Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு சட்னி.. இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Weight Loss Kollu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொள்ளு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடலை சிக்கென்று மாற்ற உதவும்.
எனவே டயட்டில் இருப்போருக்கு இந்த சட்னி ஒரு அருமையான வரப்பிரசாதம். இந்த கொள்ளு சட்னியை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது, உடல் வலுபெறும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இந்த சட்னியை செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கொள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 5 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கொள்ளு சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,
பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு மற்றும் வரமிளகாயை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காயம் தக்காளியை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய், புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அத்துடன் சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கொள்ளு
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications