Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உறவுகளில் உள்ள சில குறைபாடுகள்!!!
எல்லா உறவுகளிலும் பொதுவாகவே ஒரு சில குறைபாடுகள் இருக்கும். எவ்வளவு நெருக்கமாகவும் உறுதியாகவும் அந்த உறவு இருந்தாலும் குறைபாடுகளை தவிர்க்க இயலாது. தவறுகளை ஏற்றுக் கொள்வதிலும், அவற்றை தவிர்ப்பதிலும் எந்தவித சங்கடங்களும் இல்லை. இது போல, குறைபாடுகளை முன்வைத்து பேசி தீர்த்துக்கொள்வது எதிர்காலத்தில் நல்ல உறவை ஏற்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அது உங்களிடையேயான புரிந்துணர்வை அதிகப்படுத்தி உறவை மேலும் உறுதி பெறச் செய்யும்.
உறவில் யார் முதலில் பேசுவது என்பது அவசியம் அல்ல. மாறாக நல்ல முறையில் பேசி குறைகளை தீர்த்துக்கொள்வது அவசியம். ஆண் என்ற முறையில் நீங்கள் முன்னின்று எவ்வாறு இச்சலனத்தை தீர்க்கலாம் என்ற எண்ணத்தை முன் வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது உங்கள் மனைவியின் நம்பிக்கையை சரியான இலக்கில் கொண்டு சென்று, தான் நல்ல கைகளில் பத்திரமாக இருப்பதை அவருக்கு உணர்த்தும். குறைகளைப் பற்றி பேசி தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
உறவில் பொதுவாக உள்ள விரிசல்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளின் மூலமாகவோ மற்றும் வேறு வேறு எண்ணங்களின் பிரதிபலிப்பாகவோ தான் ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் இத்தகைய குறைகளை நாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் காலம் செல்லச் செல்ல உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றன. ஆகையால் பொறுப்பான தம்பதிகளாக இருக்கும் நீங்கள் தான், குறைகளை அவ்வப்போதே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உணர்வுப்பூர்வமான உறவு மேம்படும். முதலில் பெண்களின் அழகை மட்டும் கருத்தில் கெண்டு மயங்கும் ஆண்கள், பிறகு அவள் தான் சேர்ந்து வாழ்வதற்கேற்றவள் இல்லை என்பதை உணருகின்றனர். பிரச்சனைகள் தொடங்குகின்றன.
இங்கே உறவுகளில் வரும் குறைபாடுகள் சிலவற்றைப் பற்றி கொடுத்துள்ளோம்

வெளித்தோற்றம்
சில சமயங்களில் வெளித்தோற்றத்தினால் வரும் இனக்கவர்ச்சியை வைத்து காதலையும், உறவையும் துவங்கியிருப்பீர்கள். உங்களுக்கு துணைவியாருடனான உறவு மிகச்சிறப்பாக அமைய, அந்த உறவில் வரும் குறைகளை ஏற்றுக் கொள்ளவும் மற்றும் அந்த குறைகளை அவருடன் சேர்ந்து எப்படி களைவது என்பது பற்றியும் யோசித்து செயல்படுவதுதான் சரியான செயலாக இருக்கும்.

பாலின அடிப்படை
குறைபாடுகள் சில சமயம் அவர்களின் உறவில் அல்லாமல் அவர்களின் பாலினத்தை குறித்ததாக இருக்கும். உதாரணமாக உங்கள் மனைவி நீண்ட நேரம் பேசுவதிலும், ஏதாவது விஷேசத்திற்கு செல்லும் போது தயாராக நெடுநேரம் எடுத்துக் கொள்ளவும் செய்வார். இது பெண்களுக்கே உரிய இயல்பான விஷயம் தான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை துரோகம்
எந்த உறவாயினும் நம்பிக்கை துரோகம் ஒரு பெரிய குறையாகவே கருதப்படுகிறது. தவறான ஆசைகளுக்காகவும் மற்றும் திரில் அனுபவங்களுக்காகவும் நம்பிக்கைக்கு உலை வைக்கும் செயல்களை செய்பவர்கள் அவற்றின் மேல் உடனடியாக கவனம் வேண்டும். நம்பிக்கை துரோகம் என்பது உளவியல் ரீதியாகவும் கூட அணுகப்பட்டு குணப்படுத்தக் கூடிய பிரச்னை தான். நம்பிக்கை துரோகத்தை விட பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. ஆகையால் இத்தகைய தவறுகளை ஏற்றுக் கொள்வதும், பிரச்னையிலிருந்து விடுபட முயற்சி செய்வதுமே பாதி பிரச்னையை குறைத்து விடும்.

சமரசம் செய்து கொள்ளுதல்
உறவுகளில் மட்டுமல்லாமல், அதில் ஈடுபடும் மனிதர்களால் கூட குறைபாடுகள் ஏற்படலாம். ஒரு வேளை குறைபாடுகள் உங்களிடமே கூட இருந்து, உங்கள் துணைவர் அதனை சகித்துக் கொண்டு அந்த உறவை மேம்படுத்த முயலலாம். அதே போன்று உங்கள் துணைவரின் செயல்களிலும் குறைபாடுகளை இருப்பதை உணர்ந்து, நீங்கள் அதை பொறுத்துக் கொண்டும் வாழ்ந்திருக்கலாம். இவ்வாறு ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழும் சூழ்நிலையில் தான் உறவு சீரான நிலையில் முன்னேறுகிறது.

விட்டுக் கொடுத்தல்
நல்ல உறவிற்கான அடிப்படை தேவை விட்டுக்கொடுப்பது தான். ஒரு நல்ல துணைவராக சில சமயங்களில் நீங்கள் ஏதேனும் ஒன்றை உங்கள் மனைவிக்காகவோ அல்லது கணவனுக்காகவோ மற்றும் உறவிற்காகவோ விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டி வரும். இச்செயல்கள் அவர்களை மகிழ்விக்கும் மற்றும் அதனால் உறவும் மேம்படும். உதாரணமாக உங்களுக்கு பிடித்த கால் பந்து போட்டியை விட்டு விட்டு, உங்கள் மனைவியை அழைத்து கொண்டு வெளி சென்று மகிழ்ச்சியாக இருந்து வருவதை சொல்லலாம்.

தொடர்பு
வெற்றிகரமான உறவிற்கு எப்போதும் இருவருக்குள்ளும் சொல்லாலும் செயலாலும் நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நல்ல பேச்சுவார்த்தை எந்த விதமான குற்றங்களையும் பெருமளவில் எளிதில் சரி செய்யவும், தவிர்க்கவும் செய்யும். நல்ல உறவிற்கான அடையாளம் எவ்வாறு இருவரும் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தவறான தொடர்புகள் தான் உறவுகளில் பெரும் குறைபாட்டை விளைவிக்கும் மற்றும் மேற்கொண்டு எந்த பேச்சு வார்த்தையும் செய்ய முடியாமல் ஆகிவிடும்.



Click it and Unblock the Notifications