Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
கோதுமை போண்டா
இதுவரை போண்டா என்றால் கடலை மாவைப் பயன்படுத்தி தான் செய்திருப்போம். ஆனால் கோதுமை மாவைக் கொண்டு போண்டா செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் இந்த கோதுமை போண்டா சற்று வித்தியாசமான சுவையில், எளிதில் தயாரிக்கும் வகையில் இருக்கும்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுவும் சற்று வித்தியாசமான சுவையுடைய போண்டா செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். அதென்ன வித்தியாசமான போண்டா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இதுவரை போண்டா என்றால் கடலை மாவைப் பயன்படுத்தி தான் செய்திருப்போம். ஆனால் கோதுமை மாவைக் கொண்டு போண்டா செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் இந்த கோதுமை போண்டா சற்று வித்தியாசமான சுவையில், எளிதில் தயாரிக்கும் வகையில் இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, பேக்கிங் சோடா, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை போண்டா போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை போண்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications