Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
'கிஸ் டே'-க்கு முத்தம் பெற சில ரொமான்டிக் டிப்ஸ்...
இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி முத்தம் பெறுவது என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்பார்கள். முக்கியமாக காதல் செய்பவர்கள், தங்கள் காதலரிடம் எப்படியெல்லாம் முத்தத்தைப் பெறுவது என்று நிச்சயம் யோசிப்பார்கள். அதிலும் இன்று கிஸ் டே என்பதால், கண்டிப்பாக காதலர்கள் முத்தத்தை பலவாறு கொடுப்பார்கள். சில காதலர்களிடம் எத்தனை முத்தத்தை உங்கள் காதலியிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்று கேட்டால், சிலர் 2-3 என்பார்கள், சிலரோ பெற்றுள்ளார்களா என்றே யோசிப்பார்கள். அத்தகையவர்கள், இந்த கிஸ் டே அன்று நிச்சயம் முத்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நண்பர்களே! எத்தனை நாள் தான் நல்லவனா இருக்க போறீங்க? பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். இந்த கிஸ் டே அன்று முத்தத்தைப் பெறவில்லையெனில் அது நன்றாக இருக்காது. சொல்லப்போனால், காதலியிடம் சரியான முத்தத்தை இந்த 'கிஸ் டே' அன்று பெறுவது தான் சிறந்தது. அத்தகைய முத்தத்தை காதலியிடம் எளிதில் பெறுவதற்கு ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
எனவே காதலியிடம் எப்படி முத்தம் பெறுவது என்று யோசித்தால், அதற்கு முதலில் நன்கு ஸ்மார்ட்டாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில பெண்களுக்கு மிகுந்த ஸ்மார்ட்டாக இருந்தால், மிகவும் பிடிக்கும். இதனால் கூட எளிதில் முத்தத்தை சீக்கிரம் பெறலாம். அதுமட்டுமின்றி, காதலியிடம் முத்தத்தை பெறுவதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்ற வேண்டும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!
* காதலர் தினத்தன்று தான் காதலியிடம் காதலை சொல்ல வேண்டுமா என்ன? கிஸ் டே அன்று கூட சொல்லலாமே! அதுவும் அவர் எதிர்பார்க்காத வகையில், காதலியின் முன் முட்டி போட்டு, அவளது கைகளை பிடித்து, விரல்களுக்கு மோதிரம் அணிவித்து, அந்த சந்தோஷமான தருணத்தில் அந்த அழகாக மூன்று வார்த்தைகளைச் சொன்னால், அவள் மிகுந்த சந்தோஷப்பட்டு, தானாகவே வந்து ஒரு நச்சென்று முத்தம் கொடுப்பர்.
* பெண்களுக்கு சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு இந்த நாளன்று அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டை வாங்கி கொடுத்து, அதையே நீங்களும் வாங்கி சாப்பிடுங்கள். முக்கியமாக அவ்வாறு சாப்பிடும் போது, காதலியைப் பார்த்து, "அது என்ன உதட்டிற்கு பக்கத்தில் ஏதோ உள்ளது" என்று சொல்லி, அவர் தேடி துடைக்கும் நேரம், அவர் அருகில் சென்று துடைப்பது போல், அவர் எதிர்பார்க்காதவாறு ஒரு முத்தத்தை கொடுத்துவிடுங்கள். முடிந்தால், உதட்டோடு உதடு வைத்து முத்தத்தை கொடுங்கள். இதனால் காதலி ஆச்சரியம் அடைய நேரிடுமே தவிர, கோபம் வராது.
* நல்ல ரொமான்டிக் முத்தம் வேண்டுமென்றால், அது இரவு நேரத்தில் தான். எனவே அந்த நேரத்தில் முத்தம் வேண்டுமென்றால், இரவில் ரெஸ்ட்டாரண்ட் அல்லது வீட்டிலேயே மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, இரவில் ஒன்றாக ஒருவரை ஒருவர் கண்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். இந்த நேரம் அதிக ரொமான்ஸ் இருப்பதோடு, பாசம் சற்று அதிகமாக இருக்கும். எனவே காதலியின் அருகில் இந்த நிலையில் சென்றால், தானாகவே முத்தமானது கிடைத்துவிடும்.
* "நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல் உள்ளது" என்று சொல்வதனாலும், முத்தமானது கிடைக்கும். எப்படியெனில் பொதுவாக அனைவருக்குமே ஒருவித ஈகோ மனதில் இருக்கும். அத்தகைய ஈகோவானது, யார் ஒருவர் தன்னை மிகவும் புகழ்ந்தோ அல்லது பாராட்டியோ பேசினால், அவர்கள் மீது அன்பை அதிகரிக்கும்.
* நல்ல இருட்டான இடம் முத்தம் கொடுப்பதற்கு ஏற்ற இடம். எனவே அதற்கு சரியான இடம் சினிமா தியேட்டர் தான். எனவே இந்த கிஸ் டே அன்று சினிமாவிற்கு சென்று, நன்கு ரொமான்ஸ் செய்யலாம். சினிமாவிற்று செல்லும் போது அந்த படம் நன்கு ரொமான்ஸ் படமாக இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதனால் படத்தில் ரொமான்ஸ் காட்சி வரும்போது, அந்த காட்சியை காரணமாக கொண்டு, உங்கள் துணைக்கு முத்தத்தைக் கொடுக்கலாம். முக்கியம், இவ்வாறு செய்வது மற்றவர்க்கு தொந்தரவு தருவது போல் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
* துணையுடன் பைக் அல்லது காரில் பயணம் செய்யும் போது கூட கிடைக்கும். அவ்வாறு செல்லும் போது சற்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டே செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிலும் காரில் செல்லும் போது, நன்கு மென்மையான காதல் பாடல்களைப் போட்டு, மெதுவாகப் பேசிக் கொண்டே, செல்லமாக ஒரு முத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதனால் நிச்சயம் துணையும் முத்தத்தைக் கொடுப்பர்.
இவையே கிஸ் டே அன்று காதலியிடம் இருந்து, முத்தத்தைப் பெறுவதற்கான ட்டிக்ஸ். நீங்கள் இந்த கிஸ் டே-க்கு எப்படி முத்தத்தைப் பெறப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications