உங்க காதலனை சூப்பர் மேன் போல் மாற்ற வேண்டுமா?

By Maha

பெண்கள் தங்கள் காதலனைப் பற்றி அடிக்கடி குறைக்கூறுவார்கள். ஏனெனில் ஆண்கள் எப்போதும் சரியான நேரத்தை பின்பற்றமாட்டார்கள் மற்றும் பொறுப்புடன் இருக்கமாட்டார்கள் என்பதாலேயே தான். காதல் என்று வந்துவிட்டால், அப்போது வாழ்க்கைமுறையில் சிறு மாற்றங்களும் நிச்சயம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், இருவருக்கிடையே அதுவே சண்டையையும், விரிசல்களையும் ஏற்படுத்திவிடும். மேலும் ஆண்களை விட பெண்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதிலும் பெண்கள் இத்தகைய மாற்றங்களை சந்தோஷமாகவும், விருப்பத்துடனும் ஏற்றுக்கொண்டு நடப்பார்கள். ஆண்களுள் சிலர் இத்தகைய மாற்றங்களை விரும்பி ஏற்பர். ஆனால் பலர் தங்களுக்கு பிடித்தவாறு மட்டுமே இருக்க நினைப்பார்கள். இத்தகைய ஆண்களை மாற்றுவது என்பது கடினமானது. இருப்பினும் எத்தகைய கல் மனம் உள்ளவர்களும் கரைந்துவிடும் இந்த உலகில், இந்த சிறு குணத்தை மாற்ற முடியாதா என்ன? நிச்சயம் முடியும். ஆனால் அதற்கு சற்று வித்தயாசமாக செயல்பட வேண்டும்.

பொதுவாக குறைக்கூறும் பெண்களை ஆண்கள் வெறுப்பார்கள். எனவே அவ்வாறு குறைக்கூறுவதை விட்டு, அவர்கள் வழியிலேயே, அவர்களுக்குத் தெரியாமல் மாற்றலாம். அது எப்படியென்று சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் காதலனும் சூப்பர் மேன் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

அனைத்து ஆண்களுக்கும் நன்கு அன்புடன் கவனித்துக் கொண்டால் மிகவும் பிடிக்கும். அந்த நேரம் அவர்களிடம் எதை சொன்னாலும், அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் அந்த கவனமானது குறைந்தால், அவர்கள் உங்களைத் தேடி வந்து, "ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன செய்ய வேண்டும்?" என்று தேடி வந்து, உங்கள் கூற்றை காது கொடுத்து கேட்பார்கள்.

வேலையில் கவனத்தை செலுத்தவும்

வேலையில் கவனத்தை செலுத்தவும்

காதல் செய்த பின்னர், அவர்களையே நினைத்துக் கொண்டு இருப்பதை விட்டு, எதிர்கால வாழ்க்கையை நினைத்து, உங்களுடைய வேலையில் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். இதனால் அவர்களும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உங்களுடன் அனுசரித்து புரிந்து நடந்து கொள்வார்கள்.

அவர்கள் வழியிலேயே நடப்பது

அவர்கள் வழியிலேயே நடப்பது

ஒரு வார இறுதியில் உங்கள் துணை, உங்களை கண்டு கொள்ளாமல் நண்பர்களுடன் வெளியே சென்றால், மறுவாரம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும். இதனால் அவர் கடந்த வாரம் விட்டு செல்லும் போது, நீங்கள் எப்படி வருத்தம் அடைந்தீர்களோ, அதே வருத்தத்தை உணர்ந்து, இனிமேல் சரியாக நடந்து தானாக மாறிக் கொள்வார்கள்.

உங்கள் கருத்தை புரிய வைக்கவும்

உங்கள் கருத்தை புரிய வைக்கவும்

உங்கள் துணை அதிகமாக செலவழிப்பவர்களாக இருந்தால், அப்போது உடனே அவரை குறைக்கூறாமல் அமைதியாக இருந்து விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்யும் போது, அவர்களிடம் இருக்கும் பணம் முற்றிலும் காலியாகிவிடும். பின் அவர்கள் கடன் வாங்கி, மீதமுள்ள நாட்களை கழிப்பார்கள். இந்த நேரம் நீங்கள் சாதாரணமாக சொன்னாலே, அவர்கள் புரிந்து கொண்டு, அவர்களாக மாறிவிடுவார்கள்.

சரியாக புரிய வைப்பது

சரியாக புரிய வைப்பது

உங்கள் துணை மாற வேண்டும் என்று நினைத்தால், அப்போது அவர்களுக்கு சரியாக புரியும் வகையில் தெளிவாக சொல்லி புரிய வைக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் வேலை செய்யும் நேரம், அனைத்து வேலைகளையும் தனியே செய்ய முடியாது. அது மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே உங்கள் உதவி எனக்கு வேண்டும் என்று சொல்லி புரிய வைத்தால், நிச்சயம் புரிந்து செயல்படுவார்கள்.

அவருக்கு நீங்கள் முக்கியம் என்பதை உணர்த்துதல்

அவருக்கு நீங்கள் முக்கியம் என்பதை உணர்த்துதல்

எப்போது துணை மிகவும் வருத்தத்துடனும், ஆதரவின்றி இருக்கும் போது, நீங்கள் அவருக்காக இருப்பதை உணர்த்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் உங்களுக்காக எதையும் செய்யும் மனநிலை ஏற்படும். இந்த மாதிரியான சரியான ஆறுதல், அவர்களது மனதில் நீங்கள் ஒரு மதிப்பை பெறுவதோடு, அவர்களது மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.

ஒப்பிட்டு காட்டுதல்

ஒப்பிட்டு காட்டுதல்

வெளியே செல்லும் போது, மற்ற பெண்கள் எப்படி அவர்களது துணையைக் குறைக்கூறுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். இதனால் உங்கள் துணை நீங்கள் அவ்வாறு சொல்லாமல் இருப்பதை நினைத்து, இனிமேல் சரியாக நடக்க ஆரம்பிப்பார்கள்.

அன்பை புரிய வைத்தல்

அன்பை புரிய வைத்தல்

பொதுவாக மனிதர்கள் எப்போது ஒருவரது அன்பின் மதிப்பை புரிகிறார்களோ, அப்போது தான், அவர்கள் சரியான மாற்றம் அடைவார்கள். எனவே அவர்களிடம் உங்கள் மனதில் இருக்கும் அன்பை சரியாக வெளிப்படுத்தி, அவர்களது வாழ்வில் உங்களது மதிப்பை அதிகரித்தால், நிச்சயம் அவர்கள் மாற்றம் அடைவார்கள்.

துணையின் நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம்

துணையின் நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம்

எப்போதும் துணையின் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நன்றாக நடந்து கொண்டால், அவர்களது ஆதரவின் மூலம் எளிதில் மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion