Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஆபிஸ்ல ரொமான்ஸ் பண்றவங்களா நீங்க?

ஆபிஸ் காதலால் ஏற்படும் நன்மை:
* எப்போதும் ஒன்றாகவே இருக்கலாம். தன் துணையை விட்டு பிரிகிறோம் என்ற கவலை இருக்காது. எப்போதுமே அவர்களுடன் பேசலாம். அதிலும் இந்த காலத்தில் பணத்தேவையின் காரணமாக மனையி கூட வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். அதனால் துணைவருடன் நீண்ட நேரம் இருக்க முடியாத நிலையில் உள்ளோம். ஆனால் ஒரே ஆபிஸில் வேலை செய்வதால், அந்த கவலை இருக்காது. மேலும் ஒரு நல்ல பாதுகாப்பு இருப்பது போலும் இருக்கும். முக்கியமாக ஆபிஸில் காதல் செய்வதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
* வேலை செய்யும் போது உள்ளம் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் மிகவும் சந்தோஷமாக போகும். மேலும் என்னதான் வேலைப்பளு மற்றும் டென்சன் வந்தாலும், துணை பார்த்து சிரித்தால் போதும் அது ஒரு சிறிய விஷயமாக மாறிவிடும்.
* ஆபிஸில் நடக்கும் ரொமான்ஸ் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஏதேனும் பிரச்சனை வரும் போதோ அல்லது ஏதேனும் தெரியவில்லை என்றால் அப்போது துணை வந்து சொல்லிக் கொடுக்கும் போது நடக்கும் ரொமான்ஸிற்கு அளவே இருக்காது. அதுமட்டுமல்லாமல், ஆபிஸில் வேலை செய்பவர்களுடன் ஏதாவது போட்டி என்றால், அப்போது நம் துணை மிகவும் உதவியாக இருப்பர்.
* ஒரே ஆபிஸில் வேலை செய்பவரை காதலித்து திருமணம் செய்தால், இருவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த புரிதலால் எந்த ஒரு சண்டையும் இருவருக்கும் வராது. தற்போது கணவன் மனைவி இருவரும் ஒரே ஆபிஸில் வேலை செய்யவில்லை என்றால், அவர்களுக்கு மற்றவரின் ஆபிஸில் என்ன பிரச்சனை என்று தெரியாமல், தேவையில்லாமல் சண்டை வரும். உதாரணமாக, ஆபிஸில் வேலையின் காரணமாக சிறிது தாமதமாக வீட்டிற்கு வந்தால் போதும், அந்த நேரத்தில் ஒரு நல்ல புரிதல் இல்லாததால் சண்டை வரும்.
ஆபிஸ் காதலால் ஏற்படும் தீமை:
* ரொமான்ஸ் ஆபிஸில் நடந்தால், கூட வேலை செய்பவர்களுக்கு இது ஒரு ஹாட் டாபிக் ஆகிவிடும். பின் காதலிப்பவர்களுடன் பேசவே கஷ்டமாகிவிடும். சில சமயங்களில் டேட்டிங் செல்வதில் கூட பிரச்சனை ஏற்படும்.
* சில சமயங்களில் வேலையின் காரணமாக காதல் செய்யும் துணையை திட்டக்கூட செய்யலாம். உதாரணமாக, உங்கள் துணை செய்த தவறால், நீங்கள் மேலதிகாரியிடம் திட்டு வாங்கினால், அதனால் கோபம் கொண்டு, அந்த தவறைச் சொல்லி அவர்களை திட்ட முடியாமல் போகும்.
* என்ன தான் ஒரு நாள் முழுவதும் காதல் செய்யும் துணையுடன் பேசினாலும், அதைப் பார்த்து யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அதிலும் ஆரம்பத்தில் துணையை ஈர்க்க, நன்கு அழகாக வந்தாலும், சில மாதங்களில் அது போர் அடித்துவிடும்.
* ஏதேனும் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் அவர்களை பிரிய வேண்டும் என்று நினைத்தாலும், ஒரே ஆபிஸில் வேலை செய்வதால் பிரிவது மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இழிவு மற்றும் அவமானம் தான் காதலை முறியடிக்கச் செய்கின்றன. நிறைய ஆபிஸ் காதல் இந்த காரணத்தினால் தான் தோல்வியடைகிறது.



Click it and Unblock the Notifications