Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.
சிறுவயதில் நமது ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு செயல்பட்ட தந்தை வயதான பின்னர் அவர்களின் ஆரோக்கியத்தில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் நிபுணர்கள் இதை பின்பற்றுங்களேன். உங்கள் தந்தை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்.
நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களில் பழமையும், நாகரீமமும் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர். பெரும்பாலான தந்தையர்களுக்கு நாகரீகமான வாழ்க்கை முறை பிடிக்காமல் போகலாம். இதனால் சிக்கல்கள் எழும். எனவே தந்தையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
தன்னுடைய குழந்தைகள் தன்னுடன் சரியாக பேசாமல் இருக்கின்றனரே என்றுதான் பெரும்பாலான தந்தையர் கவலைப்படுகின்றனர். கிரிக்கெட் முதல் பங்குச்சந்தை வரை தந்தையரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதுவே தந்தையின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நாம் குழந்தையாக இருக்கும் போது நமக்கு பாக்கெட் மணி கொடுத்திருப்பார்கள். அதுபோல இப்போது வயதான தந்தைக்கு நாம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அது அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும். என்னதான் பிஸி என்றாலும் மாதம் ஒருமுறையாவது சினிமா, பார்க் என்று எங்காவது அப்பாவை வெளியே அழைத்துச் செல்லலாம்.
தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் பச்சை காய்கறிகளை வாங்கி சத்து மாறாமல் அவர்களுக்கு சமைத்து உண்ணக்கொடுங்கள். அவ்வப்போது அவரை ஹெல்த் செக் அப் செய்ய அழைத்துச்செல்லுங்கள்.
ஆன்மிகப் பயணம் கூட ஆரோக்கியத்தோடு தொடர்புடையதுதான். எனவே அவருக்கு பிடித்தமான கோவிலுக்கு அனுப்பிவையுங்கள். தந்தையர் தினத்திற்கு என்று தனியாக நாளை செலவழிக்க வேண்டாம்என்னதால் தலைபோகிற காரியம் என்றாலும் தினசரி பத்து நிமிடங்கள் வயதான தாய் தந்தையர்களுக்கு செலவழியுங்கள் அதுவே அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications