Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கோதுமை இருந்தா போதும்... வெறும் 5 நிமிசத்துல சூப்பராக ஸ்னாக் செஞ்சுரலாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Wheat Bonda Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே அனைவரின் மனமும் நொறுக்குத்தீனிகளை நோக்கி திரும்பும். குறிப்பாக குழந்தைகள் மாலை நேரத்தில் நிச்சயம் ஏதாவது நொறுக்குத்தீனியை சாப்பிட விரும்புவார்கள். தற்போது விடுமுறையாக இருப்பதால் நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தே தீர வேண்டும்.
அதிக நேரம் செலவழிக்காமல் மிகவும் எளிதாக, விரைவாக குறிப்பாக சுவையாக செய்யக்கூடிய நொறுக்குத்தீனி ஒன்றை எப்படி செய்வது என்பது பற்றி இப்போது பார்க்கலாம். கோதுமை மாவில் செய்யப்படும் இந்த போண்டா செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் மாலை நேரத்தில் டீ/காபியுடன் சாப்பிடுவதற்கு மிகவும் சூப்பராகவும் இருக்கும். 5 நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய மொறுமொறுப்பான கோதுமை போண்டாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கோதுமை மாவு - 1 கப்
- பழைய தோசை மாவு - அரை கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- வேர்க்கடலை - சுவைக்கு ஏற்ப
- வறுக்க எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்துக்கொண்டு அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி வராத வகையில் நன்கு கலக்கவும்.
- அதன்பின்னர் எண்ணெய் மற்றும் தண்ணீர் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மாவு கெட்டியாக இருந்தால், மாவில் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலக்கவும், அதிக தண்ணீராக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியமானது.
- வேர்க்கடலை கூடுதல் சுவைக்காக மட்டுமே, அது இல்லாமலும் இந்த போண்டாவை செய்யலாம்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மாவை கையில் எடுத்து, சூடான எண்ணெயில் சிறிய உருண்டைகளாகப் போடவும்.
- போண்டாவின் இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, சூடான எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
- சூடான, மொறுமொறுப்பான, சுவையான கோதுமை போண்டா ரெடி. இது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி போன்ற உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாற தயாராக உள்ளது.
- மிளகாய்த்தூளுக்கு பதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து போண்டா சுட்டால் போண்டா வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
- இதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகளை நறுக்கி போடலாம், மேலும் இஞ்சியை துருவி சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications