Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கோதுமை மாவு வெச்சு.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Wheat Appam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அதுவும் சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் கோதுமை மாவும், 1/2 கப் வெல்லமும் இருந்தால் போதும், அட்டகாசமான சுவையில் மொறுமொறுவென்று அப்பம் செய்து கொடுக்கலாம். இந்த அப்பம் குழந்தைகளின் பசியை விரைவில் போக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், மாலையில் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்டால் இதை சூடாக செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு கோதுமை அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 + 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சமையல் சோடா - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வெல்லத்தை எடுத்து, அத்துடன் 1/2
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், வெல்லத்தை வடிகட்டி சூடான நிலையிலேயே கோதுமை
மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் மீண்டும் 1/2 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி, இட்லி
மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூள் மற்றும் சமையல் சோடாவை சேர்த்து நன்கு
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு கரண்டி மாவை எண்ணெயில் ஊற்றி,
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications