For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோபம் இல்லாத மனைவி தேவையா?-இதோ சில டிப்ஸ்!

|

Couples
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் 'மூடு அவுட்'டாக வாய்ப்பு அதிகம்.

4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

Read more about: romance tips மனைவி wife
English summary

Tips to keep your wife cool | கோபம் இல்லாத மனைவி தேவையா?-இதோ சில டிப்ஸ்!

Angry and stress will kill the relationships. Here are some tips to keep your wife cool.
Story first published: Tuesday, February 28, 2012, 8:11 [IST]
Desktop Bottom Promotion