Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கோதுமை மாவு இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 1 வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது..
Wheat Biscuit Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் பிஸ்கட் பிரியரா? நிறைய பிஸ்கட் வாங்கி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் பிஸ்கட்டை வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுவும் கோதுமை மாவும், ரவையும் இருந்தால், அருமையான சுவையில் நல்ல மொறுமொறுப்பான பிஸ்கட்டை செய்யலாம்.
ஒருமுறை இந்த கோதுமை பிஸ்கட்டை செய்தால், அதை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். ஒருமுறை இந்த பிஸ்கட்டை உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தால், அப்புறம் கடை பிஸ்கட்டை கேட்கமாட்டார்கள். உங்களைத் தான் செய்து கொடுக்க சொல்வார்கள். அந்த அளவில் இந்த கோதுமை பிஸ்கட் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை பிஸ்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை பிஸ்கட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* தேங்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/4 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/4 கப் சர்க்கரை மற்றும் 2 ஏலக்காய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் ரவை, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பவுடர், 1 டேபிள்
ஸ்பூன் எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து,
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை இரண்டாக பிரித்து, ஒரு பாதியை எடுத்து
நீளவாக்கில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் கத்தியைக் கொண்டு சம அளவில் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்
* பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் எடுத்து, செவ்வக வடிவில் அல்லது
உங்களுக்கு விருப்பமான வடிவில் தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், தட்டி வைத்துள்ள
பிஸ்கட்டுகளை சேர்த்து உடனே கரண்டியால் பிரட்டிவிடாமல், பிஸ்கட் மேலே
எழுந்து வந்ததும், திருப்பிப் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து
எடுத்தால், சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.



Click it and Unblock the Notifications