Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
வெள்ளை பூசணிக்காய் இருந்தா.. இப்படி ஹோட்டல் ஸ்டைலில் கூட்டு செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..
Hotel Style Poosanikkai Kootu Recipe: வெள்ளைப் பூசணிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பூசணியைக் கொண்டு சாம்பார் செய்தால் அருமையாக இருக்கும். அதே சமயம் அந்த வெள்ளை பூசணியைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் கூட்டு செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் வெள்ளை பூசணியை சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இப்படி கூட்டு செய்து கொடுங்கள். இதனால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூசணிக்காய் கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பூசணிக்காய் கூட்டு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பூசணிக்காய் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் பூசணிக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 1 பல்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை பூசணி - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். அதேப் போல் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவி சேர்த்து,
அத்துடன் 1 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் 1 பல் பூண்டு
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்த கடலைப்
பருப்பை சேர்த்து, அத்துடன் துண்டுகளாக்கப்பட்ட பூசணிக்காயை சேர்த்து,
காய் மூழ்கும் அளவு நீரை ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து காயை
நன்கு வேக வைக்க வேண்டும்.
* காய் வேகும் வரை, மிக்சர் ஜாரில் வரமிளகாய், சீரகம், தேங்காய்
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், அதில் தக்காளி, 1 டீஸ்பூன் உப்பு, அரைத்து
வைத்துள்ள தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பை
மசித்து சேர்த்து கிளறி, பெருங்காயத் தூள் தூவி 5 நிமிடம் மிதமான
தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை
மற்றும் சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், அதை கொதித்துக் கொண்டிருக்கும் கூட்டுடன்
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை பூசணி
கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











