Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவும், 1 வெங்காயமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க...
Wheat Onion Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுவென்று சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? இப்படியான சூழ்நிலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பஜ்ஜி, வடை, போண்டா, பக்கோடா என்று தான் செய்து கொடுப்பீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் கடலை மாவு தீர்ந்துவிட்டதா? கோதுமை மாவு மட்டும் தான் உள்ளதா?
அப்படியானால் அந்த கோதுமை மாவையும், வெங்காயத்தையும் கொண்டு பக்கோடா செய்து கொடுங்கள். இந்த பக்கோடாவிற்கு 1 வெங்காயம் என்றால் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு என்ற வீதத்தில் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பக்கோடா சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, நன்கு மொறுமொறுவென்றும் இருக்கும். முக்கியமாக இந்த பக்கோடா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை மாவு வெங்காய பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு வெங்காய பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 ஸ்பூன்
* இஞ்சி - 2 துண்டு
* பூண்டு - 10 பல்
பக்கோடாவிற்கு...
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய
வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் நன்கு சூடான எண்ணெய் ஊற்றி, பின் சிறிது நீரை
தெளித்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள வெங்காய கலவையை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் உதிர்த்து விட வேண்டும்.
* வெங்காயமானது நன்கு பொன்னிறமானதும், அதை எடுத்தால், சுவையான கோதுமை
மாவு வெங்காய பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications











