Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
1 கப் கோதுமை மாவு இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Instant Wheat Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு கோதுமை அப்பத்தை 10 நிமிடத்தில் செய்து கொடுங்கள். இந்த அப்பம் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
ஒருமுறை இப்படியான அப்பத்தை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள பெரியவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு 10 நிமிடத்தில் ஒரு ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்த நினைத்தால், இந்த கோதுமை அப்பத்தை செய்யலாம்.

உங்களுக்கு கோதுமை அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* சுடுநீர் - 3/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் கோதுமை மாவை எடுத்து,
சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் பொடித்த வெல்லத்தை எடுத்து,
அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் வெல்லம் சூடாக இருக்கும் போதே, கரைத்த வெல்லத்தை கோதுமை மாவில்
வடிகட்டி ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3/4 கப் சுடுநீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் பொடி, சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும்,
2 1/2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி, மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மாவானது இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கரண்டியில் கொஞ்சம் மாவை எடுத்து,
எண்ணெயில் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான
கோதுமை அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications