Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியை செஞ்சு சாப்பிடுங்க..
Village Style Onion Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாள் காலையிலும் டிபனுக்கு இட்லி, தோசை செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது என்று ஒரு பெரிய வேலையாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்கள் என்றால் என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுத்து விட்டீர்களா?
இன்னும் இல்லையென்றால் இன்று இட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5- பல்
* சின்ன வெங்காயம் - 20
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தணணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வரமிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சிறிது நேரம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை அம்மிக் கல்லில் அல்லது மிக்சர் ஜாரில்
போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கிராமத்து ஸ்டைல்
வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: Raks Kitchen



Click it and Unblock the Notifications