காதலனை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கான ட்ரிக்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பார்த்தால், அது அவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடப்பது தான். இவ்வாறு ஆண்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடந்தால், அவர்கள் எப்போதும் உங்களுக்குத் தான். மேலும் உங்கள் காதலரை புரிந்து கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. அவ்வாறு சரியாக புரிந்து நடந்து கொண்டால், யாராலும் உங்கள் இருவரையும் பிரிக்க முடியாது. ஆகவே ஆண்களின் மனதைப் புரிந்து கொண்டு, அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால், நிச்சயம் வாழ்வில் வெற்றிப் பெறுவது உறுதி.

அதேப் போல் அடிக்கடி காதலனிடம், தெரியாததைப் பற்றி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது, அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பெற உதவியாக இருக்கும். அதேப் போல் நிறைய விஷயங்களை, அவர்களை சரியாக புரிந்து கொண்டு நடந்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அப்படி காதலனை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதவியைக் கேட்பது

உதவியைக் கேட்பது

என்ன தான் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தாலும், அதனை அவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது. குறிப்பாக அவர்களுக்கு சரிசமமாக இருப்பது போல் நடந்தால், அது இருவருக்குள்ளும் பெரிய பிரிவை ஏற்படுத்திவிடும். எனவே அவர்களுக்கு அடங்கியிருப்பது போல் நடக்க வேண்டும். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் அவரது கருத்துக்களைப் பெற வேண்டும்.

பெருமையாக பேசவும்

பெருமையாக பேசவும்

நண்பர்களுடன் வெளியே செல்லும் போது, அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாக பேசினால், அவர்களுக்கு உங்கள் மீது அன்பு அதிகரிக்கும்.

சொல்வதை காது கொடுத்து கேட்கவும்

சொல்வதை காது கொடுத்து கேட்கவும்

ஆண்கள் எப்போதும் அதிகம் பேசமாட்டார்கள். ஒருவேளை அவ்வாறு பேசுகிறார்கள் என்றால், அப்போது அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதைவிட்டு கத்தினால், பின் சண்டையைத் தான் சந்திக்க நேரிடும். மேலும் வெறுப்புக்களையும் சம்பாதிக்கக்கூடும்.

விருப்பதை நிறைவேற்றவும்

விருப்பதை நிறைவேற்றவும்

காதலனுடன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்களுடன் சேர்ந்து, வெளியே செல்ல வேண்டும்.

மசாஜ் செய்துவிடவும்

மசாஜ் செய்துவிடவும்

வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களது களைப்பைப் போக்கும் வகையில், அவர்களுக்கு மெதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால், அவர்களுக்கு உங்கள் நினைத்து வாழ்நாள் முழுவதும் இருப்பது உறுதி.

அவர்களை சார்ந்து இருப்பது போல் நடக்கவும்

அவர்களை சார்ந்து இருப்பது போல் நடக்கவும்

ஒருவேளை ஏதேனும் தெரியவில்லையெனில், அப்போது அதனை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் மனதில் அவர்களை சார்ந்து இருப்பது போல ஒருவித சந்தோஷம் இருக்கும்.

அவர்களுக்கு பிடித்ததை சாப்பிடவும்

அவர்களுக்கு பிடித்ததை சாப்பிடவும்

வெளியே ஹேட்டல்களுக்கு செல்லும் போது, அவர்களை ஆர்டர் செய்ய சொல்லி, உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், அவர்களுக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும். இதன் மூலம் நீங்கள் அவர்களை நன்கு புரிந்து அனுசரித்து நடக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, உங்கள் மீது அன்பு அதிகரிக்கும்.

அவர்களுக்காக சமைக்கவும்

அவர்களுக்காக சமைக்கவும்

ஆண்களுக்கு எப்போதுமே வீட்டு சமையல் தான் ரொம்ப பிடிக்கும். என்ன தான் ஹேட்டல் சுவையாக உள்ளது என்று வாயால் சொன்னாலும், உண்மையில் அவர்களுக்கு பிடித்ததை வீட்டில் செய்து கொடுத்தால், இன்னும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.

படுக்கை

படுக்கை

ஆண்களுக்கு, படுக்கையில் எப்போதுமே நான் தான் சிறந்தவன் என்ற எண்ணம் இருக்கும். ஆகவே அவர்களை எப்போதும் படுக்கையில் ஜெயிக்க முயலக்கூடாது.

பாராட்டவும்

பாராட்டவும்

ஆண்களுக்கும் பாராட்டு என்றால் பிடிக்கும். ஆகவே அவர்கள் ஏதேனும் வெற்றிகரமாக செய்தால், அவர்களை பாராட்ட வேண்டும். இதனால் அவர்களுக்கு மனதில் ஒருவித உற்சாகம் எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tricks To Make Him Feel Like A Man

If there is one thing that men love the most, then it will have to be pampering of their ego. Make a man feel like a man and he will be yours forever. Here are some tricks to help you make him feel like a man so that he stays with you forever.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter