1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல பசங்களுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Wheat Flour Snacks Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் பசங்களோட பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸாக இல்லாமல், சற்று வித்தியாசமான சுவையுடைய ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் 1 கப் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு அருமையான சுவையில் சுரோஸ் செய்து கொடுங்கள். பொதுவாக சுரோஸை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் கோதுமை மாவில் செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Wheat Flour Snacks How To Make a Churros Using Wheat Flour

உங்களுக்கு சுரோஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* பட்டைத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரே சூடேற்ற வேண்டும்.
* நீர் சூடானதும், அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கோதுமை மாவை சேர்த்து, மாவு ஒன்று சேரும் வரை கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் பாத்திரத்தின் சூட்டிலேயே கரண்டியால் நன்கு மாவை கிளறி விட வேண்டும்.
* மாவானது நன்கு குளிர்ந்த பின், ஒரு பைபிங் பேக் அல்லது பால் கவரை எடுத்து, அதன் முனைகளை கத்திரியால் கட் செய்ய வேண்டும்.
* அதன் பின் பிசைந்து வைத்துள்ள மாவை பைபிங் பேக் அல்லது பால் கவர் உள்ளே வைத்து, நீள நீளத் துண்டுகளாக ஒரு தட்டில் பிழிந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள துண்டுகளை சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை எடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ப்ரை செய்து வைத்துள்ளதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சர்க்கரையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து, அத்துடன் பட்டை தூளை சலித்து சேர்த்து கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள சுரோஸ் மேல் தூவி பரிமாறினால், சுவையான சுரோஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, June 30, 2025, 17:37 [IST]
Desktop Bottom Promotion