் மற்றும் அருவருப்பாகவும் இருப்பதாக தோன்றுகிறதல்லவா? குடும்பங்கள் தலையிடும் போது சூழல் சற்றே சிக்கலாகவும் மற்றும் கடினமாகவும மாறி விடுகிறது. உங்களுடைய முன்னாள் கணவர் உங்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதும், அவர்கள் அவ்வப்போது சந்திப்பதும் மற்றும் அவர்களிடம் முன்பு இருந்தது போலவே மிகவும் நட்புடன் இருப்பதும், அவர் உங்களை இன்னமும் விரும்புகிறார் என்பதையே குறிக்கும்.
5. தொடுதல்: பிரிவிற்குப் பின்னரும் உங்களுடைய முன்னாள் துணைவர், உங்களுடன் இணக்கமாகவும் மற்றும் உடல் ரீதியாக உங்களை தொடுவதை விரும்பினாலும், அவர் உங்களை இன்னமும் விரும்புகிறார் என்று அர்த்தம். உங்கள் முன்னாலள் துணைவர் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளை தூண்டுவதற்கான விஷயமாகவே, தொடுதல் இருக்கும். உங்களிருவருக்கும் இடையிலான விஷயங்களை சரி செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாகவே தொடுதல் இருக்கும். எனவே, உங்களுடைய முன்னாள் கணவர் முன்பைப் போலவே உங்களை அணைத்தாலோ அல்லது உங்கள் கைகளை கோர்த்துக் கொண்டிருப்பதை விரும்பினாலோ அவர் உங்களை இன்னமும் விரும்புகிறார் என்றே அர்த்தமாகும்.
இந்த எளிமையான அறிகுறிகள் உங்களுடைய முன்னாள் கணவர் நெருங்கி வருகிறாரா என்பதை அறிய உதவுகின்றன. உங்கள் இருவருக்குமே இது கடினமான விஷயமாகவே இருக்கும், எனவே சரியான முடிவுகளை எடுங்கள் மற்றும் உங்கள் முன்னாள் கணவரின் இம்மாதிரியான குணங்களை கவனித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications