Latest Updates
-
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 04-ல் நிகழும் சுக்கிரன்-கேது சேர்க்கை இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம் -
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க
கோதுமை மாவைக் கொண்டு பிட்சா செய்வது எப்படி?
உங்களுக்கு வீட்டிலேயே கோதுமை மாவைக் கொண்டு எப்படி வெஜ் பிட்சா தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த வெஜ் பிட்சாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகளின் விருப்பமான உணவாக பிட்சா உள்ளது. இந்த பிட்சாவை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் நல்லது. பெரும்பாலானோர் பிட்சாவை ஆரோக்கியமற்ற உணவாக கருதலாம். ஆனால் ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு சுத்தமான முறையில் தயாரித்தால், எந்த ஒரு உணவும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. அதுவும் கடைகளில் விற்கப்படும் பிட்சாக்களின் பேஸ்கள், மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படுபவை என்பதால், கடைகளில் விற்கப்படும் பிட்சா ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. அதுவே நீங்கள் வீட்டில் பிட்சா செய்தால், கோதுமை மாவைக் கொண்டு பிட்சா பேஸ் தயாரிக்கலாம். மேலும் குழந்தைகள் விரும்பும் டாப்பிங்ஸை சேர்த்து கொடுக்கலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே கோதுமை மாவைக் கொண்டு எப்படி வெஜ் பிட்சா தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த வெஜ் பிட்சாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிட்சா பேஸ் தயாரிப்பதற்கு...
* கோதுமை மாவு - 3 கப்
* ட்ரை ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 2 டீஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் - 1 கப்
* ஆலிவ் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
டாப்பிங்ஸ்...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* மொசரெல்லா சீஸ் - 2 கப் (துருவியது)
* பிட்சா சாஸ் - 1 கப்
* ஆரிகனோ - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிட்சா பேஸ் தயாரிப்பதற்கு, ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து, ஈஸ்ட் நீரை ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு ஈரத் துணியால் மூடி 1-2 மணிநேரம் ஊற வைத்தால், மாவானது இருமடங்கு உப்பியிருக்கும்.
* பின்பு ஓவனை 220 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி கட்டை அல்லது ஒரு தட்டை கவிழ்த்து, அதன் மேல் எண்ணெயை தடவி ஒரு பகுதி மாவை தட்டையான பரப்ப வேண்டும். அப்படி பரப்பும் போது மாவின் முனைப்பகுதியானது நடுப்பகுதியை விட சற்று தடிமனாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பின்பு ஓவனில் வைக்கும் படியான ஒரு இரும்பு பேனை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி, தயாரித்து வைத்துள்ள பிட்சா பேஸை பேனில் போட்டு, அதன் மேல் பிட்சா சாஸை ஊற்றி, சீராக பரப்பி விட வேண்டும்.
* பிறகு அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை தூவ வேண்டும்.
* அடுத்து அந்த இரும்பு பேனை ஓவனில் வைத்து, 10-12 நிமிடம் வைத்து, பின் ஓவனில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.
* பின்னர் அதன் மேல் துருவிய சீஸை தூவி, அதன் மேல் வேண்டுமானால் ஆலிவ் பழங்களைத் தூவி, சிறிது ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றி, மீண்டும் ஓவனில் வைத்து, க்ரில் மோடில் வைத்து, 2 நிமிடம் வைத்து வெளியே எடுக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேலே சிறிது ஆரிகனோவைத் தூவி, பேனில் இருந்து பிட்சாவை எடுத்து துண்டுகளாக்கினால், சுவையான கோதுமை வெஜ் பிட்சா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications