Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒயிட் சாஸ் பாஸ்தாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Creamy And Cheesy White Pasta Recipe In Tamil: நைட் உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது சமைத்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பாஸ்தா பிடிக்குமா? இதுவரை கடைகளில் தான் பாஸ்தா வாங்கி கொடுத்திருக்கிறீர்களா?
அப்படியானால் இன்று அந்த பாஸ்தாவை வீட்டில் செய்து கொடுங்கள். அதுவும் ஒயிட் சாஸ் பாஸ்தாவை செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா நன்கு க்ரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஒயிட் சாஸ் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாஸ்தா - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* சிறிய குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பேபி கார்ன் - சிறிது
* உப்பு - சிறிது
ஒயிட் சாஸிற்கு...
* வெண்ணெய் - 4 டீஸ்பூன்
* மைதா - 3 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* ஆரிகனோ - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து நன்கு 10 நிமிடம் வேக
வைத்து, இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை
அலசிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், பேபி கார்ன்மற்றும்
சிறிது உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், மைதாவை சேர்த்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் காய்ச்சிய பாலில் முதலில் 2 கப்பை ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் மீதமுள்ள பாலை ஊற்றி கிளறி, சாஸ் போன்று வரும் வரை கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, அத்துடன் வதக்கி
வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி இறக்கினால்,
சுவையான ஒயிட் பாஸ்தா தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications