For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்...

By Maha
|

ideas to make father's day special
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய், தந்தை என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு என்றால் அம்மாவை விட அப்பா தான் என்று சொல்வார்கள். அதே போல் அப்பாவுக்கும் தன் பெண் பிள்ளையைத்தான் ரொம்ப பிடிக்கும். அது உண்மை தான். அம்மா பாசம் காண்பிக்க என்றால், அப்பா பாதுகாப்புக்கும், அன்புக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படியென்றால், இப்போது தன் பிள்ளைகள் எங்காவது வேலைக்காக வெளியூர் சென்றிருந்தால், அம்மாவை விட அப்பாவிற்குத் தான் ஒரு வித பயமும், பதட்டமும் இருக்கும். அம்மா நினைத்த நேரத்தில் பிள்ளையுடன் பேச முடியும். அப்போது அம்மாவிற்கு தன் பிள்ளையுடன் பேசிய சந்தோஷம் இருக்கும். ஆனால் அப்பா அப்படி நினைத்த நேரத்தில் எல்லாம் பேச முடியாது. அவர்கள் வேலையில் இருக்கும் போது தவிர ஓய்வு நேரத்தில் மட்டுமே பேச முடியும்.

அப்படி அவர்கள் ஓய்வாக இருக்கும் போது, பிள்ளைகள் வேலையில் இருந்தால் அதுவும் அவர்களால் பேச முடியாது. அந்த நிலையில் தான் அவர்கள் தன் பிள்ளையை நினைத்து மிகவும் வருந்தி, அந்த கவலையிலேயே அவர்கள் மெலிந்து விடுகின்றனர். அப்படி அந்த அளவு பாசம் வைத்திருக்கும் அப்பாவிற்கு அப்பாக்கள் தினத்தன்று வித்தியாசமாக, அப்பாவை மகிழ்விக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று படித்து பாருங்களேன்...

அப்பாவை மகிழ்விக்க சில டிப்ஸ்...

அப்பாக்கள் தினத்தன்று...

1. அப்பாவிற்குத் தெரியாமல், அப்பாவின் நண்பர்களையெல்லாம் அழைத்து, மாலையில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து அசத்தலாம். எப்படி இருந்தாலும் எல்லா அப்பாவும் திருமணத்திற்கு முன்பு தன் நண்பர்களுடன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் குடும்பமே கதி என்று இருப்பார்கள். இப்படி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தால், அவரது பழைய வாழ்க்கையை அவருக்கு அப்பாக்கள் தினத்தன்று கொடுத்தது போல் இருக்கும். இது அவருக்கு ஒரு மறக்க முடியாத பரிசாக இருக்கும்.

2. அப்பாவின் ஆபீஸிற்கு சென்று, அவர் வரும் முன் அவர் உட்காரும் இடத்தைச் சுற்றி அலங்கரித்து, அவரை மகிழ்விக்கலாம். இல்லையென்றால் அவருக்கு பிடித்த ஸ்நாக்ஸ், டிரஸ், நீண்ட நாள் வாங்க நினைத்து வாங்காமல் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை தாம் சேமித்து வைத்துள்ள பணத்தால் வாங்கி கொடுத்து அவருக்கு ஒரு பெரிய இன்பத்தை ஏற்படுத்தலாம்.

3. எல்லாருக்கும் தன் இளமை பருவத்தில் ஏதாவதொரு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுபோல் அப்பாக்கள் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொண்டு, அப்பாவை அந்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை விளையாட வைத்து மகிழ்விக்கலாம்.

4. சில அப்பாக்களுக்கு தன் பிள்ளையோடு நேரத்தை செலவழிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து, அந்த தினத்தன்று பீச், பார்க், தியேட்டர், ஏதேனும் ஒரு பெரிய ஷாப்பிங் மஹால் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

மேற்கூறியவாறெல்லாம் செய்து அப்பாக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்து மகிழுங்கள். ஆகவே அப்பாக்கள் தினத்தை ஏதோ ஃபார்மாலிட்டிக்காக கொண்டாடாமல், அர்த்தமுள்ளதாக, அப்பா மறக்காத அளவு கொண்டாடி சந்தோஷப்படுங்கள்.

English summary

ideas to make father's day special

A typical father's day involves you rushing to the nearest card store, buying out a card or a mug, signing it and gifting it to your daddy. In other cases, you might wrap up a conventional gift like a tie or a wallet for your father. While it is true that it is the thought that counts, this father's day we give you a few unconventional things to make his day more special.
Desktop Bottom Promotion